சைக்கிளில் வீதியைக் கடக்க முயன்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் இ.போ.ச. பஸ் மோதியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை பளை தர்மக்கேணி தென்னை அபிவிருத்திச் சபை அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.
தென்னை அபிவிருத்திச் சபை பணியாளரான ரவீந்திரன் நகுலேஸ்வரி (வயது36) கடமைக்குச் சென்ற வேளையிலேயே விபத்து இடம்பெற்றது. பளை, தம்பகாமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்னின் கணவருக்கு ஒரு கை இல்லை என்று தெரிவிக்கப் படுகிறது.
பளைப் பொலிஸார் பஸ் சாரதியைக் கைது செய்துள்ளனர்.சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
11 நவம்பர் 2012
பொலிஸ் - மக்கள் மோதலில் 11 பேர் காயம்!
ஹொரணை, மொரககேன்ன பிரதேசத்தில் போலீசாருக்கும் மக்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 3 பொலிஸாரும் 8 பிரதேசவாசிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக சென்ற பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக இவர்கள் காயமடைந்துள்ளனர்.இதே வேளை இச்சம்பவம் தொடர்பில் நடந்த விசாரணைகளை அடுத்து மூன்று போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
10 நவம்பர் 2012
பிள்ளைகளை பராமரிக்க தவறிய தந்தைக்கு காவலூர் நீதிமன்று சிறைத்தண்டனை விதித்தது!
சிறுவர்களைப் பராமரிக்கத் தவறியமை மற்றும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியமை ஆகிய குற்றங்களுக்காக தந்தை ஒருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. இதே குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த இரண்டு வழக்குகளும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆர்.எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே தண்டனை வழங்கப்பட்டது.
புங்குடுதீவைச் சேர்ந்த சுமார் 40 வயதுடைய தந்தையே தனது பிள்ளைகளை சிறுவர்களை பராமரிக்கத் தவறியுள்ளார் என்றும் சிறுவர்களை அடித்துத் துன்புறுத்துகிறார் என்றும் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவல் ஊர்காவற்றுறை பிரதேச செயலக நன்னடத்தை அதிகாரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதுதொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு நீதிவான் மகேந்திரராஜாவின் நடவடிக்கையால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வந்தது. விசாரணையின் போது சந்தேக நபரான தந்தை தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 5 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் ஏனைய 7 மாதங்களும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது தவிர ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைச் செலுத்தத் தவறின் மேலும் ஒரு மாத காலச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிவான் உத்தரவிட்டார்.
இதே குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறை கரம்பொன்னைச் சேர்ந்த தந்தை ஒருவருக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 11 பிள்ளைகளின் தந்தையான அவர் மீதும் தனது பிள்ளைகளை பராமரிக்காமை மற்றும் அடித்துத் துன்புறுத்துகின்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.வழக்கு நீதிவான் மகேந்திரராஜாவினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆரம்ப விசாரணையின் பின்னர் சந்தேகநபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
வேலூர் சிறையில் முருகனிடமிருந்து பல பொருட்களை கண்டு பிடித்ததாம் பொலிஸ்!
வேலூர் மத்திய சிறையில், ராஜிவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முருகனிடமிருந்து, கையடக்கத்தொலைபேசி, சிம் கார்ட், இறுவெட்டு ஆகியவற்றை விஜிலன்ஸ் பொலிஸார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க சிறைத்துறை டி.ஜ.ஜி.,கோவிந்தராஜ் தலைமையில் சிறைத்துறையினர், நேற்று, 9 மணி நேரம் சோதனை நடத்தினர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலை குற்றவாளி என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முருகனிடமிருந்து கையடக்கத்தொலைபேசி, சிம் கார்ட், இறுவெட்டு ஆகியவற்றை விஜிலன்ஸ் பொலிஸார் கைப்பற்றினர்.
கைப்பற்றிய இறுவெட்டை போட்டுப் பார்த்த போது, அதில் உலக வரைப்படம், இலங்கை வரைப்படம் முதல் இரண்டாம் உலகப் போர், இலங்கையில் நடந்த படுகொலைகள், விடுதலைப் புலிகள் பிரபாகரன் குறித்த தகவல் இருந்ததாகவும் சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
(அடேங்கப்பா..!முருகன் மறைத்து வைத்திருந்த அணு குண்டை கண்டு பிடிச்சிருக்கிறாங்களே...)
(அடேங்கப்பா..!முருகன் மறைத்து வைத்திருந்த அணு குண்டை கண்டு பிடிச்சிருக்கிறாங்களே...)
இராணுவத்தை பயன்படுத்தி மனித உயிர்களுடன் விளையாடுகிறது அரசு.
இந்த நாட்டின் அனைத்து விடயங்களுக்கும் இராணுவத்தினர் அல்லது விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்தும் மனநிலை தற்போதைய அரசாங்க அதிகாரிகளுக்கு உள்ளதென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அதன் ஒரு திட்டம் நேற்று வெலிக்கடை சிறையில் இடம்பெற்றதென மக்கள் விடுததலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வெலிக்கடை சிறை மோதலில் 30 பேர்வரை பலியானதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
சிறைக்குள் தொலைபேசி, போதை பொருள் இருப்பது உண்மை. அவை சிறைக்குள் செல்லும் வழியை கண்டுபிடித்து தடுக்க வேண்டும். அதைவிடுத்து இராணுவத்தை விடுத்து சோதனை செய்தால் நேற்றுபோல்தான் பலன் கிடைக்கும்.
மனித உயிர்களுடன் விளையாடும் அரசின் இத்திட்டங்களை கண்டிக்கிறோம். மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது பார்த்துக் கொள்ள வேண்டும். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
09 நவம்பர் 2012
பிரான்சில் வீரச்சாவடைந்த பரிதிக்கு நெடுமாறன் ஐயா விடுத்த வீரவணக்க அறிக்கை!
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை .விடுதலைப் புலிகளின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளர் பரிதி என்ற ரீகன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கள அரசின் கொடுங்கரங்கள் பிரான்சு வரை நீண்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.
நல்ல செயல் வீரராகவும் கடமையில் சிறிதும் தவறாதவரும் தனது தொண்டின் சிறப்பினால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றவருமான பரிதியின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. பரிதிக்கு எனது வீர வணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
-பழ. நெடுமாறன்-
தலைவர்
-பழ. நெடுமாறன்-
தலைவர்
கனடியத் தமிழர் தேசிய அவையின் வீரவணக்கம்.
தமிழ்த் தேசியப் பற்றாளரும் நீண்ட காலமாகப் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளருமாக அயராது தமிழ் மண்ணின் விடுதலைக்காகச் செயற்பட்டுவந்த 'பருதி' என்று பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட திரு நடராஜா மதீந்திரன் அவர்கள் நவம்பர் 8ம் நாள் 2012 வியாழக்கிழமையன்று சிறிலங்காவின் நயவஞ்சகர்களால்; சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திரு.பருதி அவர்களின் இழப்பு ஈழத் தமிழருக்குப் பேரிழப்பாகும்.அவரின் இழப்பினால் துயருறும் அவரின் குடும்பத்தாருடனும் உலகத் தமிழருடனும் கனடியத் தமிழர் தேசிய அவை தமது துயரைப் பகிர்ந்து கொள்வதுடன் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
சிறிலங்காவானது ஈழத்தில் நம் தாயக உறவுகளைப் படுகொலை செய்தும் ஆயுத முனையில் அடக்கி இராணுவக் கட்டுப்பாட்டிலும் புலனாய்வாளர்களின் பிடியிலும் வைத்திருப்பதுபோல் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களையும் அடக்கியாழும் நோக்கிலேயே திரு. பருதி அவர்களின் இப்படுகொலை நடந்தேறியுள்ளது.
இன்று சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் தொடர்ச்சியான அரசியல் செயற்பாட்டின் காரணமாகச் சீற்றம் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசானது சர்வதேச மட்டத்தில் பல அழுத்தங்களைச் சந்தித்து வரும் இவ்வேளையில் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகளின் வீச்சைக் குறைக்கும் நோக்குடனும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் நோக்குடனுமே இப்படுகொலையைச் செய்துள்ளது.
புலம்பெயர் தமிழ் மக்களாகிய நாம் எந்த அச்சுறுத்தலையும் தாண்டி எமது செயற்பாடுகளை இன்னமும் வீச்சுடனும் ஓர்மத்துடனும் செய்து தமிழர் மீது நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலையைச் சர்வதேச மட்டத்தில் எடுத்துச்சென்று மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் இலட்சியத்தை அடையும்வரை அயராது செயற்படுவோமென உறுதி எடுத்துக்கொள்வதுடன் சிறிலங்கா அரசின் எல்லை மீறிய இப்படியான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அத்தோடு இப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை பிரான்ஸ் காவல்துறை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமெனப் பிரான்ஸ் காவல்துறையைக் கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டிநிற்கிறது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
கனடியத் தமிழர் தேசிய அவை.
யாழ்ப்பாணத்தில் குடிகாரர்களின் தொகை அதிகரிப்பு!
யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் அதிகளவான மதுபானம் நுகரப்படுவதாக பிராந்தியத்திற்குப் பொறுப்பான சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வருடாந்தம் 15000 முதல் 20000 வரையிலானவர்கள் புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் ஆகியவற்றை பருகுவதனால் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
ஏ9 வீதி திறக்கப்பட்டதனைத் தொடர்ந்து மதுபான வகைகளின் பயன்பாடு உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மதுபான விற்பனை நிலையங்கள் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். மதுபான பயன்பாட்டினால் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
உறக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்கள மாணவன்!அவுஸ்திரேலியாவில் சம்பவம்.
அவுஸ்திரேலியாவின் பேர்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை மாணவர் ஒருவருக்கு 3 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேர்த்தில் பகுதி நேர வாகன செலுத்துனராக பணியாற்றிய 28 வயதுடைய இலங்கை மாணவர் சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே என்வர் இன்று (09) பேர்த் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மது அருந்திய பின் உறக்த்தில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் இலங்கை மாணவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் 18 மாத சிறை தண்டனையின் பின் 2014ம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவருக்கு விசா ரத்து செய்யப்பட்டு பின் நாடு கடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.(எங்க போனாலும் இவங்கிட குணம் மாறப்போறதேயில்லை)
08 நவம்பர் 2012
மேலும் 30பேரை திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா!
அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியா சென்ற 30 இலங்கை இளைஞர்கள் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விசேட விமானம் மூலம் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் படகு மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களின் நிலை குறித்து விளக்கப்பட்டு அவுஸ்திரேலியாவின் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைய அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.
செல்லுபடியற்ற விசா, அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களாலும் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஒகஸ்ட் 13ம் திகதிக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து 156 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஸ்கார்பரோ வீட்டில் தீ!தமிழர் குடும்பம் படுகாயம்!
கிழக்கு ரொறாண்ரோவில் ஒரு வீட்டில் செவ்வாய் நள்ளிரவு திடிரென்று தீ பிடித்தது. இந்தத் தீயில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இருவர் நிலைமை மோசமாக இருக்கிறது.
பிர்ச்மவுண்ட் சாலை, லாரன்ஸ் தெரு பகுதியில் இருக்கும் ஒரு தனி வீட்டில் இலங்கைத் தமிழர் குடும்பம் வசித்து வந்தது. இந்த வீட்டில் மூன்று தலைமுறையினர் குடியிருக்கின்றனர். அப்பா, அம்மா அவர்களின் இரண்டு மகன்கள்,மகள், மருமகன் மற்றும் 22 மாதப் பேரக் குழந்தை என கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள்.
இரவு ஒரு மணி சுமாருக்கு தீ எச்சரிக்கை மணி ஒலித்ததும் குடும்பத் தலைவி சந்திரலீலா சிவபாதம் விழித்து மற்ற குடும்பத்தினரை எழுப்பியிருக்கிறார். ஆனால் அதற்குள் தீ வேகமாய் பரவியிருக்கிறது.
’இப்படியொரு தீயை நான் பார்த்ததேயில்லை. கண் முன் வீடு எரிந்தது மிகவும் பரிதாபகரமான சங்கதி’ என்கிறார் அருகில் வசிக்கும் கிருஷ்ணலீலை வேலுபிள்ளை.
‘குழந்தைக்குப் பரவாயில்லை. அதன் கர்ப்பினி தாய்க்கும் அதிகமில்லை’ என்கிறார் அவர்.
தீ எச்சரிக்கை மணி ஒலித்த சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வண்டிகள் வந்து போராடி தீயை அணைத்திருக்கின்றன.
வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் முதலில் தீ பிடித்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதிலிருந்து வீட்டுக்கு தீ பரவியிருக்கிறது. அந்த வாகனம் முற்றிலும் எரிந்து விட்டது. மொத்த சேதாராம் 300,000 டாலர்கள் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பன்னிரெண்டு தீயணைப்பு வண்டிகளும் 40 தீயணைப்பு வீரர்களூம் சேர்ந்து தீயை அணைத்திருக்கிறார்கள்
07 நவம்பர் 2012
அதிகார பகிர்வு பெற மீண்டும் புலிகளை அழைக்கிறார் விமல் - மனோ
புலிகளுக்கு பயந்தே அதிகாரப்பகிர்வு கொள்கையும், மாகாணசபை முறைமையும், பதிமூன்றாம் திருத்தமும் கொண்டு வரப்பட்டது: இன்று புலிகள் இல்லை; ஆகவே மாகாணசபையும், பதிமூன்றும் தேவை இல்லை என இன்று காலை வேறொரு இடத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச சொல்லியிருப்பதாக அறிந்தேன். இது நல்ல வேடிக்கை.
இன்று தமிழ் தலைமைகள் நாம், ஐக்கிய இலங்கைக்குள்ளே தீர்வை கோருகிறோம். நேர்மையான அதிகாரப்பகிர்வு என்ற நிபந்தனையுடன் ஒன்றுப்பட்ட இலங்கையை கோருகிறோம். நாட்டை பிரிக்க வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. ஆயுத போராட்டம் நடத்தவில்லை.
புலிகளுக்கு பயந்துதான் அதிகாரப்பகிர்வு வந்தது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அதிகாரப்பகிர்வு வேண்டும் என்றால் புலிகளை மீண்டும் கொண்டு வாருங்கள் என்றுதானே அர்த்தம். ஆகவே, விமல் வீரவன்ச அதிகாரப்பகிர்வை பெறுவதற்காக, ஆயுதப்போராட்டம் நடத்துங்கள் என்று எமக்கு சொல்கிறார். நாட்டை பிரியுங்கள் என்று சொல்கிறார்.
1980களில் புலிகள் உருவானார்கள். 1987களில், மாகாணசபை முறைமையும், பதிமூன்றாம் திருத்தமும் உருவானது. ஆனால், அதிகாரப்பரலாக்கல் கொள்கை என்பது இந்த நாட்டில், புலிகளுக்கு முன்னமேயே உருவாகி இருந்ததை, தெரிந்தும் தெரியாததுபோல் சிறுபிள்ளைதனமாக விமல் வீரவன்ச பேசுகிறார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
"அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்" என்ற தலைப்பில் இரண்டாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. சுமந்திரன் எம்பி, அசாத் சாலி, சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
1958 ல் பண்டா-செல்வா ஒப்பந்தம், 1965 ல் டட்லி-செல்வா ஒப்பந்தம் என்பவை அதிகாரப்பரலாக்கல் கொள்கையின் அடையாளங்கள். அப்போது புலிகள் இல்லையே. அதுமட்டும் அல்ல, சுதந்திரத்துக்கு முன்னர், 1940 களில், கண்டி சிங்கள பிரதானிகள், யாழ்ப்பாணத்திற்கு சென்று இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி முறையே தேவை என்று கூறி அதற்கு தமிழர்களின் ஆதரவை கோரினார்கள்.
சோல்பரி கமிசனிடம் கண்டிய சிங்களவர்கள் சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தார்கள். அன்றைய தமிழர்களுக்குத்தான் முன்யோசனை மூளை இல்லாமல் போய்விட்டது. ஆனால், சமஷ்டி கோரிக்கையை முன் வைத்த சிங்களவர்கள் புலிகளா? அதை வேண்டாம் என மறுத்த தமிழர்கள் புலிகளா? உண்மையில் அன்று புலியும் இருக்கவில்லை, பூனையும் இருக்கவில்லை.
இந்த நாட்டின் சரித்திரம் எமக்கு தெரியாது என விமல் வீரவன்ச நினைப்பது மடத்தனம். நாங்கள் நேற்று முதல் நாள்தான் மீண்டும் பிறந்து வந்துள்ளோம் என அவர் நினைப்பதும் மடத்தனம். 1940, 1950, 1960 களில் இந்த நாட்டில் நடந்தவை எங்களுக்கு தெரியும். எமக்கு நீங்கள் சரித்திர பாடம் புகட்ட வேண்டாம். உமது இனவாத தேவைகளுக்காக, அதிகாரப்பரவல்லாக்கலை எதிர்க்கிறீர். அதற்காக பொய்களை அவிழ்த்து விடுகிறீர்.
புலிகளுக்கு பயந்துத்தான், அதிகாரப்பகிர்வு கொள்கை என்றால், இன்று அதிகாரப்பகிர்வை பெற்றுக்கொள்ள மீண்டும் புலிகள் வரவேண்டுமா? புலிகள் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்று விமல் வீரவன்ச சொல்கிறாரா என நான் கேட்கிறேன்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது அதிகாரப்பகிர்வு. இதைதான் உலகம் திரும்ப, திரும்ப சொல்கிறது. ஆனால், மகிந்த அரசாங்கம் அதிகாரத்தை பகிர்ந்து தர தயார் இல்லை. பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணை மூலம் அரசாங்கம் உலகத்துக்கு வழங்கிய செய்தி இதுதான்.
இன்று திவி நெகும சட்டம், மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்கிறது. அதை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையின் மூலம் சட்டமாக்க முடியாது என பிரதம நீதியரசர் தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டார். ஆகவே வேண்டுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம், பதின்மூன்றாம் திருத்தத்தில் கை வையுங்கள். சர்வஜன வாக்கெடுப்பு நடத்துங்கள், உங்களுக்கு முடியுமானால் திருத்தத்தையே திருத்துங்கள் என்று உயர் நீதிமன்ற தீர்ப்பு சொல்லிவிட்டது.
இதனால்தான் இவர்களுக்கு இன்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக மீது கடும் கோபம். ஏனென்றால், சத்தமில்லாமல் பதின்மூன்றின் மீது கைவைக்க நினைத்தவர்களுக்கு அதை பகிரங்கமாக செய்ய வேண்டிய நிலைமையை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக ஏற்படுத்திவிட்டார். உலகம் முழுக்க போய், பதிமூன்றிற்கு மேலே போட்டு தருகிறேன் என்று சொன்னவர்கள், இன்று இருப்பதையும் திருட முயல்கிறார்கள் என்பது பகிரங்கமாகிவிட்டது.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று பதின்மூன்றில் கைவைத்தால், அது இந்த அரசாங்கத்துக்கு கேடுகாலம். உலகத்தின் முன் இனி இவர்களுக்கு எந்த ஒரு சமாதானத்தையும் இனிமேல் சொல்ல முடியாது. இந்த தர்மசங்கட நிலைமைக்கு அரசாங்கத்தை தனது தீர்ப்பின் மூலம் தள்ளியுள்ளவர், ஷிராணி பண்டாரநாயக்க. அந்த நிலைமைக்கு ஷிராணி பண்டாரநாயக்கவை கொண்டு வந்தவர்கள் நாங்கள்.
இங்கே அமர்ந்துள்ள, மனோ கணேசன், அசாத் சாலி, சுமந்திரன், விக்கிரமபாகு, சிறிதுங்க மற்றும் மாவை சேனாதிராசா ஆகிய நாங்கள்தான், திவி நெகுமவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். அதனால்தான் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. எனவே இன்று நாங்கள் இந்த தீர்ப்பின் காரணமாக தமிழ், முஸ்லிம் மற்றும் நல்லெண்ணம் கொண்ட சிங்கள மக்களுடன் சேர்ந்து மகிழ்சியை கொண்டாடுகிறோம்.
இன்று தீர்ப்பு வழங்கிய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக மீது அரசாங்கம் கை வைக்கிறது, அதை எதிர்த்து நாம் போராடுவோம். இன்றைய சூழலில் அவருக்கு எங்கள் உறுதியான ஆதரவை நாம் தெரிவிக்கிறோம். தமிழ், முஸ்லிம் மக்களும் இதையே செய்ய வேண்டும்.
எஜமானுக்கு கேட்கவேண்டும், அவர் எதையாவது மேலே போட்டு தரவேண்டும் என்ற நப்பாசை காரணமாக, இன்று சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், ஷிராணி பண்டாரநாயகவுக்கு எதிராக பேரினவாதிகளைவிட அதிக சப்தம் போடுகிறார்கள்.
பிரதம நீதியரசருக்கு எதிராகவும், தொடர்ந்து திவிநேகும சட்டமூலத்திற்காக பதிமூன்றாம் திருத்தத்தின் மீதும் கை வைக்கும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும், தமிழ் பேசும் மக்களை காட்டிகொடுக்கின்றார்கள் என்பது உண்மை. இவர்களுக்கு விமோசனம் ஒருபோதும் இல்லை என்பதும் உண்மை. இதை தமிழ் பேசும் மக்கள் உரிய வேளையில் புரிய வைப்பார்கள்.
வருட ஆரம்பத்தில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்வாராம்!
எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை உறுதி மொழி வழங்கியுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க முக்கிய உறுப்பினர்களான ஸ்டாலின் மற்றும் பாலு ஆகியோர் அண்மையில் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்து, நவனீதம்பிள்ளையை சந்தித்திருந்தனர்.
இலங்கைத் தமிழர்களின் நிலைமைகள் குறித்து நவனீதம்பிள்ளையிடம் திமுக உறுப்பினர்கள் விளக்கியுள்ளனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணித்தியாலத்திற்கு மேல் நீடித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உரிய முறையில் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதனை ஆராய்வதற்கு தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக நவனீதம்பிள்ளை தெரிவித்தார் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
06 நவம்பர் 2012
அகதியொருவர் தமிழக அகதி முகாமில் படுகொலை!
இலங்கையைச் சேர்ந்த அகதியொருவர் தமிழக அகதி முகாமில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கரூர் அருகே ராயனூர் என்னும் இடத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்த ஜெயபிரகாஷ் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த படுகொலைக்கு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலையை தடுக்க முயன்ற ஜெயபிரகாஷின் தம்பியான கலைச்செல்வன் என்பவர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கரூர் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அகதி முகாமையை சேர்ந்த மற்றுமொருவரை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு தூதுவர்களாக இனவழிப்பு குற்றவாளிகள்!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முக்கிய பங்காற்றிய (இனவழிப்பு குற்றவாளிகள்!)இலங்கை இராணுவத் தளபதிகள் மூவர், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாக இரண்டாம் நிலைப் பதவிகளில் அமர்த்தப்படவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்த இது தொடர்பான திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் தளபதியும், தற்போது இராணுவத் தலைமையகத்தில் பொது அதிகாரிகளுக்கான பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுபவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், இஸ்ரேலுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, பிறேசிலுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான போராளிகள் கடத்தப்படும் சம்பவம் அதிகரிப்பு!
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் வன்னியி;ல் சுமார் ஏழு இளைஞர்கள் ஓரே சந்தர்ப்பத்தில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியொன்றில் அவர்கள் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஒன்று கூடியிருந்த இடமொன்றில் வைத்து படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடித்து செல்லப்பட்டதாக அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன. அச்சங்காரணமாக அவர்கள் பிடித்து செல்லப்பட்டமை தொடர்பாக குடும்பத்தவர்கள் புகார் எதனையும் தெரிவித்திருக்கவில்லை.
எனினும் அவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்களுள் ஒருவர் புனர்வாழ்வின் பின்னர் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவ்வகையிலேயே இக்கடத்தல் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.
ஏற்கனவே அரசு கூறிவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட போராளிகளினில் பலர் வன்னியிலும் அதே போன்று யாழ்.குடாநாட்டிலும் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த போதிலும் அவர்கள் பற்றி பின்னர் தகவல்கள் ஏதுமற்ற நிலையே காணப்பட்டு வருகின்றது. அவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்கள் பற்றி தகவல்களை வழங்க படைத்தரப்பு தொடர்ந்தும் மறுத்தே வருகின்றது. குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் விடுதலைப புலிகளது சொத்துக்களை பேணிவருபவர்களே இலக்கு வைக்கப்படுவதாக படைத்தரப்பு கூறிவருகின்றது.
05 நவம்பர் 2012
சந்திரிகா பைத்தியம் பிடித்து ஆடைகளின்றி வீதியில் ஓடுவார்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க,ஆடைகளின்றி வீதியில் ஒடும் காலம் கிட்டியுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மிகப்பெரிய கட்சியாகும்.
இந்த கட்சியின் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க விசர்பிடித்து ஆடியதால்,அந்த பதவியையும்,கட்சியையும் விட்டுச் செல்ல நேர்ந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற திவிநெகும சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பைத்தியம் பிடித்து ஆடைகளின்றி வீதியில் ஓடுவார் என்று நான் முன்னர் கூறியது தற்போது நடந்து வருகிறது.
தற்போது உண்மையில் சந்திரிகாவுக்கு விசர்பிடித்துள்ளது.
அவர் தலைவிரி கோலமாக ஆடைகளின்றி வீதியில் ஓடும் நாள் மிக விரைவில் வரும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.
சிகிச்சையில் குளறுபடியா?ஆஸ்பத்திரியில் இறந்த பெண்!!!
மட்டக்களப்பு, பழுகாமத்தில் இருந்து கை உடைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்த குடும்ப பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது:
பழுகாமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவனேசன் சிவகலா (வயது30) மிகவும் வறுமை நிலையில் உள்ளவர். இந்தப் பெண் கடந்த புதன்கிழமை வீட்டில் வழுக்கி விழுந்ததால் அவரது கை மணிக்கட்டுப் பகுதியில் உடைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், மறுநாள் வியாழக்கிழமை அவருக்கு கை மணிக்கட்டுப் பகுதியில் சத்திரசிகிச்சை செய்யவென அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சத்திரசிகிச்சையின் போது குறித்த பெண் உயிரிழந் துள்ளார். சத்திரசிகிச்சையின் போது இடம்பெற்ற சில பிழையான சிகிச்சை காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று குடும்பத்தினரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நீதிபதி மரண விசாரணையை மேற்கொண்டதுடன், உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதால் கொழும்பில் இருந்து பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியர்களை வரவழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறந்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ள போதும், ஒரு சிலரின் கவனயீனங்களால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது. கோத்தபாய மற்றும் கருணா குழுவினர் தென்னாபிரிக்காவுக்கு இரகசிய விஜயம்!
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட்ட அமைச்சர்கள் பட்டாளமொன்று தென்னாபிரிக்காவுக்கு இரகசியப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக இணையதள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தப் பயணத்தின் போது கோத்தபாய ராஜபக்ச தென்னாபிரிக்க அரசின் மூத்த அதிகாரிகளையும், இராணுவ அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தப் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டது மற்றும் அதன் நோக்கம் குறித்து இந்தியாவுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவின் இந்தப் பயணத்தை அடுத்து, இலங்கை அரசின் அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, நியோமல் பெரேரா, விநாயகமூர்த்தி முரளிதரன், பைசர் முஸ்தபா, ஜனக பண்டார ஆகியோரைக் கொண்ட குழு கடந்த ஒக்ரோபார் 27ம் நாள் ஒரு வாரகாலப் பயணமாக தென்னாபிரிக்கா சென்றுள்ளதாகவும் அவ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
04 நவம்பர் 2012
சுழிபுரத்தில் பொதுமக்கள் மீது கடற்படை தாக்குதல்!
இன்று மாலை சுழிபுரம் கிழக்கு காட்டுப்புலம் திருவடிநிலை பகுதி பொதுமக்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருவடிநிலையில் கடற்பகுதியின் ஒருபகுதியை கடற்படையினர் தடைசெய்து வைத்துள்ளதால் இரண்டு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில் திடீரென மோட்டார் சைக்களில் வருகைதந்த கடற்படையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குல் மேற்கொண்டுள்ளனர்.
கடற்படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து ஒன்று திரண்ட பொதுமக்கள் கடற்படையினரின் தண்ணீர் பௌசரை வழிமறித்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சி செய்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஆயினும் மேலதிகமாக குறித்த பகுதிக்கு கடற்படையினர் அனுப்பட்டு பொதுமக்களை கலைக்க கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஊடகங்கள் ஊடாக புலிகளின் தாக்குதல் தொடர்கிறது என்கிறார் மகிந்த.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடகங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை தொடர்ந்து வருவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஊடகங்களைப் பயன்படுத்தி தமது போராட்டத்தை புலிகள் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ,
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்துக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பாரிய அளவில் நிதியை செலவிட்டனர் எனவும் அதேபோன்று போராட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெற்றோரை பராமறிப்பதற்காகவும் அவர்கள் பாரிய தொகையை செலவழித்தாகவும் தெரிவித்தார். எனினும் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஊடகப் பிரச்சாரங்களுக்காக இந்த நிதியைப் பயன்படுத்தி வருவதாகவும் உலக ஊடகங்களின் மீது அழுத்தம் செலுத்தக் கூடிய அளவிற்கு புலிகளிடம் பணம் இருப்பதாகவும் குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ஷ இந்தப் பணத்தைக் கொண்டு இலங்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
03 நவம்பர் 2012
போர்க்குற்றம் புரிந்தவர்களை இலங்கையால் இனியும் காப்பாற்ற முடியாது.
டாவூர், கம்போடியா, ருவாண்டா, பொஸ்னியா போன்று இலங்கையிலும் போர்குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்று, அவுஸ்திரேலியாவின் முன்நாள் வெளியுறவு அமைச்சர் கரத் இவான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சென்ரர் பாக்(மைதானம்) அளவுதான் முழு முள்ளிவாய்க்காலுமே இருக்கும். ஒருபக்கம் கடல், மறுபக்கம் இலங்கை இராணுவம். இரண்டுக்கும் நடுவே 3லட்சம் தமிழ் மக்கள் மாட்டிக்கொண்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். மிகவும் குறைந்த அளவாகச் சொல்லப்போனால் 10,000 முதல் 40,000 ஆயிரம் பொதுமக்கள் அங்கே 2009ம் ஆண்டு கொல்லப்பட்டார்கள். ஆனால் உலகம் அதனை வேடிக்கை பார்த்தது. இன்று சிரியாவில் 1 வர் இறந்தால் கூடப் பெரிதுபடுத்திக் காட்டும் ஊடகங்கள் அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும்போது மெளனமாக இருந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனிதவுரிமை மாநாட்டில், இலங்கை தொடர்பான மேலதிக விவாதங்கள் நடைபெறவுள்ளது. இதனூடாக இலங்கை அரசுக்கு எதிராக மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக இவான்ஸ் மேலும் தெரிவித்தார். இதனூடாக இலங்கையில் போர்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இனி தப்பிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கனடா ஸ்காபரோவில் வசிக்கும் 16 வயதுடைய தமிழ் மாணவியைக் காணவில்லை!
கனடா, ஸ்காபரோ நகரில் நீல்சன் வீதி மற்றும் எஸ்மயர் வீதி சந்திப்புக்கருகில் வசிக்கும் 16 வயதுடைய தமிழ் மாணவி ஒருவரைக் காணவில்லையென அறிவித்துள்ள ரொறன்ரோப் பொலிஸ் அவரைக் கண்டுபிடிக்க உதவி கோரியுள்ளது. காயத்திரி வைத்திலிங்கம் என்ற 16 வயது மாணவியே காணாமல் போனாரென்றும் இவர் 5 அடி 5 அங்குலம் உயரமும் 150 இறாத்தல் எடையும் கொண்டவருமெனத் பொலிசார் தெரிவித்தனர்.
மண்ணிறக் கண்களும் கறுப்பு நிற அடர்த்தியான தலைமயிருமுடைய இந்த மாணவியின் பாதுகாப்புத் தொடர்பாக தாங்கள் கரிசனை கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தோர் 416.222.8477 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது www.222tips.com இணையத்திலோ தகவல்களைத் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.http://www.torontopolice.on.ca/newsreleases/24911
02 நவம்பர் 2012
ராதிகா சிற்சபையீசன் சிறந்த உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவம்!
ராதிகா சிற்சபைஈசன் 2012ன் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தெரியப்பட்டார். ஸ்காபரோ புதிய ஜனநாயகக்கட்சி பா. உ. ராதிகா சிற்சபைஈசன் (ஸ்காபரோ - ரூஜ் ரிவர்) 'நௌ' (NOW) சஞ்சிகையால் இன்று 2012ன் 'சிறந்த உள்ஊர்பாராளுமன்ற உறுப்பினர்' விருது வழங்கி மதிப்பளிக்கப்பெற்றார்.
'இந்த விருது பெறுவதையிட்டு நான் மிகுந்த பெருமையடைவதோடு ஆழ்ந்த நன்றியையும் தெரிவிக்கிறேன்" என தெரிவித்த ராதிகா சிற்சபைஈசன், "அதற்கு முக்கிய காரணம் இந்த விருதுக்காக எனக்கு வாக்களித்தவர்கள் ஸ்காபரோ மற்றும் ரொரன்ரோ பெரும்பாக மக்களே" என கூறினார்.
ரொரன்ரோவிலிருந்து வாராந்தம் வெளிவரும் 'நௌ' சஞ்சிகை, 'ரொரன்ரோவில் சிறந்தது' (Best of Toronto) என்ற பட்டியலை வருடாந்தம் வெளியிடுகிறது. அதிலே ரொரன்ரோ பெரும்பாகம் வாழ் மக்கள் பல்வேறு பிரிவுகளிலே தங்கள் தெரிவுக்கு வாக்களிக்கிறார்கள்.
கடந்த காலத்தில் 'சிறந்த உள்ஊர் பாராளுமன்ற உறுப்பினர்' விருது பெற்றவர்களிலே புதிய ஜனநாயகக்கட்சியை சேர்ந்த ஜக் லேய்ற்றன், ஒலிவியா சௌ ஆகியோரும் அடங்குகின்றனர்.
'நான் தொடர்ந்தும் ஸ்காபரோவாழ் மக்களுக்காக குரல்கொடுப்பேன்.
தரமான சுகநல பாதுகாப்பு, ஓய்வுகால காப்புறுதி, சமத்துவமும், பசுமையும், செல்வச்செழிப்பும் மிக்க தேசம் போன்ற கனேடிய மக்களிற்கு முக்கியமான விடயங்களுக்காக போராடுவேன்" என ராதிகா சிற்சபைஈசன் மேலும் கூறினார். இன்று ரொரன்ரோ நகர மத்தியில் இடம்பெற்ற காலை விருந்து நிகழ்வொன்றில் தனது விருதை ஏற்றுக்கொண்ட ராதிகா சிற்சபைஈசன் 'நௌ' சஞ்சிகைக்கும், வாக்களிப்பில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சர்ச்சையைக் கிளப்பியுள்ள பெண் புலியின் வாக்குமூலம்!
வித்யாராணி என்ற பெண்விடுதலைப் புலி ஒருவர் அளித்ததாக விகடன் வார இதழில் வெளியான நேர்காணல் குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
அந்தப் பேட்டியில் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், ஈழப் போராட்டம் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டுவிட்டதாகவும் வித்யாராணி கூறியுள்ளதை, திட்டமிட்ட இன விரோத செயல் என பல்வேறு ஈழ அமைப்புகளும் விமர்சித்துள்ளன.
தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டத்தை குலைக்கும் உளவியல் போர் இது என்று வர்ணித்துள்ளனர்.
ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை:வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்' என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி'யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி. உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!' என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார். எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம்பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம். ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி 'புக்காரா' விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், 'அவர்கள் தமிழர்கள்' எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர். என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது. சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன். நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்? தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன். பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது? 1985
ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி. பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார். ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடுதலைக்காகவும் போராடியவர். ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது! அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது? இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!
இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?
ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!
என்ன நடந்தது?
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் இரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர். அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன். எமது போராட்டத்தில் தோற்றுப் போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்று விட்டோம். எமது போராட்டம் தோற்றுப் போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தபோது, இராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன். எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியாவில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் இராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன். காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன். எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன். அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர். சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர். சோதியா படையணியில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர். காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. 'தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்' என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது. கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெற்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கைகொட்டி ரசித்தனர். அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர். பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர். எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்த வண்ணம் இருந்தேன்! விசாரணை சித்திரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்? சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத்தீவுக் காடுகளுக்குள் கொண்டு போய் விட்டனர். அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்! நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?
பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன. முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர். நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்து விடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது. பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு 'பால்... பால்' என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை! ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா? எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர். பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை. யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன். அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார். அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!
யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?
பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்திரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.
தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா? அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர். இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர்களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா? (
அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது) இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை. 'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்' என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்' என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப் போடுகின்றனர். எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு விட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?' என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன். (சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.) இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும். ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல்களைக் கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப்பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்! உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை 'விபசாரி' என விமர்சித்...' (கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) 'நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!
(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
படம், பேட்டி: விகடன்
ஐ.நா பாதுகாப்புப் பேரவை இலங்கை நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை: சூடான் குற்றச்சாட்டு
இலங்கை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை கவனம் செலுத்தவில்லை என சூடான் தெரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் கலந்து கொண்ட போது சூடானிய பிரதிநிதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற ஆயுத வன்முறைகள் அனுதாபத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
சூடானில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடாபில் ஜனாதிபதி ஒமர் அல் பஷாரிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இலங்கை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை கவனம் செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.01 நவம்பர் 2012
குற்றப் பிரேரணையில் கையெழுத்திடுவோர் அதிகார பகிர்விற்கு எதிரானவர்கள்!
"நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு திவிநெகும என்ற சட்டமூலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த சட்டமூலம் 13ஆம் திருத்தத்தை வலுவிழக்க செய்யும் நோக்கத்தை கொண்டது.
எனவே பிரதம நீதியசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான அரசாங்கத்தின் குற்றப் பிரேரணையில் கையெழுத்து இடுகின்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகார பகிர்விற்கு எதிரானவர்கள்" என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இந்த குற்றப் பிரேரணையில் இன்று வரை சுமார் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட்டுள்ளார்கள் என தெரிய வருகிறது.இந்த 120 பேரிலும் தொடர்ந்து கையெழுத்து போடப்போகின்றவர்களிலும் எத்தனை தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற போகின்றார்கள் என்று தமிழ் பேசும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த குற்றப் பிரேரணையில் கைச்சாத்திடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் மனதில் தமக்கு எதிராக தாமே குற்றப் பிரேரணையை நிறைவேற்றிகொள்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதில் இரண்டு கருத்துக்கு இடம் கிடையாது. பிரதம நீதியரசரை ஜனாதிபதி நியமிக்க முடியும். ஆனால், பதவி விலக்க முடியாது. அதனால் தான் இந்த குற்றப் பிரேரணை.
இதன் மூலம் அவரை பதவி விலகச் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த சிக்கல் அதிகார பகிர்வில் கை வைக்கும் சட்டமூலத்தால் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான தீர்ப்பு சபாநாயகரிடம் நாளை கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கின் ஒரு மனுதாரரான நான், நமது மனு மீதான விசாரணையின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கிறேன். எது எப்படி இருந்தாலும், இந்த விவகாரம் தமிழ் பேசும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. தமிழ் பேசும் மக்களுக்கே அதிகாரப் பகிர்வு அவசியப்படுகின்றது.
எனவே இந்த கட்டத்தில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப் பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். கையெழுத்து போடும் ஒவ்வொருவரையும் தமிழர்கள் தூர விலத்தி வைக்க வேண்டும். இந்த பிரேரணையில் தமிழ் உறுப்பினர்கள் கைச்சாத்திடுவது வரலாற்று துரோகமாகும்" என்றார்.குமரன் பத்மநாதனிடம் இந்தியா விசாரணை!
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
சீ.பி.ஐ. அதிகாரிகளும், இந்திய புலனாய்வுப் பிரிவு முகவர்களும் அண்மையில் இலங்கைக்கு சென்று குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ராஜீவ் கொலையுடன் தொடர்பு உண்டா என்பது குறித்து குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜீவ் கொலைத் திட்டம் தொடர்பில் குமரன் பத்மநாதன் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
எனினும், இந்தத் தாக்குதலுக்கான நிதி உதவிகள் எவ்வாறு கிடைக்கப் பெற்றன என்பது பற்றி தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட காலத்தில் இலங்கைக்கும் மலேசியாவிற்கும் விஜயங்களை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுடன் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருக்கக் கூடும் என இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் இலங்கை மற்றும் மலேசியாவிடம் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
31 அக்டோபர் 2012
இளையாராஜா இசை நிகழ்ச்சி ரத்து?
இலங்கைத் தமிழர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெறவிருந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர்-பாடகிகள் கலந்து கொள்ளவிருந்தனர். மிகப் பிரமாண்டமாக ரோஜர்ஸ் ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருந்தது. 30000 க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
ஆனால் இந்த இசை நிகழ்ச்சிக்கு கனடாவில் உள்ள தமிழர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நவம்பர் மாதத்தை விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக ஈழ தமிழர்கள் கடைபிடிப்பதால், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை வேறு மாதத்துக்கு மாற்றிக் கொள்ளுமாறு அவர்கள் கூறி வந்தனர்.
ஆனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் என இளையராஜாவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கூறினர்.
இதற்கிடையில், அமெரிக்காவை புரட்டிப் போட்ட சாண்டி புயல் காரணமாக விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கனடாவிலும் தட்பவெப்பம் சாதகமாக இல்லை.
இதைத் தொடர்ந்து வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாம். இளையராஜா நேற்று முன்தினம் இரவு கனடா புறப்படுவதாக இருந்தார். அந்த பயணத்தை அவர் ரத்து செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இளையராஜா தரப்பில் இதுகுறித்து எதுவும் கூறப்படவில்லை.வீட்டிற்குள் சக்தி வாய்ந்த குண்டு கண்டெடுப்பு!
ஆனந்தபுரம் பகுதியில் வீடொன்றிற்குள் மழை நீர் உட்புகுந்ததையடுத்து, வீட்டு உரிமையாளர் கொட்டிலின் கரையில் மண்ணை அணைத்து நீர் உட்புக முடியாமல் தடுக்க முயற்சித்த போது, மண்வெட்டியில் சிக்கிய ஒரு பொருளைக் கவனமாக எடுத்துப் பார்த்துள்ளார். அது ஏதோ ஒரு வகை வெடி பொருளைப் போன்று காணப்பட்டதனால் அதைக் கவனமாக வைத்து விட்டு உடனடியாக இராணுவத்தினருக்கும் எவ். எஸ். டி. என்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு விரைந்து வந்த எவ். எஸ். டி. நிறுவனத்தினர் அந்தக் குண்டைக் கவனமாக வீட்டில் அருகில் இருந்து தூரத்தில் வைத்து வெடிக்க வைத்தனர். அந்தப் பகுதியில் வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் தொலைவில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்பே மிகவும் சக்தி வாய்ந்த அந்தக் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அப்போது அது மிகவும் பெரிய சத்தத்துடன் வெடித்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
30 அக்டோபர் 2012
"நீங்கள் இங்க இருங்களன்; நானும் வாறன் கெதியா" 6 பிள்ளைகளின் தாயாரின் கண்ணீர் கதை!
இருப்பதற்கு ஓர் இடம் இல்லாமலும் பராமரிப்பதற்குப் பெற்ற பிள்ளைகள் முன்வராமையாலும் தனது நோய்வாய்ப்பட்ட கணவனை கைதடி வயோதிபர் இல்லத்தில் இணைத்தார் வயோதிப மனைவி. இப்படி ஒரு பரிதாபச் சம்பவம் கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது:
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்தவர்கள் இவர்கள். கணவரான ஜோண் திரவியத்துக்கு வயது 83. மனைவி திரவியம் இராசாத்தியம்மாவுக்கு வயது 75 இவர்களுக்கு 6 பிள்ளைகள் தம்மைப் பராமரிப்பதற்குத் தமது பிள்ளைகள் முன்வராமையால் வயது முதிர்ந்த நேரத்தில் தமது வாழ்க்கையை நடத்திச்செல்வதில் பெரும் சிரமப்பட்டனர்.
இவர்களுக்குத் தங்கியிருப்பதற்கு இருப்பிடமும் இருக்கவில்லை. இதனால் பெரிதும் அந்தரித்த நிலையில் இருந்து வந்தனர். சுகயீனமடைந்துள்ள தனது கணவரைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு முடியாமல் போனமையால் அவர் தனது கணவரையும் அழைத்துக் கொண்டு நேராகக் கைதடி அரச முதியோர் இல்லத்துக்குச் சென்றார்.
தானும் நோய்வாய்ப் பட்டுள்ள நிலையில் தனது கணவரைப் பராமரிக்க முடியாத நிலை உள்ளதாகவும், பிள்ளைகளும் தம்மைப் பராமரிக்க முன் வராமை காரணமாகத் தாங்கள் பெரிதும் துன்பப்படுவதாகவும் தெரிவித்த அந்த வயோதிபப்பெண் இல்ல அத்தியட்சகர் முன்பாக விம்மி விம்மி அழத்தொடங்கினார்.
அவர்களின் நிலையைக் கண்டு கொண்ட இல்லத்தின் அத்தியட்சகர் என்.கிருபாகரன் அவர்களுடைய விவரங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் வயது முதிர்ந்த கணவனான திரவியத்தை முதியோர் இல்லத்தில் இணைத்துக் கொண்டார்.
தனது கணவனை ஒரு இடத்தில் ஒப்படைத்து விட்ட மனத்திருப்தியுடன் முதியோர் இல்லத்தில் இருந்து வெளியேறும் போது, எனது கணவரை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். நான் எங்கேயாவது இருந்து வாழ்கிறேன்.
அடிக்கடி அவரை வந்து பார்த்துச் செல்வேன் யாரும் இல்லாவிட்டால் நானும் இங்கு வருகிறேன். என அழுதழுது கூறி விட்டுச் சென்றதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்த மாத முற்பகுதியில் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வுகளின் போது பெற்றோரைப் பிள்ளைகள் அன்பு, ஆதரவுடன் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இப்படி ஒரு சம்பவம் இடம் பெற்றமை மனவேதனை அளிப்பதாக இல்ல அத்தியட்சகர் மேலும் கூறினார்.
பிள்ளைகள் தமது பெற்றோரை இப்படி அநாதரவாக விட்டுச் செல்லும் நிலை எமது சமூகத்தில் அதிகரித்து வருவதாகவும் இந்த நிலையை மாற்றுவதற்கான விழிப்புணர்வைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்தப் பெற்றோரைக் கைவிட்டுள்ள 6 பிள்ளைகளும் வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வசிப்பதாகவும் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
பாருங்கள் இந்தப் பெற்றோருக்கு ஏற்பட்ட நிலைமையை.
மின்சார கம்பி அறுந்து வீழ்ந்ததால் பருத்தித்துறையில் மாணவன் பலி!
யாழ். பருத்தித்துறைப் பகுதியில் மின்சாரம் தாக்கி 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் (29-10-2012) நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை ஹாட்டிலிக் கல்லூரியில் கல்வி கற்கும் முஸ்தப்பா தயாபரன் என்ற மாணவனே உயிரிழந்தவர் ஆவார்.
தம்பசிட்டி முருகன் கோவில் ஒழுங்கையில் தயாபரன் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசி மின் ஏந்திச் சென்ற கம்பி அறுந்து அவர் மீது வீழ்ந்ததினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சடலம் பிரதேச பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
29 அக்டோபர் 2012
இசைஞானி இளையராஜா நிகழ்ச்சி தள்ளிப் போடப்பட்டால் மகிழ்வோம்– செந்தமிழன் சீமான்
தமிழ்த்தேசிய இனத்தின் இசை அடையாளமாகவும், அரைநூற்றாண்டாக தமிழர்களை தன் இசையால் மகிழ்வித்து வரும் அய்யா இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடா டொராண்டோவில் நவம்பர் மாதம் நடப்பதை அறிந்தது மனம் வருந்தி நவம்பர் மாதத்தை தவிர்த்து அக்டோபர் மாதத்திலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ வைத்துக்கொள்ள நாம் தமிழர் இயக்கம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழீழ விடுதலை போராட்டத்தில் நவம்பர் மாதம் புனிதமான மாதம். உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் எழுச்சி கொள்ளும் மாதம். நவம்பர் 27 தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக கொண்டாடப்படும் எழுச்சி நாள். இளமை நாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் விதைத்தவர்களை வணங்கும் நாள். மாவீர்ர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி என சூளுரைக்கும் நாள்.
அத்தோடு நவம்பர் 02, பிரிக்கேடியர் சுப. தமிழ்ச்செல்வன் எதிரியின் குண்டுவீச்சுக்கு இலக்காகி மரணித்த நாள். நவம்பர் 03 அடக்கம் செய்த நாள்.
இந்த நாள்களை உள்ளடக்கிய மாதத்தில் கேளிக்கை, கொண்டாட்டம் போன்றவற்றில் திளைத்திருக்க செய்து தமிழ் மக்களை அவர்களது விடுதலை வேட்கையில் இருந்து திசை திருப்பி விட இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முனைகிறது என்பதால் இந்நிகழ்ச்சிக்கும் நாம் தமிழர் கட்சி தன் எதிர்ப்பை பதிவு செய்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் செந்தமிழன் சீமானை சந்தித்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தாங்கள் அந்த நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுவதாகவும் அதற்குரிய உடன்பாட்டை இளையராஜாவிடம் இருந்து பெறப் போவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.
அய்யா இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி புலம் பெயர் மக்களிடத்தில் நடத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை, தமிழீழ விடுதலை போராட்டத்தின் முக்கிய மாதமான நவம்பர் மாதத்தில் நடத்துவதில் தான் முரண்பாடு ஆகவே நிகழ்வு வேறு மாதத்திற்கு தள்ளி வைக்கபட்டால் கட்டாயம் மகிழ்ந்து கைகோர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.
புலிகளை அழிக்க வஞ்சகம் செய்தவரே சொல்ஹய்ம்; விடுதலைப் புலிகள் அறிக்கை
மட்டக்களப்பில் தமிழ் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த அவலம்!
மட்டக்களப்பில் தமிழரான காவற்றுறை அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் புகுந்த பிக்கு ஒருவர், அவ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் வீட்டையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மட்டக்களப்பு - மங்கலராமய விகாரைக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது,
மட்டக்களப்பு நகரில் உள்ள மங்கலராமய விகாரைக்கு அருகில் தமிழ் மொழி பேசும் காவற்றுறை அதிகாரி ஒருவர் குடியிருந்து வருகிறார். குறித்த அதிகாரியும் அவரது மனைவியும் காவற்றுறை உப பரிசோதகராகக் கடமையாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மங்கலராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரர், குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மதில்களை அகற்றக்கோரியும் வீட்டை உடைக்ககோரியும் பல்வேறு தடவைகள் வீட்டின் மீது தாக்குதலும் நடத்தியுள்ளார்.
இந் நிலையில் நேற்று மாலை பிக்குவின் தலைமையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற சுமார் 06 பேர் கொண்ட குழுவினர் காவற்றுறை அதிகாரி வீட்டின் மதில், குளியல் அறை மற்றும் சமையலறைப் பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் குடும்பத்தினரையும் தாக்கமுற்பட்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த அதிகாரி, காவற்றுறையினரின் அவசர சேவைப்பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆயினும் காவற்றுறையினர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் உடனடியாக அருகில் உள்ள மட்டக்களப்பு காவற்றுறையினரிடம் சென்று முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு குறித்த அதிகாரி கோரியுள்ளார். எனினும் உயரதிகாரி இல்லையென குறித்த முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் தனது முயற்சியைக் கைவிடாத, அந்த அதிகாரி மட்டக்களப்பு மாவட்ட காவற்றுறை மா அதிபரின் வீட்டுக்கு சென்று முறையிடச் சென்றவேளை, அங்கு கடமையில் இருந்த காவற்றுறையினர் குறித்த அதிகாரி இல்லையென கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நீதவானிடம் சென்று தனது நிலைமை தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த காவற்றுறை அதிகாரி பாதுகாப்பு கருதி வேறு இடத்துக்கு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.புலம்பெயர் நாடுகளில் புலிகளின் நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை என்கிறார் கோத்தபாய!
இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் மனிதக் கடத்தல்கள் என்பவற்றில் ஈடுபட்டுவரும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் புலிகளின் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு லக்ஷ்மண் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற இளம் தலைவர்கள் சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். இதன் ஒரு கட்டமாக புலிகளுடன் பல சுற்றுப் பேச்சுகளும் இடம்பெற்றன. ஆயினும் இந்தப் பேச்சு வார்த்தைகளின்போது எட்டப்பட்ட உடன்படிக்கைகளை மீறி மக்களுக்கு எதிரான தாக்குதல்களில் புலிகள் ஈடுபட்டனர்.
ஆயினும் பலமான தலைமைத்துவம், மக்களின் ஆதரவு, சிறந்த திட்டமிடல் வெளிநாடுகளில் பெற்றுக் கொண்ட பயிற்சி என்பவற்றின் மூலம், மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டு புலிகளை இல்லாதொழித்தோம்.
இதன் போது இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களின் நல்வாழ்வில் அக்கறை செலுத்திய அரசு, அனைவரையும் தற்போது மீள்குடியமர்த்திவிட்டது. படையினரிடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இறுதிப் போரின் போது தப்பிச் சென்ற சில புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்து புலம்பெயர் மக்களைத் தவறான வழியில் தூண்டி விடுகின்றனர்.
குறிப்பாக இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனிதக் கடத்தல்கள் என்பவற்றின் பின்னணியில் உள்ள இந்தப் புலி உறுப்பினர்களின் செயற்பாடுகளைத் தடுக்க அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.28 அக்டோபர் 2012
கனடாவில் பாரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது!
கனடாவின் மேற்கு கடலோரப் பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மாஸ்ஸெட் நகரில் இருந்து 139 கிலோ மீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுவித்திருக்கிறது.
இதுவரை சேத விவரம் எதுவும் தெரியவில்லை.
ஆனந்தபுரத்தில் குண்டு வெடித்து சிறுமி பலி!
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆனந்தபுரம் என்னுமிடத்தில் குண்டொன்று வெடித்ததில் பத்து வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். ஆனந்தபுரம் 5 ஆம் வட்டாரத்தில் உள்ள பச்சை புல்மோட்டை என்னுமிடத்தில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றிருப்பதாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
இந்தப் பகுதியில் மீள்குடியேறியுள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரன் தனது காணியில் மண்டிக்கிடந்த புல்லை வெட்டிச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காகச் சென்ற அவரது சகோதரியாகிய ஜோசப் நிக்கலஸ் நிஷாந்தினி என்ற சிறுமியே இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிக்கியுள்ளார்.
படுகாயமடைந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அவர் மரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெடிப்புச் சம்பவத்தின்போது வீட்டில் சமையலில் ஈடுபட்டிருந்த 28 வயதான அவரது மற்றுமொரு சகோதரி, சிதறிச் சென்ற குண்டின் பாகம் ஒன்று தாக்கியதில் காயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அயலவரான பெண் ஒருவர் தெரிவித்தார்.
வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர், உயிரிழந்த சிறுமி மண்ணில் கொத்திய அடையாளத்துடன் கிடந்த கத்தி ஒன்றைக் கண்டெடுத்துள்ளதுடன், இந்தக் கத்தியினால் பொருள் ஒன்றை கொத்தியபோதே குறித்த குண்டு வெடித்திருக்க வேண்டும் என்று ஊகம் தெரிவித்திருப்பதாக அயலவர்கள் கூறுகின்றனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பல கிராமங்களில் பற்றைகள் மற்றும் புற்களை வெட்டிச் சுத்தம் செய்யும்போது பொது மக்களால் கண்டெடுக்கப்படுகின்ற பல வகையான வெடிப்பொருட்களை இராணுவத்தினர் அகற்றிச் செல்வதாகவும், இதனால் தமது வாழ்க்கை ஆபத்து மிக்கதாக இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர்.
ஒரு சிறுமியை பலிகொண்டுள்ள இந்தச் சம்பவம் வெடிப்பொருட்கள் தொடர்பான மக்களின் அச்ச உணர்வை மேலும் அதிகரித்திருப்பதாக அந்தப் பிரதேச மக்கள் கூறினர்.
இலங்கை கப்பல்களை தடுத்து நிறுத்தியது அமெரிக்கா!
ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்கா பச்சை விளக்கை காட்டும் வரை இலங்கையால் ஈரானிடம் இருந்து எவ்வித மசகு எண்ணெய் கொள்வனவையும் மேற்கொள்ளமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தமது ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரவில்லை.
எனினும் அமெரிக்க தடை காரணமாக, இலங்கையை சிறிய கப்பல்களை அனுப்புமாறு ஈரான் கோரியது. அதற்கமைய கப்பல்களும் அனுப்பப்பட்டன. எனினும் ஈரான் செல்லும் கப்பல்களுக்கு காப்புறுதியை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் முன்வர மறுக்கின்றன.
இதன் காரணமாக ஈரானுடன் வங்கி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாதுள்ளது என்றும் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
27 அக்டோபர் 2012
புகலிட கோரிக்கையாளர்கள் 14 பேர் திருப்பியனுப்பப்பட்டனர்!
புகலிட கோரிக்கையாளர்கள் 14 பேரை அவுஸ்திரேலியா திருப்பியனுப்பியுள்ளது என அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
தங்காலை - குடாவெல்ல பகுதியில் மீன்பிடி படகை கடத்திய நபர்களுக்கே புகலிடம் மறுக்கப்பட்டு மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த 14 பேரும் மீனவர்கள் சிலரை நடுகடலில் வைத்து கொலை செய்துவிட்டு அவர்களின் படகை கடத்தி; சென்றதாகக் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
படகு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலியாவிற்கு அறிவித்திருந்தது. இதன்பிரகாரமே படகு மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோர முற்பட்டவர்களை அந்நாட்டு குடிவரவு குடியழகழ்வுத் திணைக்களம் நாடு கடத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியில் வைத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகை கடத்திய குறித்த 14 புகலிடக் கோரிக்கையாளர்களும் கொகோஸ் தீவுகளிலிருந்து விசேட விமானம் மூலம்; நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த படகு கடந்த 13ம் திகதி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இனப்பிரச்சனைக்கான தீர்வை அரசுதான் இழுத்தடிக்கின்றது.
13 ஆவது திருத்தச் சட்டத்தையே இல்லாதொழிக்குமாறு கடும் போக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் நியாயமான தீர்வு கிடைப்பதனை ஜனாதிபதி உறுதிப்படுத்தாத நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தெரிவுக்குழுவில் இணையமுடியும் எனவும் தீர்வை இழுத்தடிப்பது அரசே ஒழிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல எனவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்காமல் காலம் கடத்தும் செயற்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே பொறுப்பு என அரச தரப்பு தெரிவித்து வரும் கருத்து தொடர்பாகவே புளொட் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்று அரசில் அங்கம் வகிக்கும் கடும் போக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இந்தக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் நிலையில் நியாயமான தீர்வு எவ்வாறு கிடைக்கும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியாயமான தீர்வு திட்டம் எதையும் இதுவரையில் முன்வைக்கவில்லை.இவ்வாறானதொரு நிலைமையில் தெரிவுக்குழுவில் எவ்வாறு இணையமுடியும்.
வெளிச்சமூகத்தினால் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாக நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசு, எவ்வாறு தான் முன்வைக்கும் தீர்வில் தமிழர் நலன்சார் விடயங்களை முன்வைக்கும் எனவும் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முஸ்லிம்களின் மத்ரஸா அநுராதபுரத்தில் தீக்கிரை!
அனுராதபுரம், மல்வத்தை சிங்கனுவ பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் மத்ரஸா ஒன்று இன்று அதிகாலை எரிச்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத குழு ஒன்றே இதனைச் செய்ததாகத் தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளார்கள்.
முஸ்லிம் மக்கள் இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த மதரசா எரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 20:20 அடி பரப்பைக்கொண்ட இந்த மத்ரஸா தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளையும் மற்றும் அறநெறி வகுப்புகளையும் நடத்தி வந்த தற்காலிக கற்கை நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமயகம் உறுதி செய்துள்ளது.
இத் தீவிபத்து சம்பவத்தினால், ஹாட்போட் மட்டைகளால் மறைக்கப்பட்ட நிலையில் இயங்கி வந்த மேற்படி கற்கை நிலையம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். இச்சம்பவம் அநுராதபுரத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
26 அக்டோபர் 2012
பாம்புகளுடனும் கண்ணிவெடிகளுக்கிடையிலும் வாழும் மீள் குடியேற்றப்பட்ட மக்கள்!
இலங்கையில் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்து, இறுதியாக தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பாம்புகள், வெடிப்பொருட்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருதாகக் கூறுகின்றார்கள்.
மிகமோசமான சண்டைகள் நடைபெற்ற புதுக்குடியிருப்பு நகரப் பகுதியிலும், கிராமங்களிலும் உள்ள பல வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
பாம்புத் தொல்லை:
கிராமங்களில் அழிந்து கிடக்கின்ற வீடுகள் கட்டிடங்களின் இடிபாடுகள், காணிகளில் படர்ந்துள்ள பற்றைகள், காடுகள் என்பவற்றில் பாம்புகள் நிறைந்திருப்பதாக மீள்குடியேறியுள்ளவர்கள் கூறுகின்றார்கள்.
மோசமான ஒரு வறட்சியின் பின்னர் மழை பெய்யத் தொடங்கியிருப்பதை அடுத்து பாம்புத் தொல்லை அதிகரித்துள்ளது, அதேவேளை, பற்றைகள், புல் வளர்ந்துள்ள இடங்கள், காடாகக் கிடக்கின்ற காணிகளில் கண்ணிவெடிகள் மற்றும் பலதரப்பட்ட வெடிப்பொருட்கள் என்பன அகற்றப்படாமல் கிடப்பதனால், காணிகளில் நடமாடுவது ஆபத்தானதாக இருக்கிறது என்றும் அவர்கள் கவலைப்படுகின்றார்கள்.
மிதிவெடிகள்:
கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்பே, இந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், கண்ணிவெடிகள் காணிகளில் முழுமையாக அகற்றப்படவில்லை என்று மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
தங்கள் காணிகளில் தாங்கள் பற்றைகள், காடுகளை அழித்துச் சுத்தம் செய்யும்பொது வெடிப்பொருட்கள் காணப்படுவதாகவும், இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக அங்கு விரைந்து வருகின்ற இராணுவத்தினர் அவற்றை எடுத்துச்செல்வதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.
இந்தக் கண்ணிவெடி ஆபத்து குறித்து கருத்து வெளியிட்ட எஃப்.எஸ்.டி என்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் ஹார்ட்நட் தொம்ஸ், இங்கு ஒவ்வொரு சதுர மீட்டர் நிலமும் ஆய்வு செய்யப்பட்டு, கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்றும், வீடுகள், கிணறுகளின் உட்பக்கங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமே கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதாகக் கூறினார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களை குறிப்பிட்ட திகதிக்குள் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கண்ணிவெடிகளை அகற்றி குறிப்பிட்ட பிரதேசங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுக்கு கொடுக்கின்ற அழுத்தம் காரணமாகவே இவ்வாறு தாங்கள் கண்ணிவெடி அகற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
"கண்ணிவெடி அகற்றியவர்களினால் கண்டுபிடித்து அகற்றப்படாத கண்ணிவெடிகள் வெடிப்பொருட்கள் தமது காணிகளில் இருக்கின்றன, அதனால் அங்கு வெடிப்பொருள் ஆபத்து இருக்கின்றது என்று மீள்குடியேறியுள்ள ஒவ்வொருவரும் நன்கு அறிவார்கள். அதேவேளை, தமது நிறுவனம் கண்ணிவெடி அகற்றிய புதுக்குடியிருப்பு மேற்கு, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடி அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை" என்று ஹார்டநட் தொம்ஸ் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், மீள் குடியேற்றப்பட்டுள்ள பகுதிகளிலும் கண்ணிவெடி அகற்ற வேண்டியிருக்கின்றது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.(செய்தி ஆதாரம் பி.பி.சி)
25 அக்டோபர் 2012
கிளிநொச்சியில் மேலும் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் படைகள்!
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் சுமார் 21 காணித்துண்டுகளை இராணுவத் தேவைகளுக்கு வழங்குமாறு கோரப்பட்டு கரைச்சிப் பிரதேச செலயகத்துக்கு இராணுவத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆனைவிழுந்தான்குளம், வன்னேரிக்குளம், ஸ்கந்தபுரம், இரத்தினபுரம், திருவையாறு, கணேசபுரம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள், மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுக்கு சொந்தமான சுமார் பதினேழு காணித்துண்டுகள் தற்போது இராணுவத்தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றதுடன் அவற்றை தமக்கு வழங்குமாறும் விண்ணப்பித்துள்ளனர்.
அதற்கு மேலதிகமாக 4 காணித் துண்டுகளையும் தமக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இராணுவத்தினரால் விண்ணப்பிக்கப்பட்ட காணித்துண்டுகளை வழங்குவதற்கு சில அரச அதிகாரிகள் விருப்பம் தெரிவிப்பது மட்டுல்லாமல், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா.சட்டங்களுக்கு முரணான மீள்குடியேற்றம்!
ஐக்கிய நாடுகளின் விதிகளுக்கு முரணாக இலங்கையில் தமிழ் மக்கள் வற்புறுத்தப்பட்டு மீழ் குடியேறம் செய்யப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உள்ளக இடம்பெயர்ந்தோர்க்கான இயக்குனர் கூறியுள்ளார். அடுத்த மாதம் அளவில் இலங்கை வரவுள்ள அவர், இலங்கையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களின் சொந்த இடங்களில் அல்லாது பிற இடங்களில் மீழ் குடியேற்ற செய்யப்பட்ட மக்களையும் பார்வையிடுவார் என அறிய முடிகின்றது.
தமிழருடன் பேச சிங்கள எம்பிக்கள் ஐரோப்பா விஜயமாம்!
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ளனராம்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் வசந்த சேனாநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரே ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ளவர்களாம்.புலம் பெயர் தமிழர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் புலம்பெயர் தமிழர்களை இணைத்துக் கொள்வதற்கும், முரண்பாடுகளை களைவதற்கும் இந்த விஜயம் வழிகோலும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.இந்த விஜயத்தின் இறுதியில் பரிந்துரை அறிக்கையொன்று அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.இதேவேளை உலகத்தமிழர் பேரவை சிறீலங்கா அரசுடன் எவ்வித பேச்சுக்களிலும் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
24 அக்டோபர் 2012
முதலமைச்சர் வேட்பாளர் டக்ளஸா கேப்பியா?அரசுக்குள் முரண்பாடு!
வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆலோசகர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை வடமாகாணத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென அரசின் முக்கியமான சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனராம் அதேசமயம், ஈ.பி.டி.பி. தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை முதலமைச்சர் வேட்பாளராக ஆளுங்கட்சி நியமிக்க வேண்டுமென மற்றுமொரு சாரார் வலியுறுத்திவருகின்றனராம்,இந்த இருவரும் மாகாணசபைத் தேர்தலைக் குறிவைத்து காய்களை நகர்த்திவருவதால் ஆளுங்கட்சிக்குள் இது விடயத்தில் கடும் பனிப்போர் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் களத்தில் இறங்கும் முதற்கட்ட வேலையாகவே கடந்த வாரம் முதல் கே.பி. மக்களுடன் நெருங்கும் நடவடிக்கைகளில் இறங்கிவருவதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னணி காரணமாகவே, கே.பி. எதுவித குற்றமுமற்றவர் என அரசின் முக்கிய பிரமுகர்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.எது எப்படியோ தமிழ் மக்களை பொறுத்தளவில் இவர்கள் எவரையும் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதே உண்மை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

































