ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியருடன் சேஷ்டை விட்ட மூவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஊர்காவற்றுறையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- வழமைபோன்று வீதியால் கடமைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஊழியருடன் மதுபோதையில் வந்த மூவர் சேஷ்டை விட்டுள்ளனர். இதையடுத்து உடனடியாகவே வைத்தியசாலைப் பணிப்பாளரூடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.இது தொடர்பில் அந்தப் பெண் ஊழியரை அழைத்துக்கொண்டு அவர்கள் தப்பிச்சென்ற வழியால் விரைந்த பொலிஸார், அங்குள்ள ஆலய அன்னதான மண்டபத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அவர்களை பெண் ஊழியர் அடையாளம் காட்டியதை அடுத்து கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3 போத்தல் கள்ளும் பொலிஸாரால் மீட்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
11 மே 2016
ஊர்காவற்றுறையில் பெண்ணுடன் சேஷ்டை மூவர் கைது!
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியருடன் சேஷ்டை விட்ட மூவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஊர்காவற்றுறையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- வழமைபோன்று வீதியால் கடமைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஊழியருடன் மதுபோதையில் வந்த மூவர் சேஷ்டை விட்டுள்ளனர். இதையடுத்து உடனடியாகவே வைத்தியசாலைப் பணிப்பாளரூடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.இது தொடர்பில் அந்தப் பெண் ஊழியரை அழைத்துக்கொண்டு அவர்கள் தப்பிச்சென்ற வழியால் விரைந்த பொலிஸார், அங்குள்ள ஆலய அன்னதான மண்டபத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அவர்களை பெண் ஊழியர் அடையாளம் காட்டியதை அடுத்து கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3 போத்தல் கள்ளும் பொலிஸாரால் மீட்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.