நோர்வேயின் சிறுவர் காப்பகத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் அதனிடமிருந்து தமது பிள்ளைகளை விடுவித்துக்கொள்ளும் வகையிலும் இலங்கைத் தாய்மாரினால் ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 10ஆவது நாளான இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
ஒஸ்லோவில் அமைந்துள்ள டொம் தேவாலயத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த ரஜித்தா ஆனந்தராசா மற்றும் டிலாந்தினி எரிக் ஜோசப் ஆகியோரிடம் டொம் தேவாலய நிர்வாகம் எழுத்து மூலமான உத்தரவாதம் அளித்துள்ளதை அடுத்து இந்த உண்ணாவிரப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம் இருந்து வந்த தாய்மாரிடம் பேச்சுக்களை நடத்திய டொம் தேவாலய நிர்வாகம் தாம் இவ்விடயம் தொடர்பில் நோர்வே அரசினதும் சிறுவர் நல அமைச்சினதும் அதேநேரம் சிறுவர் நல காப்பகத்தினதும் கவனத்திற்கு கொண்டுவருவதாக உறுதியளித்ததுடன் எழுத்து மூல உத்தரவாதமும் கொடுத்துள்ளது.
இதேவேளை உண்ணாவிரதம் நடைபெற்ற தேவாலயத்திற்கு சென்ற இலங்கை தூதுவர் குறித்த தாய்மாருடனும் ஆலய நிர்வாகத்துடனும் பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தமது பிள்ளைகளை மீட்டுக்கொள்ளவதற்காக சாகும்வரை மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் தேவாலய நிர்வாகத்தின் உத்தரவாதத்தின் மூலம் வெற்றியடைந்திருப்பதாக சம்பந்தப்பட்டோர் தெரிவித்துள்ளனர். நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
10 அக்டோபர் 2012
ஒஸ்லோவில் இலங்கை தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
நோர்வேயின் சிறுவர் காப்பகத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் அதனிடமிருந்து தமது பிள்ளைகளை விடுவித்துக்கொள்ளும் வகையிலும் இலங்கைத் தாய்மாரினால் ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 10ஆவது நாளான இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
ஒஸ்லோவில் அமைந்துள்ள டொம் தேவாலயத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த ரஜித்தா ஆனந்தராசா மற்றும் டிலாந்தினி எரிக் ஜோசப் ஆகியோரிடம் டொம் தேவாலய நிர்வாகம் எழுத்து மூலமான உத்தரவாதம் அளித்துள்ளதை அடுத்து இந்த உண்ணாவிரப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம் இருந்து வந்த தாய்மாரிடம் பேச்சுக்களை நடத்திய டொம் தேவாலய நிர்வாகம் தாம் இவ்விடயம் தொடர்பில் நோர்வே அரசினதும் சிறுவர் நல அமைச்சினதும் அதேநேரம் சிறுவர் நல காப்பகத்தினதும் கவனத்திற்கு கொண்டுவருவதாக உறுதியளித்ததுடன் எழுத்து மூல உத்தரவாதமும் கொடுத்துள்ளது.
இதேவேளை உண்ணாவிரதம் நடைபெற்ற தேவாலயத்திற்கு சென்ற இலங்கை தூதுவர் குறித்த தாய்மாருடனும் ஆலய நிர்வாகத்துடனும் பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தமது பிள்ளைகளை மீட்டுக்கொள்ளவதற்காக சாகும்வரை மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் தேவாலய நிர்வாகத்தின் உத்தரவாதத்தின் மூலம் வெற்றியடைந்திருப்பதாக சம்பந்தப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.