பக்கங்கள்

24 டிசம்பர் 2016

மனிதம் மரணித்து விட்டதா?தையிட்டியில் மூதாளர்களின் அவல நிலை!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்தையிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட மூதாளர்களான தம்பதியர் இருவர் தனித்து விடப்பட்ட நிலையில் தெல்லிப்பளையில் நோயோடும் பசியோடும் கடந்த சில வருடங்களாக போராடியே வாழ்ந்து வந்த அவலம் கண்களை குளமாக்கியது.இரண்டு வாரங்களாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மூதாளரான பெண்மணி மாற்றுடை இன்றி இயற்கை கடன்கள் அனைத்தையும் கழித்தவாறு தரையில் முடங்கி கிடக்க,காது கேளாத,நடக்கவே தள்ளாடும் கணவன் செய்வதறியாது குப்பி விளக்குடன் காலம் கழித்த அவலம் நெஞ்சத்தை பிழிந்தது.ஆனாலும் இன்னும் மனிதத்தை நேசிக்கும் தெல்லிப்பளை பிரதேச உத்தியோகத்தர்கள் சிலர் மிக கரிசனை கொண்டு எம் சுகாதார துறையை தொடர்பு கொள்ள நாமும் சைவ மகா சபையினரும் இணைந்து அத்தாயாரை தெல்லிப்பளையில் சேர்த்து பின் மேலதிக சிகிச்சைக்கு யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதித்தோம்.அகதி அரசி எனும் படைப்புக்காய் முதலமைச்சர் விருது வென்றவரும் மனைவியின் துயர் கண்டு இயாலாமையோடு போராடிக் கொண்டிருந்த அந்த பெரியவருமான இராசதுரை ஐயாவை சைவ மகா சபை அலுவலகத்தில் தங்க வைத்தோம். இவ்வளவில் எம்மை இயக்கி மன நிறைவைத் தந்த பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் கருணையை பணிகின்றோம் அன்பின் உறவுகளே உங்கள் வீட்டின் அருகிலும் இவ்வாறான மூத்தோர் அநாதரவற்று இருக்கலாம். எம்மால் முடிந்தளவு உதவுங்கள் குறைந்த பட்சம் அவசர அம்புலன்ஸ் இலக்கமான 021 2225555 / 6666 ற்கு அழைத்து வைத்தியசாலையில் சேர்க்கவாவது உதவுங்கள்.

நன்றி:நந்தகுமார் பரா(முகநூல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.