பக்கங்கள்

02 ஆகஸ்ட் 2011

மானமும்,வீரமும் கொண்ட சங்கிலிய மன்னனின் சிலையை டக்ளஸ் திறந்து வைக்கிறாராம்!

யாழ்.மாநகரசபையினால் புனரமைக்கப்பட்ட சங்கிலிய மன்னனின் உருவச்சிலை நாளை புதன்கிழமை காலை 7 மணிக்கு முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் உருவச்சிலை இருந்த மேடையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதனைப் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இந்தப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஆரம்பகாலத்தில் சங்கிலியன் சிலையை வடிவமைத்த செல்லையா சிவப்பிரகாசம் உட்படப் பலர் தற்போது அமைக்கப்படும் சிலையைப் பார்வையிட்டனர்.
மீண்டும் திறந்து வைக்கப்படவுள்ள சங்கிலியன் சிலையின் கீழ் உள்ள பெயர்ப் பலகையில் மாற்றம் இருக்கக் கூடாதெனவும் ஒரு சிலையை பலதடவை திறந்து வைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல எனவும் இந்த நிகழ்வை மாநகர சபையின் எதிரணியினர் பகிஷ்கரிக்கப் போவதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.