பக்கங்கள்

06 நவம்பர் 2016

மேடையில் பாதுகாவலர்களால் சூழப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்(காணொளி)

ஹிலரி ட்ரம்ப்பிரசாரத்தில், நெவாடாவில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட பாதுகாப்பு சர்ச்சைக்கு பிறகு தனது ரகசிய சேவை பாதுகாவலர்களால் மேடையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்.கூட்டத்தினருக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டவுடன் அங்கிருந்து உடனே வெளியேற்றப்பட்டார் ட்ரம்ப்; எனினும் சிறிது நேரம் கழித்து தனது உரையை முடிப்பதற்காக திரும்ப வந்தார் ட்ரம்ப். போலிஸாரால் இது குறித்து ஒருவர் சிறிது நேரம் கைது செய்யப்பட்டார்; ஆனால் அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை. முன்னதாக ஹிலரி மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவருமே அமெரிக்க தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய ஊசலாடும் மாநிலங்கள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான ஃப்ளோரிடாவில் பேரணி நடத்தினர். ஃப்ளோரிடா மற்றும் நெவாடாவில் முன்னதாக நடக்கும் வாக்குப்பதிவில், பெரும் எண்ணிக்கையில் ஹிஸ்பானிய மக்கள் வாக்களிப்பது, ஹிலரிக்கு சாதமாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். குடியரசுக் கட்சியினர் கடந்த நாற்பது ஆண்டுகளாக வெற்றிப்பெற இயலாத மாநிலமான மற்றும் ஜனநாயகக் கட்சியின் வலுவான மின்னெசோட்டாவிற்கு விஜயம் மேற்கொள்ளப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.