பக்கங்கள்

03 பிப்ரவரி 2012

ஐ.ஓ.எம் உதவியுடன் டோகோவில் இருந்து சில அகதிகள் இலங்கை செல்கின்றனர்.

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு செல்ல முயற்சித்து டோக்கோவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 200 இலங்கைத் தமிழர்களுள் 24 இற்கும் மேற்பட் டோர் நாளை ஐ. ஓ. எம். நிறுவனத்தின் அனுசரணையுடன் நாடு திரும்புகின்றனர்.
புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் (ஐ. ஓ. எம்) திரும்புதல் மற்றும் மீள் ஒருங்கிணைப்பு நிகழ்ச் சித்திட்டத்தின் கீழ் தமது சொந்த நாட்டிற்கு மீள வரவிரும்புவோரை விமானம் மூலம் அழைத்துவர ஐ. ஓ. எம். அனு சரணை வழங்குவதாக தென்இலங்கைக் கிளையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 200 இலங்கைத் தமிழர்கள் இந்தியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளினூடாக சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முற்பட்டபோது இவர்கள் டோகோவில் வைத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.