தனது மதுரக் குரலால் புரட்சித் தீயை உலகத்தமிழர் மத்தியில் பாய விட்ட ஒரு வீரப்போருக்கு உரம் பாய்ச்சிய மகத்தான மாமனிதன் இன்று நம் மத்தியில் இருந்து விடைபெற்றார் என்பது அறிந்து தமிழுலகம் கண்ணீர் மழையில் மூழ்கி கிடக்கிறது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்ச்சிபூர்வமாக எழுச்சியுடன் தமது கம்பீரமான குரலில் பாடி ஈழத்தில் மட்டுமன்றி உலகில் தமிழர்கள் பரவி வாழும் சகல பிரதேசங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருந்த புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் இவ்வுலகை விட்டுச் சென்றுள்ளார். தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததோடு, இருதய நோயாலும் நீண்டகாலமாக அவதியுற்று வந்திருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.போதான வைத்தியசாலையில் அவர் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் உண்மைத் தன்மையையும் உணர்ச்சி ததும்ப வெளிக்கொணர்ந்த பெருமை சாந்தனையே சாரும். இதற்கென, விடுதலைப் புலிகளின் தலைவரால் பலமுறை கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் சோபிகா (22) என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணைக் கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் அகதிகள் செயற்பாட்டாளராகப் பணியாற்றிய போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த 27 வயதான அகதியுடன் நட்புடன் இருந்துள்ளார், அந்த நபர் சோபிகாவை பின் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சோபிகாவை மிரட்டிய அந்த நபர் ஒருகட்டத்தில் அவரை கழுத்து, தலை போன்ற பகுதியில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ளார்.அவர் மீது ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, சுவிஸ் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என அறியவருகிறது.
இலங்கையின் முதலாவது கலப்பு மின் உற்பத்தி திட்டம் எழுவைதீவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்கசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டி இந்த மின் திட்டத்தை திறந்து வைத்துள்ளார். இந்த திட்டத்தின் ஊடாக காற்றலை சக்தி, சூரிய சக்தி மற்றும் எரிபொருளை பயன்படுத்தி 60 கிலோவோட் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் நிதி உதவியுடன் இந்த மின்உற்பத்தி திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கதக்க சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 187 மில்லியன் ரூபா செலவில் இந்த மின்உற்பத்தி திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒரு அலகு மின்சாரத்தை 9 ரூபா 14 சதத்திற்கு உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)