நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பிக்கும் சம்மந்தம் இல்லை என அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம், டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் வழக்கு தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அந்த விடயம் தொடர்பில் நான் அதிகம் பேச நினைக்கவில்லை. இருந்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் கட்சியின் ஆதரவாக செயற்படுகின்றனர். இதே போல் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சிறையில் உள்ளவர் கட்சியின் ஆதரவாளரே தவிர அவர் கட்சி உறுப்பினர் அல்ல. அவர் வேறு கட்சி சார்ந்தவர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களாவர். ஒட்டுமொத்தமாக இந்த வழக்கில் ஈ.பி.டி.பிக்கு தொடர்பு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார அணியினரை வழிமறித்து தாக்கியதில் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டு, 18 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் ஈபிடிபி உறுப்பினர்கள் மூவருக்கு இரட்டை மரணதண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
19 டிசம்பர் 2016
நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி.க்கும் தொடர்பில்லையாம்!
நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பிக்கும் சம்மந்தம் இல்லை என அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம், டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் வழக்கு தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அந்த விடயம் தொடர்பில் நான் அதிகம் பேச நினைக்கவில்லை. இருந்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் கட்சியின் ஆதரவாக செயற்படுகின்றனர். இதே போல் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சிறையில் உள்ளவர் கட்சியின் ஆதரவாளரே தவிர அவர் கட்சி உறுப்பினர் அல்ல. அவர் வேறு கட்சி சார்ந்தவர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களாவர். ஒட்டுமொத்தமாக இந்த வழக்கில் ஈ.பி.டி.பிக்கு தொடர்பு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார அணியினரை வழிமறித்து தாக்கியதில் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டு, 18 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் ஈபிடிபி உறுப்பினர்கள் மூவருக்கு இரட்டை மரணதண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.