பக்கங்கள்

07 டிசம்பர் 2016

ஜெயலலிதாவின் ஆலோசகர் துக்ளக் ஆசிரியர் சோ காலமானார்!

Modi Meets Cho.Ramasamyஅப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த பத்திரிகையாளரும் துக்ளக் இதழின் ஆசிரியருமான சோ ராமசாமி இன்று காலை காலமானார். அவர் தனது நெருங்கிய நண்பரான முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தது தெரியாமலேயே உயிரிழந்துள்ளார். சோ ராமசாமி பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர், நடிகர் என பன்முகத் தன்மைக்கொண்டவர். கடந்த சில மாதங்களகாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மருத்துவமனையில் மூச்சுதிணறல் காரணமாக அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கைத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சோ ராமசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் ஆவர். ஜெயலலிதா அரசியல் தொடர்பாக சோவிடம் ஆலோசனை கேட்பார், அவரது ஆலோசனைப்படி நடப்பார் என கூறப்படுவதும் உண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானர். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவு செய்தி சோவுக்கு தெரிவிக்கப்படவில்லை என தற்போது தெரியவந்துள்ளது. தனது நெருங்கிய நண்பர் உயிரிழந்தது தெரியாமலேயே அடுத்த 2 நாட்களுக்கு சோ ராமசாமி உயிரிழந்துள்ளார்.CM Jayalalitha meets ailing journalist Cho Ramaswamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.