பக்கங்கள்

23 டிசம்பர் 2016

ஜெர்மன் தாக்குதல்தாரி இத்தாலியில் சுட்டுக்கொலை!

பெர்லின் சந்தேக நபர் அனிஸ் அம்ரிஜெர்மன் பெர்லின் நகரில் திங்களன்று கிறிஸ்துமஸ் சந்தையில் பார ஊர்தியை செலுத்தி 12 பேரைக்கொன்ற சந்தேக நபர் அனிஸ் அம்ரி இத்தாலியின் மிலன் நகரில் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இத்தாலிய உளவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அந்த பார ஊர்தியை செலுத்தும் பாகத்தில் இருந்த கைரேகையும் சுட்டுக்கொல்லப்பட்டவரின் கைரேகையும் ஒத்துப்போவதாகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் மார்கோ மின்னிட்டி தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை விடியற்காலை மூன்றுமணிக்கு மிலன் நகர காவல்துறையினருக்கும் அம்ரிக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். ரோந்த்துக்கு சென்ற மிலன் காவல்துறையினர் அம்ரி சாலையில் நடந்து சென்றதைக்கண்டதாகவும், அவரது அடையாள அட்டையை காட்டும்படி காவலர்கள் கோரியபோது அவர் தனது பையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து இஸ்லாமிய கோஷமிட்டபடி சரமாரியாக சுடத் தொடங்கியதாகவும் அமைச்சர் கூறினார். ஒன்பது மாதமே ஆன பயிற்சி காவல்துறை அதிகாரி பதிலுக்கு அம்ரியை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காவல்துறை அதிகாரிக்கும் காயம் பட்டிருந்தாலும் அவரது காயங்கள் ஆபத்தானவை அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பெர்லினில் நடந்த பார ஊர்தித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.