பக்கங்கள்

12 அக்டோபர் 2016

தேசியத் தலைவரது புகைப்பட சுவரொட்டி தொடர்பில் பெண் கைது!


மருதனார்மடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட பெண், பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  ஜேர்மனி பிரஜாவுரிமை கொண்ட இந்தப் பெண் சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
மருதனார்மடத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட பெண், பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜெர்மன் பிரஜாவுரிமை கொண்ட இந்தப் பெண் சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே நேற்று இரவு கைது செய்யப்பட்டார். மருதனார்மடம் பிரதேசத்தில் இராமநாதன் நுண்கலைப் பீடத்திற்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் நேற்று முன்தினம் இரவு தமிழீழத் தேசியத் தலைவரது புகைப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டி ஒன்றும், தமிழ்த் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டி ஒன்றும் ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து அறிந்த சுன்னாகம் பொலிஸார் உடனடியாக அந்த சுவரொட்டிகளை அகற்றியிருந்த நிலையில் விசாரணைகளையும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மருதனார் மடம் ஆஞ்சனேயர் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி காணொளியைக் கொண்டு, சுவரொட்டிகளை ஒட்டிய பெண்ணை அடையாளம் கண்டதாகவும், இதற்கமைய நேற்று இரவு அவரைக் கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஜெர்மன்  பிரஜாவுரிமையை கொண்ட இந்தப் பெண்ணுக்கு இலங்கை பிரஜாவுரிமையும் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக சிறீலங்காவின் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.