பக்கங்கள்

27 அக்டோபர் 2012

இனப்பிரச்சனைக்கான தீர்வை அரசுதான் இழுத்தடிக்கின்றது.

13 ஆவது திருத்தச் சட்டத்தையே இல்லாதொழிக்குமாறு கடும் போக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் நியாயமான தீர்வு கிடைப்பதனை ஜனாதிபதி உறுதிப்படுத்தாத நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தெரிவுக்குழுவில் இணையமுடியும் எனவும் தீர்வை இழுத்தடிப்பது அரசே ஒழிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல எனவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்காமல் காலம் கடத்தும்  செயற்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே பொறுப்பு என அரச தரப்பு தெரிவித்து வரும் கருத்து தொடர்பாகவே புளொட் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்று அரசில் அங்கம் வகிக்கும் கடும் போக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இந்தக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் நிலையில் நியாயமான தீர்வு எவ்வாறு கிடைக்கும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியாயமான தீர்வு திட்டம் எதையும்  இதுவரையில் முன்வைக்கவில்லை.இவ்வாறானதொரு நிலைமையில் தெரிவுக்குழுவில் எவ்வாறு இணையமுடியும். வெளிச்சமூகத்தினால் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாக நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசு, எவ்வாறு தான் முன்வைக்கும் தீர்வில் தமிழர் நலன்சார் விடயங்களை முன்வைக்கும் எனவும் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.