அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி ஒன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என ஊர்த்தலைவர்கள் அறிவித்தனர். ஆனாலும் ஒரு பிரிவினர் நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதனை ஏற்காமல் மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தடியடி நடத்தி விரட்டினர். கல்வீச்சும் நடைபெற்றது. இதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட நடு தெருவில் அந்தப் பெண் மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்றவர்களையும் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
23 ஜனவரி 2017
தமிழகத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் வன்முறை!
அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி ஒன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என ஊர்த்தலைவர்கள் அறிவித்தனர். ஆனாலும் ஒரு பிரிவினர் நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதனை ஏற்காமல் மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தடியடி நடத்தி விரட்டினர். கல்வீச்சும் நடைபெற்றது. இதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட நடு தெருவில் அந்தப் பெண் மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்றவர்களையும் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.