அல்லைப்பிட்டிச் சந்திக்கும் மண்டைதீவுச் சந்திக்கும் இடையே பண்ணை வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் ஊர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இன்று புதன்கிழமை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என 16 பேர் காயமடைந்தனர்.ஊர்தியின் ரயர் வெடித்ததில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஊர்தி,வீதி எல்லைக் கற்களை உடைத்துக் கொண்டு கடலில் பாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றது. இந்த ஊர்தியில் 45 பயணிகள் வரை பயணித்தனர் எனவும் காயமடைந்த அனைவரும் யாழ்,போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
25 மே 2016
பண்ணைக் கடலுக்குள் பாய்ந்தது பயணிகள் ஊர்தி!
அல்லைப்பிட்டிச் சந்திக்கும் மண்டைதீவுச் சந்திக்கும் இடையே பண்ணை வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் ஊர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இன்று புதன்கிழமை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என 16 பேர் காயமடைந்தனர்.ஊர்தியின் ரயர் வெடித்ததில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஊர்தி,வீதி எல்லைக் கற்களை உடைத்துக் கொண்டு கடலில் பாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றது. இந்த ஊர்தியில் 45 பயணிகள் வரை பயணித்தனர் எனவும் காயமடைந்த அனைவரும் யாழ்,போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.