காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து கொழும்பு பெரியாஸ்பத்திரி 50ம் வாட்டுக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதியை ஜனநாயக மக்கள் முன்னனித் தலைவர் மனோகணேசன்,கட்சி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா,பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோர் சுரேசின் மனைவி கவிதா மற்றும் அவருடைய மகனுடன் சென்று பார்த்த பின் 50ம் வாட்டின் முற்பகுதியில் கலந்துரையாடுவதை படத்தில் காணலாம். மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்க்கைதி சுந்தரம் சதீஸ் அவர்கள் வழக்கு ஒன்றிற்காக காலி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வழக்குத்தவணையின் பின் காலி கராப்பிடிய வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. மனைவி கவிதா சுரேஸ் அவர்கள் தனது கணவரை கொழும்பு பெரியவைத்தியசாலைக்கு மாற்றித் தரும்படி ஜனநாயக மக்கள் முன்னனித் தலைவர் மனோகணேசனிடம் கேட்டுக்கொண்டதிற்கினங்க மனோகணேசன் சிறைச்சாலை புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர அவர்களுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றித் தரும்படி கேட்டதற்கினங்க கொழும்பு பெரியவைத்தியசாலை 50ம் வாட்டுக்கு மாற்றப்பட்டார். கொழும்புக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஸ் அவர்களை ஜனநாயக மக்கள் முன்னனித் தலைவர் மனோகணேசன் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன சென்று பார்த்தபோது அவர் தலையில் பாரிய கட்டுப்போடப்பட்டுள்ளதுடன் கண்விழித்திருந்தாலும் வருபவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலையிலும் அவரின் கால் சங்கிலியால் கட்டிலுடன் இணைக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. கடமையில் இருந்த டாக்டருடன் தொடர்பு கொண்டு விபரம் கேட்டபோது மூளையில் இரத்த ஒழுக்கு ஏற்பட்டு அதிகூடிய இரத்த அழுத்தம் காரணமாகவும் மூளைத் தொழிற்பாடு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கண்விழித்திருந்தாலும் கூட மற்றவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
30 ஆகஸ்ட் 2012
தமிழ் அரசியல் கைதியான சதீசை மனோ கணேசன் பார்வையிட்டார்.
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து கொழும்பு பெரியாஸ்பத்திரி 50ம் வாட்டுக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதியை ஜனநாயக மக்கள் முன்னனித் தலைவர் மனோகணேசன்,கட்சி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா,பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோர் சுரேசின் மனைவி கவிதா மற்றும் அவருடைய மகனுடன் சென்று பார்த்த பின் 50ம் வாட்டின் முற்பகுதியில் கலந்துரையாடுவதை படத்தில் காணலாம். மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்க்கைதி சுந்தரம் சதீஸ் அவர்கள் வழக்கு ஒன்றிற்காக காலி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வழக்குத்தவணையின் பின் காலி கராப்பிடிய வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. மனைவி கவிதா சுரேஸ் அவர்கள் தனது கணவரை கொழும்பு பெரியவைத்தியசாலைக்கு மாற்றித் தரும்படி ஜனநாயக மக்கள் முன்னனித் தலைவர் மனோகணேசனிடம் கேட்டுக்கொண்டதிற்கினங்க மனோகணேசன் சிறைச்சாலை புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர அவர்களுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றித் தரும்படி கேட்டதற்கினங்க கொழும்பு பெரியவைத்தியசாலை 50ம் வாட்டுக்கு மாற்றப்பட்டார். கொழும்புக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஸ் அவர்களை ஜனநாயக மக்கள் முன்னனித் தலைவர் மனோகணேசன் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன சென்று பார்த்தபோது அவர் தலையில் பாரிய கட்டுப்போடப்பட்டுள்ளதுடன் கண்விழித்திருந்தாலும் வருபவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலையிலும் அவரின் கால் சங்கிலியால் கட்டிலுடன் இணைக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. கடமையில் இருந்த டாக்டருடன் தொடர்பு கொண்டு விபரம் கேட்டபோது மூளையில் இரத்த ஒழுக்கு ஏற்பட்டு அதிகூடிய இரத்த அழுத்தம் காரணமாகவும் மூளைத் தொழிற்பாடு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கண்விழித்திருந்தாலும் கூட மற்றவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.