பக்கங்கள்

02 அக்டோபர் 2016

சிங்களவர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தியதாக போராளி கைது!

வவுனியா- கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு வவுனியா கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்திற்குள் புகுந்த சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரும், அவரது சகாக்களும் ஆயுதங்களைக் காட்டி தம்மை உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகத் தெரிவித்து 30 சிங்கள குடும்பங்கள் ஏ 9 வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதனையடுத்து அங்கு சென்ற வவுனியா பொலிசார் கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்ட சிங்கள குடும்பங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியிருந்ததுடன், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைதுசெய்வதாகவும் உறுதியளித்திருந்தனர். இதற்கமையவே இன்று இன்று சின்னவன் என்ற முன்னாள் போராளியும், அவரது நண்பர் ஒருவரும் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு வவுனியா நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.