பக்கங்கள்

14 மார்ச் 2011

கிறிஸ்மஸ்தீவில் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தடுக்க அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தங்களுடைய அகதி அந்தஸ்து குறித்து ஒரு தீர்மானமும் எடுக்கப்படாமல் நீண்டகாலமாக கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் கடந்த சனி ஞாயிறு தினங்களில் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக அந்த அகதி முகாமைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வேலிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, கதவுப் பூட்டுக்களையும் சில தங்குமிடங்களையும் சிலர் சேதப்படுத்தி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இந்த ஆர்ப்பாட்டத்தை அமைதிப்படுத்த அதிகாலை 3.37 மணியளவில் தாம் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் செய்ய நேர்ந்ததாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கலவரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சனி ஞாயிறு தினங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களில் அங்கிருந்து 150 பேர் தப்பிச் சென்றிருந்தர். எனினும் அவர்களில் பலர் தாமாகவே மீண்டும் திரும்பி வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அங்கு நடைபெற்ற கலவரங்கள் குறித்தும் பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைப் பிரயோகம் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு அமைச்சர் கிறிஸ் பிறவுண் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே குழப்பத்தில் இறங்கியுள்ளனர். அது புரிந்து கொள்ளக் கூடியது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் இவ்வாறான குழப்பங்களும் அங்கிருந்து தப்பிப் போதலும் அவர்கள் விரும்புகிற முடிவை அடைய அவர்களுக்கு ஒரு போதும் உதவப் போவதில்லை என்றும அவர் தெரிவித்திருக்கிறார்.

மாணவி மர்மமான முறையில் மரணம்!

உடுவில் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. வீட்டில் தனித்திருந்த பிரஸ்தாப மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் உடுவில் மானிப்பாய் வீதியில் உள்ள உடுவில் ப.நோ. கூ. சங்கத்துக்குச் சமீபமாகவுள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் மதியம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:
கைதடி நுணாவில், சாவகச்சேரியைச் சேர்ந்த மனோகரன் கலைவாணி (வயது 17) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு மர்மமான முறையில் மரணமாகி உள்ளார் எனக் கூறப்படுகிறது.கைதடி நுணாவில், சாவகச்சேரியைச் சேர்ந்த குறித்த மாணவி தான் கல்வி பயிலும் பாடசாலைக்கு சாவகச்சேரியில் இருந்து தினமும் சென்று வருவது சிரமம் என்பதால் தாயாருடன் உடுவிலில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாணவியின் தாயார் சாவகச்சேரியில் மரண வீடொன்றுக்கு சென்ற சமயமே குறித்த மாணவி மர்மமான முறையில் மரணமாகி உள்ளார்.பின்னர் இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

13 மார்ச் 2011

மகிந்தவின் விஜயத்தால் திருமலையில் பலத்த சோதனை கெடுபிடி!

இன்று (13) திருமலையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்குபற்றும் நோக்கத்துடன் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா பயணம் மேற்கொள்ளவுள்ளதால் அங்கு அதி உச்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபை தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டியிடும் அரச தரப்பினரை உற்சாகப்படுத்தும் முகமாக மகிந்தா தேர்தல் கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகிந்தா உரையாற்றவுள்ள மக்ஹெய்சர் விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதிகளில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
திருமலைக்கு செல்லும் எல்லா வாகனங்களும் நிறுத்தப்பட்டு சல்லடையிட்டு சோதனையிடப்படுவதாக திருமலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

12 மார்ச் 2011

ஸ்ரீலங்காவில் சுயநல ராஜபக்ஸ குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது!

யுத்தத்துக்கு பின்னர் அபிவிருத்தியை நோக்கி இலங்கை பயணித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறத்தில் இராணுவ ஆட்சியைத் தழுவிய, சுயநலவாத, ராஜபக்ஷ குடும்ப ஆட்சியே காணப்படுவதாக பாக்கியசோதி சரவணமுத்து குற்றம் சுமத்தியுள்ளார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் தலைவரான பாக்கியசோதி சரவணமுத்து, ஜெனீவாவில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டின் அமர்வில் உரையாற்றும்போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்றுக்கு தொடர்பில் மனித உரிமைகளை அறிக்கைப்படுத்தும் சர்வதேச பொறிமுறை ஒன்று இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களை மறந்து எதிர்காலம் நோக்கி செல்லலாம் என அரசாங்கம் கூறுகின்ற போதும், முறையான புனர்நிர்மாண, புனர்வாழ்வளிப்பு இன்றி, கடந்த காலங்களை மறக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கையில் தற்போது பல அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவை தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களாக உள்ளதெனவும் அவர் கூறியுள்ளார். இந்த அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாமல், தன்னிச்சையாக திணிக்கப்பட்டு வருவதாகவும் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.

புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்கள் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன!

அக்கராயன்குளத்தில் வீட்டு சமையல் அறையில் புதைக்கப்பட்டிருந்த இரட்டைச் சிசுக்களின் சடலங்கள் நேற்றுத் தோண்டி எடுக்கப்பட்டன. கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் இந்தச் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன், வவுனியா குற்றத்தடுப்புப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் உபாலி சாந்த ஆகியோரும் அங்கு பிரசன்ன மாகியிருந்தனர்.
பிரஸ்தாப சிசுக்களின் தாயார் கடந்த வியாழக்கிழமை சிசுக்களைப் பிரசவித்தவுடன் உயிருடன் போர்வையால் மூடிப் போர்த்தி வீட்டின் சமையல் அறையில் புதைத்தாகக் கூறப்படுகிறது. இந்த விடயம் அம்பலமாகியதை அடுத்து பொலிஸார் பிரஸ்தாப பெண்ணை விசாரணைக்கு உட்படுத்தினர்.
அந்தப் பகுதிக் கிராம சேவையாளர், சுகாதாரத் தொண்டர்கள் குறித்த பெண்ணை விசாரித்தபோது உண்மைநிலை தெரியவரவே, அவரது வீட்டில் சோதனை செய்தபோது சிசுக்களைப் புதைத்த விடயம் வெளிவந்தது.
இதையடுத்து நேற்று சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணை மேற்கொண்டு இரு சிசுக்களும் மீட்கப்பட்டன.
பிரஸ்தாப பெண் இரத்தப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறு உத்தரவிட்ட நீதிவான் அவரை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார். பிரஸ்தாப பெண் யாழ்.ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

11 மார்ச் 2011

முதலிரவுடன் மாயமான ஊர்காவற்றுறை மாப்பிள்ளை!

திருமணத்திற்கு முன்னர் மணப்பெண்ணுடன் முதலிரவை முடித்து விட்டு திருமணத்தன்று மாப்பிள்ளை மாயமாக மறைந்து போனார்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அராலிப் பகுதியில்இடம் பெற்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இம்மாப்பிள்ளை ஊர்காவற்றுறையை சேர்ந்தவர் இவர் அராலியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து தொழில் நிமித்தம் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்து வந்த வேளை அங்கிருந்த இளம் பெண்ணொருவருக்கு கடலை போட்டிருக்கின்றார்.
பின்னர் பெண்ணின் தாயை மெதுவாக மடக்கி தானும் அவரது மகளும் ஒருவரையொருவர் நேசிப்பதாகவும் குறித்த பெண்ணுக்கும் விருப்பம் என்று பொய் கூறியதுடன் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்து திருமண ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுள்ளார்.
இதனை அறிந்த பெண் தான் அவரை விரும்ப வில்லையென்று தாயிடம் தெரிவித்ததுடன், அப் பெண் உண்மையில் விரும்பியவருடன் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஏமாற்றமடைந்தவர் பெண்ணின் தாயிடம் திருமணம் என்று ஒன்று செய்தால் உங்களுடைய குடும்பத்தில்தான் திருமணம் என்று வீரவசனங்கள் பேசி அவர்கள் அனைவரை மயக்கியுள்ளார்.
வீரவசனத்தில் மயங்கியவர்கள் மானிப்பாயில் தந்தையிழந்த நிலையில் வசித்து வந்த தங்களுடைய உறவினரான பெண்ணொருவருக்கு அவரை திருமணம் செய்து வைக்க உரிய செயற்பாடுகளை மேற்கொண்டனர்.
இப்போது பதிவுத்திருமணமே செய்ய விரும்புவதாகவும் வெளிநாடு சென்று திரும்பிய பின்னர் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பதிவுத்திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கு முதல் நாளே அப்பெண்ணுடன் முதலிரவை முடித்துக்கொண்ட இவர் அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் பறந்து சென்று விட்டார்.
இந்நிலையில் செய்வதறியாத பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தவர்கள் கண் கலங்கிய நிலையில் மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.

த.தே.கூ.உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்!

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவர் இல்லாத நேரம் அவருடைய வீட்டிற்குச் சென்ற பத்துப்பேர் அடங்கிய அடையாளம் தெரியாத குழுவினரே இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். அவர்களுடன் வாய்த்தர்க்கம் புரிந்த அவரது மனைவியையும் அவர்கள் கழுத்தைப் பிடித்து நெரித்து அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சமயபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் முக்கியஸ்தரும், வர்த்தகப் பிரமுகருமாகிய எஸ்.செல்லத்துரை என்பவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகராகிய செல்லத்துரை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வெளியில் சென்றிருந்தபோது, அவரது வீட்டிற்கு வான் ஒன்றில் சென்ற பத்துப்பேரில் ஆறுபேர் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரைத் தேடியுள்ளனர்.
அவர் வீட்டில் இல்லாதிருந்ததையடுத்து, அவரது மனைவியிடம், அவரைக் கவனமாக இருக்குமாறும். தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இவ்வாறு எச்சரிக்கை செய்வதற்கு வந்திருப்பவர்கள் யார் எனக் கேட்டு, அவரது மனைவி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதையடுத்து, தாங்கள் அமைச்சரின் ஆட்கள், அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு அவரைக் கொலை செய்யுமாறுதான் உத்தரவு. நீ என்ன வாய் காட்டுகிறாய் எனக் கேட்டு அந்தப் பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார்கள்.
இந்தச் சம்பவத்தையடுத்து. அயலில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவரவே, வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி தப்பிச் சென்றுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்ததையடுத்து, அவரது வீட்டுக்குப் பொலிசார் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

லண்டனுக்கு புறப்பட்ட சுழிபுரம் இளைஞரை காணவில்லை!

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் சென்று விட்டு மீண்டும் லண்டன் செல்வதற்காக புறப்பட்ட இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழிபுரம் தொள்புரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தெய்வேந்திரம் குவைத் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருக்கின்றார்.
லண்டனில் வசித்து வருகின்ற இவர் கடந்த 1ம் திகதி பண்டாரநாயக்கா விமான நிலையம் ஊடாக கொழும்பை சென்றடைந்திருந்தார். 3ம் திகதி யாழ்ப்பாணம் தொல்புரத்திலுள்ள தனது குடும்பத்துடன் இணைந்திருந்தார். பின்னர் நேற்று முன் தினம் இவர் கொழும்பிற்கென புறப்பட்டுச் சென்றதாகவும் எனினும் நேற்று மாலை வரை அவர் கொழும்பை சென்றடையவில்லை எனவும் இவருடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது கைத்தொலைபேசி செயலிழந்து காணப்படுவதாகவும் கைத் தொலைபேசிக்கு அழைப்புகள் விடுக்கப்பட்ட போதும் பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இன்றிரவு குடும்பத்தினர் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர். லண்டனில் சென்று ஒருவாரம் தங்கியிருந்த நிலையில் மீண்டும் 15ம் திகதி லண்டன் திரும்புவதற்காக இவர் விமானப் பயணச் சீட்டும் பெற்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவத்தையில் துப்பாக்கி சூடு!பொலிஸ் காயம்.

பொலிஸ் வாகனமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடவத்தை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடவத்தை – மாவரங்மண்டிய பிரதேசத்தில் சந்தேக நபரொருவரை கைது செய்ய சென்ற வேளையிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் போது பொலிஸ் வாகனத்தில் மூவர் இருந்ததாகவும், அதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10 மார்ச் 2011

பூமிக்கு அருகில் நிலா வருகிறது!

பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, வரும் 19ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது.
பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது.
அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. இப்படிப்பட்ட நிலைதான் வரும் 19ஆம் தேதி, சனிக்கிழமை ஏற்படுகிறது. அன்றைக்கு நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்று பூமியில் இருந்த அதனை நாம் காணும் தூரம் 2,21,567 மைல்களாக, அதாவது 3,54,507.2 கி.மீ. தூரத்திற்கு வருகிறது. இதனால் நிலவு மிகப் பெரியதாக தெரியும்.
இப்படிப்பட்ட குறைந்த தூரத்திற்கு நிலவு வருவது ஒவ்வொரு ஆண்டும் நிகழவில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் நெருக்கமாக நிலவு வந்தது. அதன் பிறகு ஆறே ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக வருகிறது.
அன்று வானத்தில் மேக மூட்டம் ஏதுமில்லாமல் இருந்தால் நீங்கள் அழகிய நிலவை மிக அருகில் நின்று பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கலாம்.
மேட்டர் இத்துடன் முடிந்துவிடவில்லை! நிலவு இப்படி பூமியை நெருங்கி வருவதால் கடல் பொங்கும் (எல்லா பெளர்ணமி, அமாவாசை தினங்களிலும்தான் பொங்குகிறது), நில நடுக்கம் ஏற்படும், எரிமலைகள் வெடித்துச் சீரும் என்றெல்லாம் எக்கச்சக்க புரளிகளும் பரவி வருகின்றன. ஆனால் இதையெல்லாம் அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். அன்றைக்கு கடலில் எழும் அலைகள் அதிகமாக இருக்கும் என்று மட்டும் கூறியுள்ளனர்.

தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலைப்படுகிறது!

சிறீலங்காவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலை முன்னிட்டு அங்கு வன்முறைகள் அதிகரித்து வருவதால் ஐரோப்பிய ஒன்றியம் கவலை அடைந்துள்ளதாக சிறீலங்கா மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகம் நேற்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைகள் உக்கிரமடைந்துள்ளன. அங்கு இருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர். நியாயமானதும், சுயாதீனமானதுமான தேர்தல் நடைபெறுவதற்கு அமைதியான சூழ்நிலை அவசியம்.
எனவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், வேட்பாளர்களும் அமைதியான முறையில் செயற்ப்பட வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 மார்ச் 2011

தமிழ் மக்களை அடிமைப்படுத்தவே தேசிய பாதுகாப்பு சட்டம்!

இலங்கையில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பன ஜனநாயகத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் பயமுறுத்தவும் மற்றும் தண்டனை வழங்கவும் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாது இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானவர்களை விடுதலை செய்யுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருசிலர் இரகிசியமான இடங்களில் வைத்து தாக்கித் துன்புறுத்தப்பட்டோ அல்லது அவர் உயிரிழந்தோ இருக்கலாம என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் கிடைக்கப்பெற்ற உத்தியோபூர்வ அறிக்கைகளின்படி 1900க்கு மேற்பட்டவர்கள் எதுவித நீதிமன்ற விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பன ஜனநாயகத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் பயமுறுத்தவும் மற்றும் தண்டனை வழங்கவும் பயன்படுத்தப்படுவதாக ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபல்யமான ஒருசில ஊடகவியலாளர்களும்கூட தீவிரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தீவிரவாதிகளாக சந்தேகப்படுபவர்களின் உடமைகளை சீல் வைக்கவும், பரிசோதனை செய்யவும், அவர்களை தடுத்துவைக்கவும் பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸாருக்கு ஆணையின்றி செயற்படும் அதிகாரம் இலங்கைச் சட்டத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எழில் என அறியப்படும் நபரொருவர் 10 வருடங்கள் விசாரணை ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலண்டனை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பன ஜனநாயகத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் பயமுறுத்தவும் மற்றும் தண்டனை வழங்கவும் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாது இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானவர்களை விடுதலை செய்யுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருசிலர் இரகிசியமான இடங்களில் வைத்து தாக்கித் துன்புறுத்தப்பட்டோ அல்லது அவர் உயிரிழந்தோ இருக்கலாம என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் கிடைக்கப்பெற்ற உத்தியோபூர்வ அறிக்கைகளின்படி 1900க்கு மேற்பட்டவர்கள் எதுவித நீதிமன்ற விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பன ஜனநாயகத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் பயமுறுத்தவும் மற்றும் தண்டனை வழங்கவும் பயன்படுத்தப்படுவதாக ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபல்யமான ஒருசில ஊடகவியலாளர்களும்கூட தீவிரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தீவிரவாதிகளாக சந்தேகப்படுபவர்களின் உடமைகளை சீல் வைக்கவும், பரிசோதனை செய்யவும், அவர்களை தடுத்துவைக்கவும் பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸாருக்கு ஆணையின்றி செயற்படும் அதிகாரம் இலங்கைச் சட்டத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எழில் என அறியப்படும் நபரொருவர் 10 வருடங்கள் விசாரணை ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலண்டனை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள்ளார்.

08 மார்ச் 2011

மகிந்த பயணித்த உலங்கு வானூர்தியில் கோளாறு!

இன்று மாலை மஹிந்த ராஜபக்ஷ பயணித்த ஹெலிகொப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, அவசரமாகத் தரையிறக்க நோ்ந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இன்று மாலை மஹிந்த ராஜபக்ஷ மன்னாரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த ஹெலிகொப்டரில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இன்று மாலை மூன்றரை மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து ஹெலிகொப்டர் அவசர அவசரமாக பாராளுமன்றத் திடலில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அதன் பின் தனது உத்தியோகபூர்வ வாகனங்களை வரவழைத்த மகிந்த அங்கிருந்து காரிலேயே அலரிமாளிகைக்குச் சென்றுள்ளார்.
கோளாறுக்குள்ளான ஹெலிகொப்டர் இன்னும் பாராளுமன்றத் திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன், மின்மாற்றிகளை உபயோகித்து அதன் கோளாறைச் சரி செய்யும் நடவடிக்கைகள் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூடு பட்டு இளைஞர் காயம்!

யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படைச் சிப்பாயின் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளான இளைஞர் அரியரட்ணம் அருள்தாஸ் என அவரது பெற்றோர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
கடைக்குச் செல்வதாக தமது மகன் கூறிச் சென்றதாகவும் சிறிது நேரத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் தமக்கு கூறியதனை அடுத்து அங்கு சென்ற போது அருள்தாஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி காயம் அடைந்த நிலையில் வீதியில் விழுந்து கிடந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞரும் படைச் சிப்பாயும் துப்பாக்கியைப் பிடித்தவாறு இழுபறியில் இருந்ததாக அதனைப் பாரத்த சிலர் கூறியுள்ளதாக தெரியவருகிறது. எனினும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பதனை உடனடியாக அறிய முடியவில்லை.
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எழுதியபின் பரீட்சை முடிவுகளுக்காக பார்த்திருந்த 17 வயதுடைய மாணவரே அருள்தாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது.

07 மார்ச் 2011

சிறிதரன் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!

தமிழத் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரன் மீது தாக்குதலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவத்துள்ளது.
இது தொடர்பில் அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளுவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது நொச்சியாகம் பகுதியில் உள்ள உதிதாகம பகுதியில் வைத்து அவரது வாகனத்தின் மீது ஆயுததாரிகளால் கைக்குண்டுத் தாக்குதலும் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறீதரன் அவர்கள் தமிழர்களது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை என்ற கொள்கைகளில் உறுதியாக நின்று செயற்பட்டு வருகின்றார். இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகிவருவது பெளத்த சிங்கள பேரினவாத அரசுக்கு எரிச்சலை உண்டு பண்ணியுள்ளது.
அதனால் அரசியலில் இருந்து அவரை ஓரங்கட்டும் நோக்கில் சில செயற்பாடுகள் அண்மையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கொள்கையில் உறுதியாக இருக்கும் சிறீதரன் அவர்களை இல்லாமல் செய்யும் நோக்கில் அல்லது மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கிலுமே இக் கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
அரசுக்குத் தெரியாமல் இவ்வாறான ஓர் தாக்குதல் ஒருபோதும் இடம்பெற்றிருக்க முடியாது. இப்படுகொலை முயற்சிக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள படுகொலை முயற்சியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
தொடரும் கொலைகளும் இவ்வாறான படுகொலை முயற்சிகளும் தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமாயின் இதுவரை காலமும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை தொடர்பாக ஓர் சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் சர்வதேச சட்டப்படி தண்டிக்கப்படல் வேண்டும். இல்லையேல் இவ்வாறான கொலை முயற்சிகள் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எதிராக இடம்பெறுவதனை தடுக்க முடியாது.

-தமிழ் தேசிய மக்கள் முன்னணி-

வழிபாடுகளுக்கும் தடை விதிக்கும் ஸ்ரீலங்கா படைகள்!

வன்னியில் இடம்பெற்ற போரில் இடம்பெயர்ந்து தற்போதும் சிறீலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் வசிக்கும் மக்கள் மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் சிறீலங்கா அரசு அனுமதிகளை வழங்குவதில்லை என த ஏசியன் கத்தோலிக் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறீலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் இருந்த பெருமளவான மக்கள் விடுவிக்கப்பட்டபோதும், தற்போதும் அங்கு 27,000 தமிழ் மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தங்கியுள்ள மக்கள் தாம் வழிபடுவதற்கு வெளியில் செல்லவேண்டும் என விடுக்கும் கோரிக்கைகளை சிறீலங்கா பாதுகாப்பு படையினர் புறக்கணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெனிக் பாஃம் முகாமில் முன்னர் தங்கியிருந்த கத்தோலிக்க மதகுருமார் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள கத்தோலிக்க மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தேவாலயங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் மிகப்பெரும் உளவியல் அழுத்தங்களுடன் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு மத வழிபாடுகள் தான் சிறு ஆறுதலை தரும் விடயமாக இருந்துவருகின்றது. ஆனால் சிறீலங்கா படையினர் தற்போது அதனையும் தடுத்து வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06 மார்ச் 2011

முகமாலையில் சோதனைச்சாவடி!

யாழ்ப்பாணத்திற்கு வருவோர், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவோரை சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்துவதற்காக முகமாலையில் சோதனை நிலையம் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
போர் நிறுத்த காலப் பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுவோரும் உள்ளே வருவோரும் முகமாலைப் பகுதியில் இராணுவத்தினரின் சோதனைக் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.
போர் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் முகமாலைப் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை. இந் நிலையில் தற்போது மீண்டும் முகமாலைப் பகுதியில் சோதனை நடவடிக்கைகளுக்கான அனைத்து நடவடிக்கைளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆண்கள் ஒரு புறமாகவும் பெண்கள் ஒருபுறமாகவும் சோதனைக் கெடுபிடிகளுக்கு உட்படுத்துவதற்கான அறிவிப்புக்கள் எழுதித் தொங்கவிடப்பட்டுள்ளதாக ஏ9 வீதியால் பயணித்த பெண்மணி ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

புலிக்கோட்டையாகவும் வவுனியாவாகவும் மாற்றியவர் முத்துக்குமார்!

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், முத்துக்குமார் படத்திறப்பு விழாவும் திலீபன் திடலில் பெரியார் திராவிட கழகத்தைலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் சீமான் பேசினார்.
அவர் பேசும்போது, ’’புதுக்கோட்டையை புலிக்கோட்டையாகவும், வடகாட்டை வவுணியாவாகவும் மாற்றியவர் முத்துக்குமார். எங்களுக்கெல்லாம் பாடமாமாக திகழ்ந்தவர் இன்று என்முன் படமாக உள்ளார்.
எவ்வளவோ கூட்டத்தில் நான் பேசியுள்ளேன் அப்போதெல்லாம் எனக்கு பாதுகாப்பாகநிற்பார் முத்துக்குமார், ஆனால் அவரது இழப்பு எங்களுக்கான பாதுகாப்பை எண்ணிப்பார்க்க தூண்டுகிறது.
தன்மீதான பற்றைவிட, தமிழினத்தின்மீது கொண்டிருந்த அளப்பெரிய பற்றுதான் எங்களை இணைத்தது. இன விடுதலைக்காக களமாடியவர்களில் ஒருவர் முத்துக்குமார். உன்னை இழந்து தவிக்கும் சோகத்தை யாரிடத்தில் சொல்லுவது என்று தெரியவில்லை.
உன் இறப்பு என்னைத் தவிக்ககவைக்கிறது, ஒரு கணம் சிந்திக்கிறேன் நானும் செத்துவிடலாமோ என்று, ஆனால் அதே மறுகணம் விடுதலைப்புலிகளின் பிரபாகரன் சொன்னதை நினைவூட்டுகிறேன், இனத்தின் உயிர்கள் சடலத்தை என் கையில்
தவளவிட்டுருப்பேன், அதுதான் என்னை தமிழினத்தின் மீது பற்றையும், துணிவையும் கொடுத்திருப்பதாக நான் எண்ணுகிறேன் என்பதை.
அதையே பின்பற்றுகிறேன், வஞ்சம் வைத்து முத்துக்குமாரைப்பறித்தவர்களை வஞ்சம் தீர்ப்பேன். இதுதான் தமிழீழ விடுதலைக்கான அடித்தளம்.
இதுதான் காலத்தின் கட்டாயம். என் இனத்தின்மீது இனி எவனும் கைவைக்க அஞ்ச வேண்டும். இதுதான் எங்களின் லட்சியம்திமுக தலைவர் கலைஞர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் காவல்துறையை நம்பினோம்.
நான் என்ன செய்தேன் கொள்ளை அடித்தேனா, கொலை செய்தேனா, இல்லை ரூ. 1.76 ஆயிரம் கோடியை உங்களைப் போல் நான் திருடினேனா. இதைத்தானே நான் எதிர்த்தேன். ஒரு மரணம் தேசத்துரோகம் என்றால், ராஜீவ்காந்தியால் எம் இனமே அழிந்துகொண்டிருக்கிறதே அது தேசத் துரோகம் இல்லையா.
காந்தியை தந்தை என்றும், நேருவை மாமா என்றும், சோனியாவை அன்னை என்றும் அழைக்கலாம். ஆனால், பிரபாகரனை அண்ணன் என்றால் என்மீது வழக்கு’’என்று தெரிவித்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் நூறு ஏக்கர் கே,பி,க்கு அன்பளிப்பு!

சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் விடுதலைப்புலகளின் முன்னாள் உறுப்பினர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பிக்கு வன்னியில் 100 ஏக்கர் நிலத்தை சிறீலங்கா அரசு வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டுவரும் குமரன் பத்மநாதன் அமைத்துள்ள அரசசார்பற்ற நிறுவத்தின் தேவைகளுக்காக சிறீலங்கா அரசு வன்னியில் 100 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக கே.பி யாழ்ப்பாணத்திற்கும், வன்னிக்கும் அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகின்றார். வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளர்களைக்கொண்டு ஒரு கட்சியை அமைக்கவும் பத்தமநாதன் முயன்று வருகின்றார்.
தடுப்புக்காவலில் உள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதற்கு உதவுவதாக கே.பி மக்களிடம் தெரிவித்து வருகின்றார். ஆனால் அதனை அவர் இன்றுவரை மேற்கொள்ளவில்லை.
வடபகுதியின் எந்தப் பகுதிக்கும் கே.பி சென்றுவரமுடிகின்றது. ஆனால் ஏனைய எதிர்க்கட்சிகளுக்கு அரசு தடைவித்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

05 மார்ச் 2011

காங்கிரசிலிருந்து தி,மு,க,விலகல் திருமா வரவேற்பு.

திமுகவின் முடிவை வரவேற்பதாகவும், வரும் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மத்திய அரசில் இருந்து திமுக விலகுகிறது என்றும், மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில் இனி ஆதரவு அளிக்கும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முடிவடைந்த பிறகு, திமுக தலைவர் கருணாநிதியை, விடுதலைச்
சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் முடிவு கூட்டணியை வலுவிழக்கச் செய்யாது. இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

இந்தோனேசியா அகதி அந்தஸ்து வழங்குகிறது!

கடந்த 2009 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசியா கடற்பரப்பில் வைத்து இந்தோனேசியா அரசினால் தடுத்துநிறுத்தப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு அகதித்தஞ்சம் வழங்க இந்தனோசியா அரசு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடந்த 2009 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசியா கடற்பரப்பில் வைத்து 254 ஈழத்தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியா பிரதமர் கெவின் றுட்டின் வேண்டுகோளுக்கு இணைங்கவே அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் இந்தோனியாவின் பின்ரன் தீவில் உள்ள தன்ஞங் பினங் தடைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு அடைக்கலம் வழங்க தற்போது இந்தோனேசியா முன்வந்துள்ளது.
முதற்கட்டமாக 10 பேர் அகதித்தஞ்சம் வழங்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளதுடன், ஏனையவர்களும் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக நிமல் நிமலகரன் என்பவர் தடுப்பு முகாமில் இருந்து தெரிவித்துள்ளார். நிமலன் எதிர்வரும் வாரம் விடுவிக்கப்படவுள்ளார்.

04 மார்ச் 2011

சிங்கம் சிறையில்,ஆந்தை பணத்தில்,குமுறுகிறார் தயாசிறி!

புதிதாக அச்சிடப்பட்டுள்ள நாணயத் தாள்களில் சிங்கம் காணப்படாமைக்கான காரணம் சிங்கம் சிறையில் இருப்பதாகுமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார்.
சிங்கத்தை நாணயத் தாளில் மீண்டும் சேர்க்க வேண்டுமாயின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டுமென குருநாகல் பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், இன்று அரசாங்கம் 10 ரூபா, 100 ரூபா, 500 ரூபா 1000 ரூபா நாணயத் தாள்களை அச்சிடுகின்றது. அதில் முன்னர் எங்களுடைய அபிமானமிக்க சிங்கம் இருந்தது. இம்முறை சிங்கம் இல்லை. சிங்கத்தை களட்டிவிட்டனர். ஏன்?
சிங்கம் சிறையில் உள்ளது. எங்களுடைய சிங்கம். இந்த நாட்டை மீட்டெடுத்த சிங்கம் சிறையில் உள்ளது. சிறையில் வைத்துவிட்டு நாணயத் தாள்களில் சிங்கத்தை அச்சிட முடியாதென அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. அதனால் நாணயத் தாள்களில் ஆந்தையை அச்சிட்டுள்ளனர். சிங்கம் அங்கே உள்ளது. ஆந்தை இங்கே உள்ளது.
நாட்டை மீட்க வேண்டுமாயின், நாணயத் தாளில் ஆந்தையை களட்டி சிங்கத்தை அச்சிட வேண்டுமாயின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்”. என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் முன்னாள் கடற்படை தளபதியை தூதராக ஏற்கக்கூடாது!

பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. இந்த முடிவை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அவுஸ்திரேலியாவின் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மோர்பி நேற்று (03) தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கன்பராவின் தூதுவராக சிறீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சமரசிங்காவை நியமிப்பது வருத்தம் தருகின்றது.
நான் இங்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன். அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். அதன் மூலம் எனது வருத்தத்தை தெரிவிக்கின்றேன்.
நாம் எல்லோரும் ஒன்றை கவனிக்கவேண்டும். அதாவது சிறீலங்கா கடற்படையின் தளபதியாக இருந்த சமரசிங்காவின் காலத்தில் தான் வன்னியின் கடற்கரையோரம் தஞ்சமடைந்த மக்கள் மீது கப்பல்களில் இருந்து கண்மூடித்தனமாக பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இவ்வாறான மனிதரை எவ்வாறு எமது நாட்டில் தூதுவராக நியமிக்கலாம். ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிநிதி பாலித கோகன்னா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவுஸ்திரேலியா அரசு சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவுஸ்திரேலியாவின் இரட்டைக் குடியுரிமை கொண்ட இவர் சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் படுகொலைகளுடன் தொடர்புள்ளவர் என கருதப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பலரை சிறீலங்கா படையினர் படுகொலை செய்திருந்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

03 மார்ச் 2011

அழகிகளுடன் உல்லாஷப் புகைப்படம்!

அமெரிக்காவுக்கான கவுன்சிலர் ஜெனரல் அழகிகளுடன் நிற்கும் புகைப்படம் வெளியானதால் பெரும் சர்ச்சைக்குள் மாட்டியுள்ளார். அமெரிக்க லொசேஞ்சல்சில் வசித்துவரும் இலங்கைத் தூதுவராலய கவுன்சிலர் ஜெனரல், ஜெவ் குணவர்த்தன இதற்கு முன்னரும் சில சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவோடு காசு கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டது முதல் மகிந்த அமெரிக்கா சென்றவேளை அங்குள்ள நிலையை ஆராயாமல் அவரை வரவேற்றார் என்பது முதல் பல முறைப்பாடுகள் அவர்மேல் இருந்தது. இதனை விட தற்போது இவர் அழகிகளோடு நின்று எடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இதனால் கடும் சீற்றமடைந்த ஜனாதிபதி அவரை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளாராம் என உத்தியோக பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உள்ளூர் விழா ஒன்றில் கலந்துகொண்டபோதே இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரின் இடத்தை நிரப்ப ஜாலியா விகிரமசூரிய நியமிக்கப்படவுள்ளதாக அரசல் புரசலாகச் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது. அமெரிக்க அரசாங்கத்துக்கு அறிவிக்க முன்னரே இவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும், புது நியமனம் குறித்து இலங்கை அமெரிக்காவுக்கு அறிவித்தலை அனுப்ப உள்ளதாகவும் கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

டக்ளசின் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு!

தமிழகத்தில் கொலை செய்துவிட்டு இலங்கைக்குத் தப்பி ஓடி அங்கு தற்போது அமைச்சராக உள்ள துணை இராணுவக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிராகரிது விட்டது.
இலங்கையைச் சேர்ந்த துணை இராணுவக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தற்போது ராஜபக்சே அரசில் அமைச்சராக இருக்கிறார். இவர் கடந்த 1986ம் ஆண்டு சென்னையில் தஞ்சம் புகுந்து தங்கியிருந்தபோது சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரைக் கொலை செய்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
பின்னர் தேவானந்தா இலங்கைக்குத் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளி என்று 1994ம் ஆண்டு சென்னை கோர்ட் அறிவித்தது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராஜபக்சேவுடன் ஜோடியாக டெல்லிக்கு வந்திருந்தார் டக்ளஸ். பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து கை குலுக்கி வரவேற்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேடப்படும் குற்றவாளியை பிரதமர் மன்மோகன்சிங் இப்படியா வரவேற்பது என்று கண்டனங்கள் எழுந்தன. டக்ளஸை கைது செய்யவும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து ராஜபக்சேவுடன் சேர்ந்து படு பத்திரமாக இருந்து பின்னர் இலங்கைக்குப் போய் விட்டார் டக்ளஸ்.
இந்த நிலையில், தனது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரியும், முன்ஜாமீன் அளிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் டக்ளஸ். இந்த இரு கோரிக்கைகளையும் இன்று உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
உரிய நீதிமன்றத்தில் டக்ளஸ் நேரில் ஆஜராகி முன்ஜாமீன் பெறலாம். அவரது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து அதுவரை நீக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறி விட்டது.
இதனிடையே, தமிழக மீனவர்கள் மீது தேவனந்தாவின் ஈ.பி.டி.பி துணை இராணுவக்குழுவினரே சிறீலங்கா கடற்படையினருடன் இணைந்து தாக்குதல்களை நடத்திவருவதாகவும், தமிழக மீனவர்களுக்கு எதிராக யாழ் மீனவர்களில் சிலரை தூண்டிவிடுவதாகவும் இந்திய அரசுக்கு கிடைத்துள்ள தகவல்களை தொடர்ந்தே தேவானந்தா மீது இந்தியா கடும் சினம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

02 மார்ச் 2011

கூட்டமைப்பு அரசை காப்பாற்ற முயல்கிறதா?

தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் லிபிய விவகாரம் முக்கிய இடத்தை பிடிப்பதால் சிறீலங்கா அரசு தப்பிப்பிழைக்கும் சாத்தியங்கள் உள்ளதாக பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் எஸ். வி கிருபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கனேடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தற்போதைய நிலையில் கடந்த 28 ஆம் நாள் ஆரம்பமாகிய ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 16 ஆவது அமர்வில் லிபியா தொடர்பில் தான் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.
பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டன் உட்பட பல மேற்குலக இரஜதந்திரிகள் லிபியா தொடர்பில் தான் அதிக கவனம் எடுத்துள்ளனர்.
ஆனால் உலகில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் கிளிங்டன் உறுதியாக உள்ளதை காணமுடிகின்றது.
தற்போதைய அமர்வுகளில் சிறீலங்கா தொடர்பில் கடுமையான தீர்மானம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லிபிய விவகாரம் அதனை மழுங்கடித்துவிடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.
மேலும் நேற்று முனத்தினம் உரையாற்றிய சிறீலங்கா அமைச்சர் மகிந்தா சமரசிங்கா, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இரண்டு சுற்று பேச்சுக்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அனைத்துலக சமூகத்தை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசு தான் தப்பிப்பிழைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறீலங்கா அரசை காப்பாற்றும் இந்த நிகழ்வு துன்பமானது. எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூட்டமைப்பு மேற்கொள்ளும் பேச்சுக்கள் பயனற்றவை. அது சிறீலங்கா அரசை காப்பாற்றவே வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று நொருங்கிய கிபிர்களின் பெறுமதி பதினைந்து மில்லியன் டொலர்கள்!

நேற்று (01) வானத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி அழிவை சந்தித்த சிறீலங்கா வான்படையின் இரு கிபீர் விமானங்களின் பெறுமதி 15 மில்லியன் டொலர்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று அழிவை சந்தித்த இரு விமானங்களும், வன்னியில் நடைபெற்றபேரில் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகளை அழிப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டதாக சிறீலங்கா வன்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் கொல்லப்பட்ட விமானி பிளைட் லெப்டினன்ட் எம் பெரேரா (28) அவிசாவளையை சேர்ந்தவர். அவர் 2004 ஆம் ஆண்டு சிறீலங்கா வான்படையில் விமானியாக இணைந்திருந்தார்.
இஸ்ரேல் தயாரிப்பான கிபீர் விமானங்கள் சாம் -7 மற்றும் சாம்-14 இக்லா வகையான இலகுவில் தோளில் காவிச்செல்லப்படும் சிறிய ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளின் தாக்குதல்களில் இருந்து தப்பக்கூடியவை.
வன்னியில் நடைபெற்ற போர்களில் மூன்றாவது மற்றும் நான்காவது ஈழப்போர்களில் விடுதலைப்புலிகளின் ராதா வான்காப்பு படையணி மேற்கொண்ட சாம்-14 ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து இரு தடவைகள் கிபீர் ரக விமானங்கள் தப்பியிருந்ததாக ஈழம் ஈ நியூஸ் இற்கு கருத்து வழங்கிய படைத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தாழ்வாக பறந்த கிபீர் விமானம் ஒன்று நான்காவது ஈழப்போரில் வான்காப்பு படையினரின் விமான எதிர்ப்பு பீரங்கி தாக்குதலில் சிக்கி கடுமையாக சேதமடைந்திருந்தது. அதில் இருந்து வீழந்த பாகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வீழ்ந்திருந்தன.
மேலும்; கட்டுநாயக்கா வான்படை தளம் மீதான தாக்குதலின் போது கிபீர் விமானங்கள் சேதமாக்கப்பட்டதுடன், இதற்கு முன்னரும் இரு கிபீர் விமானங்கள் வீழ்ந்து நொருங்கியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

01 மார்ச் 2011

விமானம் நொருங்கியதையும் பாராமல் தேங்காய் பொறுக்கிய மக்கள்!

இன்று காலை விமானப்படை விமானங்கள் மோதி வீழ்ந்து கிடந்த இடத்தில் சிதறிக்கிடந்த தேங்காய்களைப் பொறுக்கிக் கொள்வதற்காக விமான விபத்தையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் முண்டியடித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தின் போது ஒரு விமானம் தென்னந்தோட்டமொன்றில் வீழ்ந்து நொறுங்கியதால் ஏராளம் தென்னை மரங்கள் சேதமுற்றிருந்தன. அதன் காரணமாக தேங்காய்களும் நாலா பக்கமும் சிதறிக் கிடந்தன.
விமான விபத்தைப் பார்வையிட வந்த பொதுமக்கள் தேங்காய்களைக் கண்டதும் விமான விபத்தையே மறந்தவர்களாக சிதறிக்கிடந்த தேங்காய்களைப் பொறுக்குவதற்காக முண்டியடித்தனர். ஒருத்தரையொருத்தர் தள்ளி வீழ்த்திக் கொண்டனர்.
தேங்காய்களுக்காக சண்டையிட்டுக் கொண்ட பொதுமக்களை பொலிசாரினாலும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் குறிப்பிடுகின்றார். இலங்கையின் பொருட்களின் விலை அதிகரிப்பால் தேங்காய்களும் அதிக விலையில் விற்கப்படும் நிலை காரணமாகவே பொதுமக்கள் அவ்வாறு தேங்காய்களுக்காக மோதிக் கொண்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்த போதும் பொதுமக்கள் அவரைப் பார்ப்பதில் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் அனைத்துலக செயற்பாடுகள் தொடர்கின்றன என்கிறார் சமரசிங்க!

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய சிறீலங்கா அமைச்சர் மகிந்தா சமரசிங்கா புலம்பெயர் தமிழ் சமூகத்தை குறிவைத்து தனது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (28) அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகள் தொடர்கின்றன. நாட்டை பிரிப்பதற்கான அவர்களின் நிகழ்ச்சி நிரலும் பின்பற்றப்படுகின்றது. அண்மையில் வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 23 இடங்களில் தேடுதல்கள் நடைபெற்றிருந்தன. பல நாடுகள் தமிழ் மக்கள் மீதான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
படையினர் வசம் தற்போது 4599 தமிழ் இளைஞர்கள், யுவதிகளே உள்ளனர். 11,693 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். முகாம்களில் 12,000 மக்களே உள்ளனர். அவசரகாலச்சட்டத்தை அவதானமாகவே நீக்க முடியும். உரிய கால அட்டவணையின் அடிப்படையில் அது நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

28 பிப்ரவரி 2011

அன்னைக்கு அஞ்சலியும்,சிங்களத்துக்கு கண்டனமும்!

உலக தமிழினத்தின் தாயாக இருந்தவர் பார்வதி அம்மாள். இவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் உறவினர்களிடமும் சிகிச்சைக்காக அனுப்பாமல் வீட்டில் சிறை வைத்திருந்த இலங்கை அரசு, இப்போது அவரது இறப்பிலும் கூட மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டது.
இறுதி அஞ்சலிக்காக தமிழகத்தில் இருந்து சென்ற திருமாவளவனை கொடுங்கோல் ஆட்சி இலங்கை திருப்பி அனுப்பிய பிறகு, தாயாரின் சடலம் எரியூட்டப்பட்ட பிறகு அங்கு தெருவில் திரிந்த நாய்களை கொன்று தாயார் பார்வதியம்மாளை எரித்த இடத்தில் எரித்துள்ளனர் சிங்கள ராணுவத்தினர்.
தொடர்ந்து இதுபோல அவமரியாதை செயல்களில் ஈடுபடும் ராஜபக்சேவை கண்டித்து மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மாற்று செயலணி மற்றும் தமிழ் உணர்வாளர்களை இணைத்து கண்டன பேரணி நடத்தி ஐநா அலுவலகம் மற்றும் இலங்கை தூதரகத்தில் மனு கொடுப்பதுடன்,
பார்வதி அம்மாளுக்கான கண்ணீர் அஞ்சலி கூட்டமும், இலங்கை அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நாளை மறுநாள் 2.3.2011அன்று நடைபெறும் என்று மாற்று செயலணி தலைவர் கலைவாணர் அறிவித்துள்ளார்.

பிரிகேடியர் தமிழ்செல்வனின் தூபிக்கு பிரான்சில் கெளரவம்!

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் நினைவு சின்னத்திற்கு கட்சி சார்பின்றி பிரான்சு நாட்டு La Courneuve மாநகர் ஆட்சி அதிபர், La Courneuve நாடாளுமன்ற உறுப்பினர், பிரதேச சபை தலைவர்,
மாநகரசபை உறுப்பினர்கள் என்று பலர் இன்று தமிழ்செல்வன் நினைவு சின்னத்துக்கு மரியாதை செலுத்தியதோடு, இதுவரை காலமும் சிறிலங்கா அரசு கொடுத்த அழுத்தங்கள், பொய் பிரசாரங்களையும் மீறி இன்று அந்த நினைவு சின்னம் தமிழ்ச்செல்வனின் நிரந்தர சிரித்த முகத்துடன் கம்பீரமாக நிற்கிறது.

27 பிப்ரவரி 2011

ஊர்காவற்றுறையில் ஈ,பி,டி,பி,முக்கியஸ்தர் கைது!

யாழ். தீவகப்பகுதியிலுள்ள ஊர்காவற்துறையில் கடந்த 24 ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் உருக்குலைந்து சிதைந்த சடலம் மீட்கப்பட்டது தெடர்பாக ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பிலிருந்து வந்த விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் ஊர்காவற்துறையில் மேற்கொண்ட இரகசிய விசாரணைகளில் ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார் எனத்தெரியவருகின்றது
விசாரணைகளின் பின்பு சந்தேக நபர் நாளை திங்கள் கிழமை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

கே,பியை வைத்து சிங்களம் நடத்தும் நாடகம்!

சிறீலங்கா அரசுக்கு எதிரான மேற்குலகத்தின் போக்குகளை மாற்றியமைக்கும் பணியை சிறீலங்கா அரசு குமரன் பத்மநாதனிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்கா அரசுக்கும் – மேற்குலகத்திற்கும் இடையிலான கசப்புணர்வை நீக்கி போர்க்குற்றங்களில் இருந்து சிறீலங்கா அரசை விடுவிக்கும் பொறுப்பை சிறீலங்கா அரசு குமரன் பத்மநாதனிடம் ஒப்படைத்துள்ளது.
இது தொடர்பான கூட்டங்கள் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளன. புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவும், இராஜதந்திரிகளை சந்திப்பதற்குமான கூட்டங்களை பத்மநாதன் மூலம் சிறீலங்கா அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அரச தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்குலகத்தின் போக்குகளை மாற்றவும், சிறீலங்காவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதியை பெற்றுக்கொள்ளவும் சிறீலங்கா அரசு இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
கூட்டங்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகளில் உள்ள சிறீலங்கா தூதரகங்கள் முன்னெடுத்துள்ளன.
குமரன் பத்மநாதனின் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசின் மூத்த அமைச்சர் ஒருவரே தலைமைதாங்கவுள்ளார். அதற்கான பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. சிறீலங்கா அல்லது நடுநிலையான நாடு ஒன்றில் முக்கிய கூட்டத்தை நடத்தும் திட்டம் தொடர்பிலும் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
அதேசமயம், சிறீலங்கா அரசு மற்றும் பத்மநாதனின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக தமிழத் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறவும் சிறீலங்கா அரசு முயன்று வருவதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

ஐ,நாவின் மனித உரிமை பேரவை அமர்வுகளில் கிருபாகரன் உரைநிகழ்த்துகிறார்!

ஜெனீவாவில் நாளை (28) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைக் கவுன்சில் தொடர்பான அமர்வின் போது இலங்கைக்கெதிரான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் சந்தர்ப்பம் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இன்டர் பெய்த் இன்டர்நெஷனல் மற்றும் தமிழர் மனித உரிமைக் கவுன்சில் என்பவற்றின் தலைவரான விஸ்வலிங்கம் கிருபாகரனுக்கே அந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது. மனித உரிமைக்கவுன்சில் அமர்வின் போது அவர் இலங்கைக்கு எதிரான ஆதாரங்களை முன் வைக்கவுள்ளார்.
இச்செய்தி கேள்விப்பட்டவுடன் அவர் விடுதலைப் புலிகளின் அபிமானி என்று குற்றம் சாட்டி அரசாங்கம் அவரது குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
கனேடிய உளவுத்துறையும் அவர் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்று பட்டியலிட்டுள்ளது. அவ்வளவையும் மீறி நாளை அவர் மனித உரிமைக் கவுன்சில் பேரமர்வில் உரையாற்ற உள்ளார்.

26 பிப்ரவரி 2011

சுவிசில் தனது பிள்ளைகளையே கத்தியால் குத்திய இலங்கைத்தாய்!

சுவிற்சலாந்தின் Pratteln நகரத்தில் வசித்து வரும் இலங்கையரான 35 வயதுத் தாய் ஒருவர் தனது குழந்தைகளை கடந்த வியாழக்கிழமை காலை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி உள்ளார். பெண் பிள்ளைகளான இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகும் நேரத்தில் தகப்பனார் வீட்டில் இல்லை.வீட்டில் நின்ற அம்மம்மா பேரப் பிள்ளைகளை கத்திக் குத்தில் இருந்து காப்பாற்ற முயன்றபோது கத்திக் குத்துக்கு இலக்கானார் என தெரிவிக்கப்படுகிறது.
பின்பு அவர் தனது உடலிலும் கத்தியால் மாறி மாறிக் குத்திப் படுகாயப்படுத்திக் கொண்டுள்ளார் .
காயமடைந்த மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் ஆனால் ஆபத்துக்கள் நேரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தகராறுக்கு என்ன காரணம் என்பது இன்னமும் வெளிவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.

52,000 கையொப்பம் ஐ,நாவிடம் கையளிப்பு!

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி 52,000 மக்கள் கையொப்பமிட்டுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்பதை வலியுறுத்தி அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த மே மாதம் உலகளாவிய ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது. கடந்த 26 வருடங்களாக நடைபெற்ற போரில் இரு தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அது தெரிவித்திருந்தது.
தனது கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக மக்களிடம் இருந்து கையெழுத்துக்களையும் அது சேகரித்து வந்திருந்தது. தற்போது 52,000 கையெழுத்துக்களை சேர்ந்துள்ள நிலையில் அதனை கடந்த செவ்வாய்க்கிழமை (22) ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு ஆலோசனைக்குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (22) அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறீலங்கா விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜேலந்தா பொஸ்ரர் மற்றும் வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் ஆகியோருடன் மேலும் சிலர் ஐ.நா அலுவலகத்திற்கு சென்று பொதுமக்கள் கையொப்பமிட்ட ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு திருமலையில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரின் தந்தையே மனோகரன். தமது விண்ணப்பம் தொடர்பில் ஐ.நா விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனவும், உரிய விசாரணைக்குழு அமைக்கப்படும் வரையில் தமது நடவடிக்கை தொடரும் என அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் ஐ.நா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
அனைத்துலக மன்னிப்புச்சபையின் இந்த கோரிக்கையில் இதுவரை அமெரிக்கா இணையவில்லை என்பதால், அவர்களிடம் கோரிக்கை விடுக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டனுக்கு கடிதங்களை எழுதுமாறு தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் ஓயப்போவதில்லை என வைத்தியர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

25 பிப்ரவரி 2011

கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை குழிதோண்டி புதைத்த தாய்!

பிறந்த உடனே புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் நேற்று காலை கோப்பாய் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்டது. சிசுவின் தாய் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். மேலும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கோப்பாய் வடக்கில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைக் கப்பட்டிருந்த 28 வார சிசுவின் சட லமே மீட்டெடுக்கப்பட்டது. யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு இறந்த நிலையில் பிறந்த சிசுவை வீட்டின் பின்புறம் புதைத்ததாக அதன் தாய் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சிசுவின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரசவத்தின் பின்னர் சிகிச்சைக்காக தாயார் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னரே விடயம் வெளிச்சத்துக்கு வந்தது. சிசுவின் சடலம் மீட்கப்பட்ட வீட்டில் தீவிர விசாரணைகளை நடத்திய நீதிவான், சிசுவைப் பிரசவித்த போது தாயார் பயன்படுத்திய இரத்தக்கறை படிந்த உடைகள் மற்றும் மருந்துக் குளிகைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி மன்றுக்கு அறிக்கை வழங்க உத்தரவிட்டார். சிசுவின் சடலத்தைப் புதைத்தவர் என்று கூறப்படும் ஆண் மற்றும் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர்களான கணவன் மனைவி ஆகியோரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தாயை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
சிசுவைப் பெற்றெடுத்த தாயின் மற்றொரு மகளான சிறுமியை சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் ஒப்படைத்து சிறுவர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் விசாரணையில் சம்பவம் பற்றித் தெரிய வந்ததாவது: இணுவிலில் வசித்து வந்த உதயகுமாரி என்ற 42 வயதுடைய பெண், கடந்த 18ஆம் திகதி தொடக்கம் கோப்பாய் வடக்கு புதிய சந்தைக்கு அருகிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். சுந்தரலிங்கம் என்பவர் 3 வருடம் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். நேற்று முன்தினம் 23ஆம் திகதி நள்ளிரவு வேளை அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை அவருடன் தங்கியிருந்த நபர் வீட்டின் பின்புறம் நிலத்தில் புதைத்துள்ளார்.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று வியாழக்கிழமை அங்கு சென்ற குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். நீதிவானுக்குத் தகவலையும் வழங்கினர். யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சந்தேக நபரான பெண் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது. நான் எனது கணவர் அல்லாத ஒருவருடன் தற்பொழுது வசித்து வருகின்றேன். கர்ப்பம் தரிப்பதனைத் தடுப்பதற்காக கல்வியங்காடு சந்தியிலுள்ள சிகிச்சை நிலையம் ஒன்றில் கர்ப்பத்தடை சிகிச்சை செய்து கொண்டேன். எனினும் எப்படியோ கர்ப்பம் தரித்து விட்டேன். அதனால் வேறு இடத்தில் கர்ப்பத்தைக் கலைக்க முயன்றேன். நேற்றுமுன்தினம் தீடீரென நள்ளிரவு வேளை வயிற்றுக்குத்து ஏற்பட்டு குறைமாதமாக சிசு இறந்த நிலையில் பிறந்தது. என்னுடன் தங்கியிருந்தவர் அந்தச் சிசுவை புதைத்தார். இப்படி அவர் தனது வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். கோப்பாய் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன.

பஷில் கலந்து கொள்ளும் நிகழ்வில் த,தே,கூட்டமைப்பும் பங்குபெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ச கலந்து கொண்டுள்ள நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பங்குகொண்டிருப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள தேசிய வியாபார முகாமை நிலையத்தில் இந் நிகழ்வு நடைபெறுகின்றது.
பசில் ராஜபக்ச பங்கு கொண்டுள்ள இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பசில் ராஜபக்ச இன்று கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் புதிய கட்டடத்தினையும் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

24 பிப்ரவரி 2011

லிபிய மக்களை கொல்ல ஸ்ரீலங்கா கடாபிக்கு உதவக்கூடும்!

இலங்கை இராணுவத்தினரின் தற்கால செயற்பாடுகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் தீவிர கண்காணிப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.லிபியாவில் நடைபெறும் உள்நாட்டுக் கிளர்ச்சியை அடக்க விமானங்கள் மூலம் குண்டு வீசுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்ற போதிலும் அதற்கு லிபிய வான்படை விமானிகள் யாரும் ஒத்துழைப்பதாக இல்லை.
அதன் காரணமாக அப்பணியில் ஈடுபடுத்தக் கூடிய வெளிநாடுகளின் விமானப்படை விமானிகளை வாடகைக்குப் பெறுவது தொடர்பில் லிபியத் தலைவர் கடாபி கவனம் செலுத்தியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
அதன் காரணமாக அவ்வாறான பணிகளில் ஈடுபட்டு அனுபவம் வாய்ந்தவர்கள் என்ற வகையிலும், லிபியாவின் நட்பு நாடு என்ற வகையிலும் இலங்கை விமானிகள் அங்கு அனுப்பப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
அவ்வாறு லிபிய உள்நாட்டுக் கலகத்தை அடக்க இலங்கை விமானிகள் அனுப்பப்படும் பட்சத்தில் அதற்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்க அரசாங்கம் முன்கூட்டிய ஆயத்த நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஊர்காவற்றுறையில் பெண்ணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் தீவகப்பகுதியிலுள்ள ஊர்காவற்துறையில் இராணுவக் காவலரணுக்கு அண்மையிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் உருக்குலைந்து சிதைந்த சடலத்தை இன்று வியாழக்கிழமை காலை அப்பகுதி இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.சடலம் துர்நாற்றம் வீசியதினால் அப்பகுதி மக்கள் இராணுவத்தினருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையியே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதூக யாழ்.ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதி ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்காக யாழ்.ஊர்காவற்துறை அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சடலத்தில் வெட்டுக்காயங்களும் காணப்படுவதாக யாழ்.ஊர்காவற்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

23 பிப்ரவரி 2011

பல்கலை மாணவர்கள் இரண்டாவது நாளாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பு!

பார்வதி அம்மாளின் மரணச் டங்கில் கலந்து கொள்ள பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டனர் என்று குற்றஞ்சாட்டி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். .
வகுப்புக்களை முழுமையாக பகிஷ்கரித்தனர். மதியம் 1.00 மணி வரை பல்கலைக்கழக முன்றலில் கூடி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கண்டன பதாகைகளை தொங்க விட்டு இருந்தனர். ஆயினும் இக்குற்றச்சாட்டை பொலிஸ் பேச்சாளர் முற்றாக நிராகரித்து உள்ளார்.

தமிழ் மக்களின் போராட்டம் ஒடுக்கப்பட்டு விடவில்லை!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அரசாங்கம் கூறுவதுபோல் முடிவடையவில்லை. அது உலக நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் ஈழத்தமிழ் மக்களின் தலை மகனுமான வே. பிரபாகரனின் செயலாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதியம்மாளின் இறுதி அஞ்சலி நிகழ்வு வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் நடைபெற்றபோது அஞ்சலி உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதாகவோ, ஒதுக்கப்பட்டதாகவோ இலங்கை அரசாங்கமும் அதனோடு இணைந்தவர்களும் கூறிக்கொள்வது பகல் கனவு காண்பதைப் போலாகும். கடந்த சில வாரங்கள் குடாநாட்டில் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.
இதனைக் காரணங்காட்டி வீதிக்கு வீதி இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததாகக் கூறும் அரசாங்கம் தலைவர் பிரபாகரனின் தாயாரின் இறுதி நிகழ்வின்போது கலந்து கொள்பவர்களுக்கு பல சிரமங்களைக் கொடுத்து வருகிறது. 81வயதுடையவரின் மரணச்சடங்கு கூட அவர்களுக்கு புளியைக் கரைத்துள்ளது. தமிழ் மக்களது போராட்டம் முடிந்துவிடவில்லை.
எந்த அரசாங்கம் வந்தாலும் அடக்க முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாப் பகுதியிலுமிருந்து கிளர்ச்சி ஏற்படும். தலைவர் பிரபாகரனின் தாயாரது இறுதி அஞ்சலி நடைபெறும் இடமானது வீரம் செறிந்த மண். தலைவரின் தாய் தந்தையர்கள் அமரர்கள் வேலுப்பிள்ளை, பார்வதியம்மா ஆகியோரின் மூச்சு இந்தக் காற்றில் கலந்துள்ளது. பல மாற்றங்களை உருவாக்கிய இம் மண் அடுத்தக் கட்ட போராட்டத்தின் கால்கோளாக இது இருக்கும் எனத் தெரிவித்தார்.

22 பிப்ரவரி 2011

நள்ளிரவில் வீடொன்றினுள் புகுந்த காமுகன்!

யாழ் உரும்பிராய் செல்வபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் உட்புகுந்த வாலிபர் ஒருவர் குடும்பப் பெண் ஒருவரை கடத்தி வல்லுறவு புரிய முனைந்ததாக தெரிக்கப்படுகிறது. குறித்த வாலிபர் வீடினுள் புகுந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குடும்பப் பெண் ஒருவரை தூக்கிக்கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்பெண் இட்ட கூக்குரலால் விழித்துக்கொண்ட கணவர் வெளியே ஓடிவந்து, அயலவர் உதவியோடு அவரை மடக்கிப் பிடித்துள்ளார்,பின்னர் அவரை ஊர் மக்கள் நையப்புடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. குறித்த வாலிபர் மதுபோதையில் இருந்தாரா இல்லை வேண்டும் என்று அவ்வாறு செய்தாரா எனத் தெரியவில்லை என்கின்றனர் ஊரார்.
பின்னர் காலை அவர் கோப்பாய் பொலீஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கே கையளிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை யாழ் நீதிமன்றில் கோப்பாய் பொலிசார் ஆஜர் படுத்தியுள்ளனர். அவரை 2 வாரம் காவலில் வைத்து விசாரிக்க யாழ் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இளவாலையில் உடலம் மீட்பு!

யாழ். இளவாலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடைய சடலம் வயல் வெளி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இளவாலை என்ற முகவரி உடைய காந்தன் (வயது 40) என்பவருடைய சடலமே மீட்கப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அவருடைய சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டையை வைத்தே அவரது பெயர் இனங்காணப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரவில்லை. கடந்த சில வாரமாக யாழ்ப்பாணத்தில் உயிரிழப்புக்கள் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாழ்வதற்கு தகுதியற்ற மோசமான நகர் கொழும்பு!

உலகின் மிக மோசமான நகரங்களின் பட்டியலில் கொழும்பின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொருளியல் புலனாய்வுப் பிரிவு என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகில் வாழ்வதற்கு பொருத்தமற்ற முதல் பத்து நகரங்களில் கொழும்பின் பெயரும் பட்டியலிடப்பட்டுள்ளது.
சிம்பாப்வேயின் ஹராரே, பங்களாதேஷின் டாக்கா, பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்சபி, நைஜீரியாவின் லாகோஸ், அல்ஜீரியாவின் அல்ஜியஸ், பாகிஸ்தானின் கராச்சி, கெமரூனின் டாவுலா, ஈரானின் தெஹ்ரான், செனகலின் டாக்கர் மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்கள் வரிசைக் கிரமமாக வாழ்வதற்கு மோசமான நாடுகளாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.
எக்கனோமிஸ்ட் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான நகரமாக கனடாவின் வான்குவார் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன், ஒஸ்ட்ரியாவின் வியன்னா, கனடாவின் ரொரன்டோ, கனடாவின் கல்கரி, பின்லாந்தின் ஹெல்ஸ்ன்கி, அவுஸ்திரேலியாவின் சிட்னி, பேர்த், அடிலெய்ட் மற்றும் நியூசிலாந்தின் ஓக்லாண்ட் ஆகிய நகரங்கள் வாழ்வதற்கு மிகவும் உசிதமான நகரங்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
சுகாதாரம், கலாச்சாரம், சுற்றாடல், கல்வி, தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்ட 30 காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கை உலகில் எட்டாம் நிலையை வகிப்பதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு நகர அபிவிருத்தி சபையை தற்போது பாதுகாப்பு அமைச்சு நிர்வாகம் செய்து வருவதாகவும், நகரத்தை அழகுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

யாழ்,பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்த பொலிஸ்!

வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வில் பங்கெடுப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தயாராவதாக வெளியாகிய தகவலை அடுத்து யாழ்.பல்கலைக்கழக வளாகம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வல்வெட்டித்துறை தீருவிலில் மறைந்த வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன. இந்நிகழ்வில் பங்கு கொள்வதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம் தயாராகியிருக்கின்றது.
இதேவேளை இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக பார்வதி அம்மாளின் நினைவு தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

21 பிப்ரவரி 2011

தடைகளையும் மீறி அன்னைக்கு மக்கள் அஞ்சலி!

பார்வதி அம்மாவின் மரணச் செய்தி வெளியானதையடுத்து யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சோகமயமாகக் காணப்படுகின்றது. குறிப்பாக அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறைப் பகுதியில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்திவருக்கின்றார்கள்.
இராணுவம் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பார்வதி அம்பாவின் உடலுக்கு பெருந்தொகையான மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். வல்வெட்டித்துறைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கறுப்புக்கொடிகரள அகற்றுமாறு படையினர் எச்சரித்துள்ள போதிலும் பெருமளவு கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு வல்வெட்டித்துறை சோகமயமாகக் காணப்படுகின்றது.
தீருவில் திடலில் மக்களின் அஞ்சலிக்காக பார்வதி அம்மாவின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பெருமளவு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிவில் உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கறுப்புக்கொடிகளை அகற்றுமாறு படையினர் நிர்ப்பந்திக்கின்ற போதிலும், பொதுமக்கள் அதற்கு மறுத்துவருவதால் அப்பகுதியில் பதற்றநிலை காணப்படுகின்றது.
அதேவேளையில், பார்வதி அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகளில் காணப்படும் பிரபாகரனின் பெயரை அகற்றிவிடுமாறும் படையினர் பொதுமக்களை நிர்பந்திப்பகதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களைத் துன்புறுத்தும் வகையிலான இவ்வாறான நடவடிக்கைகளை படையினர் தொடர்ந்தால் பாதகமான விளைவுகளை படையினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என வல்வெட்டித்துறை சிவில் சமூக அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
பார்வதி அம்மாவின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்கிழமை காலை இடம்பெறும் என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.