பக்கங்கள்

14 பிப்ரவரி 2018

மக்களுடன் மாத்திரமே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூட்டு-காண்டீபன்!


தமிழ்த் தேசியக் கொள்கைக்காக கட்டியெழுப்பப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏனைய கட்சிகள் இணைந்து பயணிக்க தயாராக வேண்டும்.  உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவையாக போட்டியிட்டு இரண்டு சபைகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அந்தக் கட்சியின் பிரமுகர் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கொள்கைக்காக கட்டியெழுப்பப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏனைய கட்சிகள் இணைந்து பயணிக்க தயாராக வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவையாக போட்டியிட்டு இரண்டு சபைகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அந்தக் கட்சியின் பிரமுகர் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழரசுக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள், தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் பொதுக்கொள்கை ஒன்றை வகுத்து தனிக்கட்சியாக செயற்பட வேண்டும் என வெளியான செய்தி தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே காண்டீபன் இவ்வாறு தெரிவித்தார். ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேர முடியாது என்றும், மக்களோடு மாத்திரமே தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டுச்சேரும் என்றும் காண்டீபன் குறிப்பிட்டார். 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை ஏமாற்றி கொள்கைகளையும் கைவிட்ட கட்சிகளை மீண்டும் கூட்டு என்ற பெயரில் சேர்த்துக்கொள்வது மக்கள் ஆணைக்கு செய்யப்படும் துரோகமாகும். வரலாற்று ரீதியாக தவறிழைத்த கட்சித் தலைவர்கள் இன்றும் பதவிக்காக ”கூட்டு“ என்ற பெயரிலும், பொதுக்கொள்கை என்ற அடிப்படையிலும் ஒன்றுசேர நினைப்பதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறிய அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் முன்னணிக்கு அளித்த வாக்குகளுக்கும், மக்கள் ஆணைக்கும் ஒருபோதும் துரோகமிழைக்காது. நீண்டகாலமாக தேசியத்திற்காக போராடி தேர்தல்கள் பலவற்றில் தோல்வியைக்கண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் தற்போது அடையாளம் கண்டு, வாக்களித்துள்ளனர். சலுகைகளுக்காகவும், வரப்பிரசாதங்களுக்காகவும் தேசியத்தை விலைபேசிய ஏனைய கட்சிகள் பொதுக் கொள்கை என்ற போர்வையில் குளிர்காய்ந்து மீண்டும் தமது பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ள முற்படுவதை ஏற்கமுடியாது. தமிழ் தேசியத்தை நிலைநாட்டி தமிழர்களின் இறைமையை உறுதிப்படுத்த நினைக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகள் விரும்பினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து பயணிக்க வேண்டும். மாறாக பொதுக்கொள்கை அடிப்படையிலும், பொதுச் சின்னமொன்றிலும் புதிய கட்சியாக பதிவுசெய்து செயற்படுவதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது. இளைஞர்களையும் அதாவது, புதிய இரத்தங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைத்து தேசியத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக பயணிப்பதே ஆரோக்கியமான அரசியல் என்றும் காண்டீபன் கூறினார்.

வடக்கு முதல்வருடன் முன்னணியினர் சந்திப்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் உடன் பங்கேற்றிருந்தனர்.மரியாதையின் நிமிர்த்தம் குறித்த சந்திப்பு நிகழ்ந்ததாக இரு தரப்புத் தகவல்களும் தெரிவித்துள்ள போதும்  உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்று கட்சிகள் ஆட்சியமைப்பத்தில் இக்கட்டான தொங்கு நிலை ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் குறித்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் மிக்க சந்திப்பாகப் பார்க்கப்படுகின்றது.

12 பிப்ரவரி 2018

முன்னணியின் எழுச்சியையும் கூட்டமைப்பின் வீழ்ச்சியையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன!

தானியங்கு மாற்று உரை இல்லை.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாவட்டத்தில் மொத்தமாக இருந்த 416 ஆசனங்களில் 84 ஆசனங்களை பெற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டாவது கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி உள்ளது. ஆசன விகிதத்தில் கூட்டமைப்பு 36% வீதத்தினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 20%வீதத்தினையும் பெற்றது. வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 104513 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 64580 வாக்குகளையும் பெற்றுள்ளன.81 ஆசனங்களை பெற்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 3ஆவது இடத்தை தக்கவைத்தது. நான்காவது இடத்தை 32 ஆசனங்களைப் பெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், 25 ஆசனங்களை பெற்ற ஐக்கியதேசியக்கட்சி 5ஆவது இடத்தையும், 21 ஆசனங்களை பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி 6வது இடத்தையும் பெற்றன. மாவட்ட ரீதியாக தனித்து ஒரு கட்சி பெற்ற அதி கூடிய 150 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றாலும், அதற்கு எதிராக இறங்கிய ஏனைய கட்சிகள் சுயேட்சைகள் 266 ஆசனங்களைப் பெற்றுள்ளன. இந்த வகையில் யுத்தத்தின் பின்னரான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை போன்று இதுவரை சவால்களை எதிர்கொள்ளவில்லை. உள்ளூராட்சி தேர்தல் தமிழ்த்தேசிய முன்னணியின் எழுச்சியாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரிவாகவும் அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்காலில் மௌனிக்கும் வரையும், பிரதான தேசியக் கட்சிகள் இரண்டும் யாழ் மாவட்டத்தில் தனித்து நிலைகொள்ள முடியாத நிலை நிலவியது. அதன் பின்னரான காலப்பகுதியில் இரண்டு கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்றார். இருந்த போதும் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு பேரினவாதக் கட்சிகளுக்கும் முறையே 32 – 25 என்ற வகையில் 57 ஆசனங்களை பெற்றுள்ளன. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 81 ஆசனங்களை பெற்று தன்னை மீள் நிர்மானம் செய்திருக்கிறது. 2 தசாப்தங்களாக ஆளும் அரசுகளோடு ஆட்சியில் பங்கெடுத்து தமிழ் தேசியத் தரப்புகளால் துரோகப் பட்டியலில் இணைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகளில் இருந்து வெளிவந்து, தமது வீணைச் சின்னத்தில் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை நிரூபித்து அதன் பின்னரான 3 வருட காலப்பகுதியில் மக்களின் ஊடான அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார். மறுபக்கம் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சுரேஸ்பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எவ் அணி பாரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 21 ஆசனங்களையே பெற்றிருக்கிறது. வடமாகாண அமைச்சர் ஒருவரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும், மாகாண சபை உறுப்பினர்களையும் கொண்ட சுரேஸ் பிறேமச்சந்திரனின் தமிழ்த் தேசியப் பிடிப்பிற்கும், அரசியல் தொடர்ச்சிக்கும் இந்த ஆசன எண்ணிக்கை மிகக் குறைவானதே. இந்தக் கட்சிகளைத் தாண்டி சுயேட்சைகள் தமது தனிப்பட்ட ஆளுமைகளை பிரபல்யத்தை முன்னிறுத்தி 23 ஆசனங்களை பெற்றிருக்கிறார்கள்.

10 பிப்ரவரி 2018

கொள்கை வென்றது!புளியங்கூடலில் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பெரும் வெற்றி!

இன்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உந்து உருளி(சைக்கிள்)சின்னத்தில் போட்டியிட்ட கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பெரும் வெற்றியீட்டியுள்ளார்.அவரது வெற்றிக்காக பாடுபட்ட அனைவரும் பெரும் மகிழ்வில் திளைத்துள்ளனர்.புளியங்கூடல் மண் விழாக்கோலம் பூண்டுள்ளது,வெடிச்சத்தங்கள் முழங்க இளைஞர்கள் பவனி வந்துகொண்டு இருக்கின்றார்கள்.ஞானேஸ்வரனின் வெற்றியானது அவரதும் அவர் சார்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸினதும் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.சமூக சேவையாளரான ஞானேஸ்வரன் தான் பெற்றிருக்கும் இந்த வெற்றியின் மூலம் தனது கடமையை சரிவர ஆற்றுவார் என்ற நம்பிக்கை அவரது தொகுதி மக்களிடையே மிகுந்து காணப்படுகின்றது.பண பலம் இல்லை கொள்கையே முக்கியம் தன்மானமே முக்கியம் என்பதை புளியங்கூடல் மக்கள் தமது வாக்குகளால் அடித்து சொல்லியிருக்கிறார்கள்.இந்த தருணத்தில் புளியங்கூடல் மக்களுக்கு புளியங்கூடல்.கொம் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.அங்கிருந்து உடனுக்குடன் செய்திகளை வழங்கிய செய்தியாளர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.புலம்பெயர் தேசத்தில் இருந்தும் தனிப்பட்ட ரீதியில் சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டவர்களுக்கும் நன்றிகள்.உந்து ஊர்தியில்(சைக்கிள்)கேட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.உரிமைக்கான போராட்டம் தொடரும் மக்கள் சக்தியோடு.

09 பிப்ரவரி 2018

சுவிசில் இலங்கை இளைஞர் அடித்துக் கொலை!

சுவிட்சர்லாந்தில் 19 வயதுடைய இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் உள்ள அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாமில் கடந்த புதன்கிழமை காலை 9.25 மணியளவில், இந்தச்சம்பவம் இடம்பெற்றது. அதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் எப்படி நடந்தது, என்ன காரணம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

07 பிப்ரவரி 2018

இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவுக்கு வருகின்றன!

Bildergebnis für voteஉள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல் பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள 276 பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் உள்ளிட்ட 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பே அன்றையதினம் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் இடம்பெறவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.தேர்தல் பிரசாரங்களுக்கான, சிறுசிறு கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஆதரவு திரட்டும் வீட்டுத் தரிசனம், ஒலிபெருக்கி உள்ளிட்ட சாதனங்கள் மூலமான பிரசாரம் யாவும் இன்று நள்ளிரவு 12 மணியுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்” என தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார். இம்முறை வாக்களிப்புகள், 13, 400 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறப் போகின்றன. இத்தேர்தலின் ஊடாக, உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்காக, இம்முறை மொத்தமாக 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். பதிவு செய்யப்பட்டவற்றில் 43 அரசியல் கட்சிகளும், 272 சுயேச்சைக் குழுக்களும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கலாக 57,252 அபேட்சகர்கள் போட்டியிடுகின்றனர். நடைபெறப் போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 2017ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 15,760,867 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

04 பிப்ரவரி 2018

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், கேப்பாபுலவிலும், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காகக் கடந்த வருடம் மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம், இன்று 339ஆவது நாளாகவும் தொடர்கிறது. போராட்டம் மேற்கொள்ளும் ஒருவர் கறுப்பு உடையணிந்து, பரண் மீது ஏறி உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும், சுதந்திர தினத்தை எதிர்த்து மௌன விரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தார். சுதந்திர தினத்தை எதிர்க்கிறோம், வெறுக்கிறோம் எனத் தெரிவித்து, தமது போராட்ட இடமெங்கும் கருப்பு கொடிகள் கட்டி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளை என்பவர், கடந்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தபோது, மக்களின் காணிகள் விடுவிக்க வேண்டும் எனக் கூறி கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கேப்பாபுலவு மாதிரிக் கிராம பிள்ளையார் ஆலயத்தில் சிவபூசை ஒன்றை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சிவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்த அவர், பிலவுக்குடியிருப்பு காணி விடுவிக்கப்பட்ட கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு பூர்விக வாழ்விடம் முழுமையாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக வாயிலில் கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தார். அவரது போராட்டம் இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், கறுப்பு உடையணிந்து பரண் மீது ஏறி, உணவு தவிர்ப்புப் போராட்டத்மையும், சுதந்திர தினத்தை எதிர்த்து மௌன விரத போராட்டத்தையும் முன்னெடுத்தார். இதேவேளை, “இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது” எனத் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவில் இன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டி வீதியில் பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக, கடந்த 346ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், 70ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையிலேயே, இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தினமான இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கறுப்பு உடையணிந்து, தலையில் கறுப்புப் பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 350 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் உறவுகள், எமக்கு எந்த தீர்வும் கிடைக்கபெறவில்லை என்றும் இந்த சுதந்திர தினத்தை எங்களால் கொண்டாட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

02 பிப்ரவரி 2018

பிடல் காஷ்ரோவின் மகன் தற்கொலை!

கியூபா புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோவின் மூத்த மகன் பிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியாஸ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டார். கடந்த பல மாதங்களாக மன அழுத்த சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை (வெள்ளிக்கிழமை), கியூபாவில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 68. அண்மையில்தான் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடு திரும்பியபோதும் அவர் தொடர் சிகிச்சையிலேயே இருந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி சடங்கு அவரது குடும்பத்தினரால் முடிவு செய்யப்படும் என்றும், மேற்கொண்டு எந்த தகவலும் இல்லை என்றும் உள்நாட்டு ஊடங்கள் கூறுகின்றன.

01 பிப்ரவரி 2018

'ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு'அடித்து சொல்கிறார் ரணில்!


நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருக்கிறது. ஆனால்,  ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கிறது. ஆனால், ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.“ஒன்றையாட்சிக்குள் தான் நாம் இருக்க வேண்டும். அதற்காக, அதிகாரங்களைப் பகிரக் கூடாதெனக் கூறவில்லை. ஒற்றையாட்சிக்குப் பங்கம் ஏற்படாத வகையில், அதிகாரங்கள் பகிரப்படல் வேண்டும்.அப்போது தான் தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கலாம்” என்றும் ரணில் தெரிவித்திருக்கிறார்.

31 ஜனவரி 2018

கோயிலில் பிரச்சாரம் உந்து உருளிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஆலய குருக்கள்மாருக்கும் எதிராக வலிவடக்கு பிரேதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போது 20ஆம் வட்டாரம் மல்லாகம் பகுதிக்கான வேட்பாளருமான சோ.சுகிர்தன் அவர்களால் அரசியல்க் காழ்ப்புணர்ச்சியுடன் இந்து மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்கு கௌரவ மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கில் சட்டத்தரணிகள் குருபரன், காண்டீபன், ஜெயரூபன், பார்த்தீபன், ஜோய் மகிழ் மகாதேவா, லலிதாஸ் சர்மா,சுபாஷ்கரன், றோய், கீர்த்தனா, தனுஜா, கஸ்தூரி,சுகாஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்மோடு கூட இருந்து எம்மை வழிப்படுத்தும் எல்லாம் வல்ல இறைவனிற்கு நன்றிகள். எம்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டமையை கேள்வியுற்ற நொடிப்பொழுது முதல் நல்ல தீர்ப்பு வரும்வரை எமக்காக இறைவனைப் பிரார்த்தித்த நல்லுள்ளங்களிற்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பிலும்,தனிப்பட்ட முறையிலும் நன்றிகளைப் பகிர்கின்றேன். மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்தில் தேர்தல் விதிமுறையினை மீறியவகையில் செயற்பட்டதாகக் குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிவடக்கு வேட்பாளர் சோ.சுகிர்தன் அவர்கள் பெலீசாரிடம் சமர்ப்பித்த புகைப்படங்களை இத்தால் வெளிப்படுத்துகின்றேன். ஆலய வழிபாட்டினை கொச்சைப்படுத்திய நயவஞ்சகர்களுக்கு சரியான பாடம் புகட்ட அணிதிரள்வோம். மாற்றத்திற்காய் வாக்குகளை வழங்கி எதிர்கால சந்ததி நிம்மதியாய் தலைநிமிர்ந்து வாழ வழிகாட்டுவோம்.இவ்வாறு தாயுமானவர் நிகேதனின் முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் சாப்பிடுகின்றனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவு

28 ஜனவரி 2018

புலித்தேவனின் சகோதரர் பாலதயாகரன் மாரடைப்பினால் மரணம்!

தமிழீழ சமாதான செயலகப் பொறுப்பாளராக விளங்கிய புலித்தேவன் அவர்களின் சகோதரர் இன்று மாரடைப்பால் காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.யாழ்,தும்பளை
சிவப்பிரகாசா வித்தியாலயத்தில் கணித ஆசிரியராக கடமையாற்றி வந்த சீவரெத்தினம் பாலதயாகரன் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானதாகவும் இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

26 ஜனவரி 2018

உந்து உருளிப் பக்கம் மக்கள் பார்வை திரும்பியதால் பெரும் அச்சத்தில் பிற கட்சிகள்!

நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.இம்முறை மக்கள் பார்வை அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின் உந்து உருளிப் பக்கம் திரும்பியுள்ளதால் பிற கட்சிகள் மிகவும் கலங்கிப்போய் இருக்கிறார்கள்.தமிழ் மக்களின் வாக்குகளில் பதவிக்கு வந்தவர்கள் சிங்கள அரசின் கைப்பொம்மையாக மாறியிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேவை மக்களால் நன்கு உணரப்பட்டிருக்கிறது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு மக்கள் மத்தியில் நாளாந்தம் அதிகரித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத பிற கட்சியினர் தோல்வி பயத்தில் இருப்பதோடு உந்து உருளி சின்னத்தில் போட்டியிடுபவர்களை எப்படி ஓரம் கட்டலாம் என பல வழிகளிலும் சிந்தித்து குழப்பத்தில் மூழ்கியிருப்பதாக அறிய முடிகிறது.தமக்கிருக்கும் அரச பலத்தை பயன் படுத்தி பொய்க்குற்றச் சாட்டுகளில் உந்து உருளி சின்ன வேட்பாளர்களை சிறைக்குள் தள்ளப்போவதாக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.மக்களின் பலத்தை மட்டுமே நம்பி களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அம்மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை மக்கள் அவர்களுக்கு அளிக்கும் வரவேற்பின் மூலம் காண முடிகின்றது.இது வெறும் வீதி திருத்தத்திற்கான தேர்தல் இல்லை தமிழ் மக்களின் விதியை தீர்மானிக்கும் போர் என்பதை ஒவ்வொரு தன்மானத் தமிழனும் உணர்ந்திருக்கிறான் என்பது உண்மை.பேரமற்ற நேர்மையான அரசியலுக்கு உந்து உருளிக்கு வாக்களிப்போம்,உரிமைகளை வென்றெடுக்க ஓங்கிக் குரல் கொடுப்போம்.

24 ஜனவரி 2018

காணாமல் போனோரை புலிகள்தான் கடத்தினார்கள் என்று சுமந்திரன் சொல்ல வருகிறாரோ?

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் மூலமாகவே காணாமல் போனோருக்கு ஒரு தீர்வு வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், சர்வதேச விசாரணைகள் நடைபெறுவதற்கு இந்த சட்டத்தில் இடமிருக்கின்றது. இதில் செஞ்சிலுவை சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. எனினும், காணாமல் போனோர் விடயத்திலும், சிறையில் உள்ளவர்களை விடுவிப்பது தொடர்பிலும் அரசாங்கத்திற்கு பல அழுத்தங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனோர் விடயத்தில் “இராணுவத்திடம் எமது உறவுகளை கையளித்தோம்.” என்று வடக்கில் உள்ளவர்கள் கூறும் போது, “இராணுவத்திற்கு தண்டனை வாங்கி கொடுக்கப்போகின்றார்கள்” என்ற கருத்து தெற்கில் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அண்மையில் தான் படித்ததாக ஒரு கருத்தையும் சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.அதில் “இறுதி யுத்தத்தில் தனது மகளை விடுதலைப்புலிகள் கொண்டு போய்விட்டார்கள்.” என அந்த தாய் குறிப்பிட்டுள்ளார். அந்த தாயே தனது மகளை விடுதலைப்புலிகள்தான் கொண்டு சென்றார்கள் என கூறுகின்றார். ஆகவே விடுதலைப்புலிகள் கொண்டு சென்றவர்களில் அனைவருமே உயிருடன் வரவில்லை. ஆகவே காணாமல் போனவர்கள் விடயத்தில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இராணுவத்தினர் கொண்டு சென்றவர்கள் மட்டுமல்லாது வேறு விதத்திலும் காணாமல் போனவர்களின் விபரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு ஒரு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

22 ஜனவரி 2018

சம்பந்தன் முடியாவிட்டால் விட்டுப்போ-கஜேந்திரகுமார் ஆக்ரோஷம்!

Ähnliches Fotoநடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையைப் பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள். எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள் என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தெரிவித்துள்ளார்.வவுனியா பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியப்பேரவையின்  செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரசார கூட்டத்தில் மிகவும் ஆவேசமாக உரையொன்றை ஆற்றியுள்ளார். அவர் தனது உரையில், “எமது விடுதலை போராட்டமானது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்ட போது இந்த போராட்டத்தை ஒரு விடுதலைப்போராட்டமாக வெளியுலக்குக்கு கொண்டுச் சென்றதோடு இப்போராட்டத்தை பயங்கரவாதமாக கொச்சைப்படுத்த எண்ணிய தரப்புக்கும் அது பெரும் சவாலாகவே இருந்தது.ஆயுதப் போராட்டம் பலம் பொருந்தி வந்த காலத்தில் ஜனநாயக தலைமை என்னுடைய தந்தையின் கைகளுக்கு மாறிவிடும் என்ற பயத்தில் அவரை சுட்டுக்கொலை செய்தார்கள். ஆகவே எங்களுக்கு தியாகம் என்றால் என்ன என்று தெரியும். இலட்சக்கணக்கான மக்கள் உயிரைக்கொடுத்தது ஒற்றையாட்சிக்கு ஆதரவளிப்பதற்காக அல்ல. அவ்வாறெனின் எப்பொழுதே இலட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியிருக்கலாம். உயிர்போனாலும் பரவாயில்லை சரணடையாது இப்போராட்டம், முள்ளிவாய்க்காலில் போய் முடிந்தமையானது எட்டு வருடங்கள் கழித்து நாங்கள் இந்த இலட்சியத்தை கைவிடுவதற்காக அல்ல. சம்பந்தனுக்கு முடியா விட்டால் விட்டு போ. வேறு யாரும் வருவார்கள். நாங்கள் வருவோம் எங்களுக்கென்று ஓர் அணுகுமுறை உள்ளது. நாங்கள் சர்வதேச அரசியலை படித்தவர்கள். எங்களது மக்களது உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக ஒரு திட்டம் எங்களிடம் இருக்கின்றது.முழங்கால் இட்டு கெஞ்சிக்கொண்டு போவதுதான் உனது பாதையென்றால் நீ போ. இதை விட்டு போங்கள். எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள். தியாகத்தின் உச்சமான இந்த மண்ணில் இருந்து கேட்கின்றேன் நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையை பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள்” என்றார்.

21 ஜனவரி 2018

நாளை தபால் மூல வாக்களிப்பு!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது என்று தேர்தல் ஆணைய பணிப்பாளர் நாயகம் ஆர்.எல்.ஏ.எம். இரத்நாயக்க தெரிவித்துள்ளார். “நாளை, 22 ஆம் திகதி, காவல் நிலையங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், தேர்தல் செயலகங்களில், தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும். ஏனைய அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ஆம், 26ஆம் நாள்களில் இடம்பெறும். இம்முறை சுமார் 560,000 அரச பணியாளர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

18 ஜனவரி 2018

எம்மீதான தாக்குதல்களுக்கு பதிலடி 11ம் திகதி-மணிவண்ணன்!

தமிழ்த் தேசியப் பேரவையைத் தோற்கடிப்பதற்காக அரச இயந்திரம் முழுமையாக களமிறக்கப்பட்டுள்ளது. தேர்தல் திணைக்கள அதிகாரிகளே எமக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணம் இளைங்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாரோ ஒரு தரப்பு தோற்றுப் போய்விடக்கூடாது என்பதற்காகவே அரச இயந்திரம் எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது. இதுவரை காலமும் வென்று கொண்டிருந்த ஒரு தரப்பு அரசுக்குத் தேவையான தரப்பாக இருக்கின்றது. அரசைக் காப்பாற்றுகின்ற ஒரு தரப்பாக இருக்கின்றது. அரசைக் காப்பாற்றுகின்ற ஒரு தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால்தான் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்துக்குக் கூட தடை விதிக்கப்பட்டது. அரச இயந்திரத்தையும் பொலிஸாரையும் கொண்டு சட்டத்தை மீறாத எங்களது தேர்தல் பிரச்சாரங்களின் மீது தடையை ஏற்படுத்தி நாங்கள் தேர்தல் பிரச்சாரங்களை விட்டு நீதிமன்றங்களிலே காலத்தைச் செலுத்த வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தங்களை உருவாக்குகின்ற செயற்பாட்டில் அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்ற ரத்னஜீவன் எச்.ஹூல் என்பவர் இதுவரை முறைப்பாடு செய்த ஒரே கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள். அவருடைய முழுநேரப் பணி எங்களுடைய கட்சி என்ன செய்கின்றது, அதனை எவ்வாறு தடுக்கவேண்டும் என்பதுதான். எங்கள் மீது பெப்ரவரி 10 ஆம் திகதிவரை நீங்கள் தாக்குதலை நடத்துங்கள். 11 ஆம் திகதி உங்கள் மீது தாக்குதல் தொடங்கப்படும். அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருங்கள் என்றார்.

17 ஜனவரி 2018

சம்பந்தனின் பொங்கல் வாழ்த்து செய்தி ஏமாற்று வித்தை-கஜேந்திரகுமார்!

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இறையாண்மை மதிக்கப்பட்டு சுயாட்சியுடன் கூடிய தீர்வினை பெறுவோம் என பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பது நகைப்புக்குரியது. இந்த ஏமாற்று வேலையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.2017ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ம் திகதிக்கு முன்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு சமஷ்டி, சுயநிர்ணய உரிமை, வடகிழக்கு இணைப்பு, இறையாண்மை போன்றவற்றினடிப்படையில் தீர்வு கிடைக்க வேண்டும் என கூறியிருந்தது. மேலும் இவற்றுக்கு எதிராக ஒரு தீர்வு வருமாக இருந்தால் அதனை எதிர்ப்போம் என கூறியிருந்தார்கள். ஆனால் இன்று இலங்கை அரசாங்கத்துடன் பங்காளிகளாக மாறி புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்து, அதில் ஒற்றையாட்சியை அங்கீகரித்து வடகிழக்கு இணைப்பை மறந்து, பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்திருக்கிறது. அதற்கு மேலாக தாம் இணங்கிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு மக்கள் ஆணை வழங்கவேண்டும் என மக்கள் மத்தியில் இன்றைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரச்சாரமும் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர் உள்ளக சுயநிர்ணய உரிமை எனவும், சுயாட்சி எனவும், இறைமை மதிக்கப்பட்டு எனவும் கூறுவதை நகைப்புக்குரிய ஒரு கருத்து என கூறுவதில் தவறு எதுவும் இருக்காது. மேலும் உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதே ஒரு மோசமான விடயம்.இருந்தும் ஒரு பேச்சுக்கு உள்ளக சுயநிர்ணயம் என சொன்னால் இடைக்கால அறிக்கையில் இறைமை பகிரப்பட முடியாதது என கூறப்பட்டுள்ளது. சமஷ்டி இல்லை என்கிறது இடைக்கால அறிக்கை. இந்த லட்சணத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமை, இது மதிக்கப்படல், சுயாட்சி என்பனற்றை இரா.சம்மந்தன் எங்கே எடுக்கப்போகிறார்? ஆக மொத்தத்தில் சம்மந்தனின் இந்த உரை நகைப்புக்குரியது. நொந்துபோய் கிடக்கும் தமிழ் மக்களின் தொண்டைக் குழியை நெரிக்கும் வகையிலான ஒரு கருத்தாகும் என்றார்.

13 ஜனவரி 2018

யாழில் மண்பானை விற்பனை இம்முறை அதிகரிக்கும் என நம்பிக்கை!

யாழ்ப்பாணம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் தைப்பொங்கல் பண்டிகை களைகட்ட ஆரம்பித்துள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையை அண்டியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மண்பானைகளின் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.மண்பானைகளில் சிறிய பானையொன்று 150 ரூபாவாகவும், அதற்கு அடுத்துள்ள தரத்திலான பானைகள் 500 ரூபா, 550 ரூபா, 600 ரூபா ஆகிய பல்வேறு விலைகளிலும் விற்பனையாகின்றன. கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவிலான மண்பானைகள் விற்பனையாகுமென வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர் என செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 ஜனவரி 2018

தேர்தல் களம் நோக்கி புளியங்கூடல் மண்ணின் மைந்தன்!

புளியங்கூடல் மண்ணின் மைந்தனும் சமூக சேவையாளருமாகிய கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள் இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்றார்.சொந்த ஊரான புளியங்கூடலின் 8ம் வட்டாரம் ஜே/59 ஜே/60 பிரிவில் முதன்மை வேட்பாளராக களம் இறங்குகிறார் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள்.கொள்கைப்பற்றோடும் தேசிய உணர்வோடும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சியும் தமிழ் மக்களின்  நம்பிக்கையின் சின்னமுமான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரோடு இணைந்து பயணித்து வரும் ஞானேஸ்வரன் அவர்கள் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சின்னமான உந்து உருளி சின்னத்தில் தமிழ்த்தேசிய பேரவையின் கீழ் தேர்தல் களம் நோக்கி வந்திருக்கின்றார்.இந்த கொள்கை பற்றாளனை வெற்றி பெறசெய்வது தாய் மண்ணில் பற்றுக்கொண்ட ஒவ்வொருவரதும் கடமையாகும்.கேதீஸ்வரன் ஞானேஸ்வரனின் வெற்றியை ஒவ்வொருவரும் இன்றே உறுதி செய்து கொள்வோம்.10.02.2018ல் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

05 ஜனவரி 2018

பெற்ற தாயை மாடியிலிருந்து தள்ளிக் கொன்ற பேராசிரியர்!

son kiled motherஉடல்நிலை சரியில்லாத தாயைச் சொந்த மகனே மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.சந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பென் (Jayshreeben) பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஜெயாஸ்ரீ மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவல்துறை சந்தீப்பிடம் விசாரித்தபோது தன் தாய் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளார். ஜெயாஸ்ரீயின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஜெயாஸ்ரீயின் உடல்நிலையைப் பார்க்கும்போது அவர் தானாக நடந்து சென்று மாடியிலிருந்து கீழே குதிக்க வாய்ப்பில்லை’ என்று மருத்துவர்கள் போலீஸிடம் தெரிவித்துள்ளனர். இதனால் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. சந்தீப் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜெயா ஸ்ரீ பலியான அன்று சந்தீப் ஜெயாஸ்ரீயை வலுக்கட்டாயமாக மாடிக்கு இழுத்து செல்கிறார். சிறிது நேரத்தில் சந்தீப் மட்டும் மாடியிலிருந்து கீழே இறங்கிவந்து தன் வீட்டுக்குள் சென்று தாழிட்டுக்கொள்கிறார். சற்று நேரத்தில் ஒருவர் வந்து சந்தீப் வீட்டின் கதவைத் தட்டி ஜெயா ஸ்ரீ கீழே விழுந்துகிடப்பதைத் தெரிவிக்கிறார். சந்தீப்பும் எதுவுமே தெரியாததுபோல் ஓடுகிறார். இந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து சந்தீப்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கு சந்தீப்பின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். உடல்நிலை சரியில்லாதத் தாயைக் கவனித்துக் கொள்வதில் ஏற்பட்ட சலிப்பே தாயை கொலை செய்யத் தூண்டியுள்ளது என்று அக்கம்பக்கத்தினர் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.

04 ஜனவரி 2018

தான் மட்டுமே படித்தவன் என சுமந்திரன் நினைக்கிறார்!-சுரேஷ்

தமிழ் மக்களுக்கு படிப்பறிவில்லை, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு படிப்பறிவில்லை, ஊடகவியலாளர்களுக்கு படிப்பறிவில்லை, நீதியரசர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு படிப்பறிவில்லை, நான் மட்டுமே படித்தவன், மேதை என்னும் தோரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசியிலமைப்பு இடைக்கால அறிக்கை பற்றி பேசிக் கொள்கின்றார். மேற்கண்டவாறு தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஷ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், புதிய அர சியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் எல்லாமே இருக்கிறது. ஆனால் அதனை எவரும் படிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார். அவருடைய கருத்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் படிப்பறிவில்லாதவர்கள், சிவில் சமூகத்தினர்படிப்பறிவில்லாதவர்கள், மக்கள் படிப்பறிவில்லாதவர்கள், முதலமைச்சர் நீதியரசர் சீ.வி. விக்னேஷ்வரன் படிப்பறிவில்லாதவர் ஒட்டுமொத்தத்தில் நாங்கள் அனைவரும் அடி முட்டாள்கள் தான் மட்டுமே படித்தவன், மேதை என்பதே அதன் பொருள். இதனை விட அவ ர் கூறுகிறார் சமஷ்டி பெயர் பலகை இல்லை. ஆனால் சமஷ்டி இருக்கிறது. நன்றாக புகுந்து பார்க்கவேண்டுமாம். சுமந்திரன் மக்களை எந்த நிலையில் வைத்து பார்க்கிறார் என்பதற்கு இது சிறந்த உதாரணம். வடகிழக்கு இணைப்பை பற்றி பேசுகிறார். அதாவது வடகிழக்கு இணைப்புக்கு 3 யோசனைகள் கூறப்பட்டுள்ளதாம். அதுதான் வடகிழக்கு இணைப்புக்கான வழி. ஜனாதிபதியும், பிரதமரும் மிக தெளிவாக சொல்கிறார்கள். வடகிழக்கு இணைப்பு தொடர்பாக 73 தடவைகள் கூடிய வழிகாட்டல் குழுவில் ஒன்றுமே பேசப்படவில்லையென. ஆனால் வடகிழக்கு இணைப்புக்கு 3 யோசனைகள் உள்ளதாம் சுமந்திரன் சொல் கிறார். எனவே மக்கள் தீர்மானிக்கவேண்டும் இங்கே ஜனாதிபதி பிரதமர் பொய்யர்களா ? சுமந்திரன் பொய்யனா? என்பதை. எங்கள் பார்வையின் படி ஜனாதிபதியும் பிரதமரும்தங்கள் மக்களுக்கு உண்மை சொல்கிறார்கள். தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தமது மக்களுக்கு பொய்யை மட்டுமே சொல்கிறார்கள். நாங்கள் சொன்னோம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் வடகிழக்கு இணைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியா சென்று அரசிடம் கேளுங்கள். அரசு கேட்காவிட்டாலும் அங்குள்ள ஊடகங்கள் கேட்கும் அதன் ஊடாக இந்தியாக கேட்கும் இந்தியாக கேட்டால் இலங்கை அரசு அதனை கேட்கும் என சொன்னோம். அதற்கு சம்மந்தன் எமக்கு சொன்ன பதில் சிங்கள மக்களை பகைத்து கொண்டு நான் இந்தியா செல்லமாட்டேன் என்பதே. இந்த லட்சணத்தில் சுமந்திரன் எங்களை கேட்கிறார் முடிந்தால் வடகிழக்கை இணைத்து காட்டுங்கள் பார்ப்போமாம். இதனை விட மோசமான பேச்சு புதிய அரசியலமைப்பு உருவாக்க பணியில் அரைவாசி தூரம் பயணித்து விட்டார்களாம். அரைவாசி தூரம் பயணித்து என்ன சாதித்தீர்கள்? கொழும்பு-07ல் உல்லாச பங்களா, எஸ்.ரி.எப் பாதுகாப்பு. பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை, இதுதான் சாதித்தது. மக்கள் இதனால் அடைந்த பயன் ஒன்றுமில்லை. எனவே மக்கள் இந்த தடவை மாற்றம் ஒன்றை நிச்சயமாக கொண்டுவரவேண்டும் என்றார்.

01 ஜனவரி 2018

முதலமைச்சரை விமர்சிப்பது கூட்டமைப்பின் அந்தரநிலையை காட்டுகிறது-கஜேந்திரகுமார்!

Bildergebnis für கஜேந்திரகுமார் பொன்னம்பலம்பத­விக்­கா­கவே வடக்கு முத­ல­மைச்­சர் தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்பின் தலை­மையை விமர்­சிக்­கின்­றார் என்று கூறி­னால் அதை சிறுபிள்ளை கூட ஏற்­காது என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்னணியின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரிவித்தார்.தமிழ்த் தேசிய மக்­கள் பேர­வை­யின் வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்­தும் நிகழ்வு நேற்று வட்­டுக்­கோட்­டை­யில் உள்ள பேரவையின் அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரிவித்தபோது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். தமிழ் தேசி­யக் கூட்டமைப்புக்கு விசு­வா­ச­மாக இருந்­தி­ருந்­தால் அடுத்த தலைமையாக அவர் இருந்­தி­ருப்­பார். முத­ல­மைச்­சர் சம்­பந்­தனை வீழ்த்தி தலை­மைப் பத­வியை பெற­வேண்­டும் என நினைக்கவில்லை.சம்­பந்­தன் மீது ஒரு­வித நன்­றிக்­க­டன் இருப்பதால்தான் இப்­போ­தும் ஒரு நிலைப்­பாட்­டுக்கு வராது இன்­றும் அமை­தி­யாக இருக்­கின்­றார். தமிழ் மக்­களை சுமத்­தி­ரன் மட்­டும் அழிக்­க­வில்லை, சம்­பந்­தனும் சேர்ந்து அழித்­துக் கொண்டிருக்கின்றார்.முத­ல­மைச்­சர் ஒரு பக்­கத்­தில் எழு­திய அறிக்கைக்கு பத்து பக்­கத்­தில் தமி­ழ­ர­சுக் கட்சி பதிலை வழங்கியுள்ளது என்­றால் அவர்­கள் எந்­த­ள­வுக்கு அந்­த­ரத்­தில் உள்ளனர் என விளங்­கு கின்­றது.தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் இடைக்­கால அறிக்­கை­யில் உள்ள விட­யங்­களை வீடு வீடாக சென்று மக்­கள் மத்­தி­யில் பொய்­யான பரப்­பு­ரை­களை மேற்­கொண்டு குழப்பப் போகின்­ற­னர். தமிழ் மக்­கள் இந்த விட­யத்­தில் தெளிவடைய வேண்­டும். அபி­வி­ருத்தி என்ற பெய­ரில் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் இந்த தேர்­த­லில் வெற்­றி­யீட்­டி­னால் சர்­வ­தேச மட்டத்தில் தமிழ் மக்­கள் தமக்கு ஆத­ரவு உள்­ளது என்று வெளிக்காட்டி அர­ச­மைப்பை நிறை­வேற்ற உத்­தே­சிக்­கின்­ற­னர் என்பதையும் கஜேந்திரகுமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

29 டிசம்பர் 2017

மாணவன் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி!

உயர்தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமையினால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த மாணவரே விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.வர்த்தகப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவன் தனது சக மாணவர்களை விடவும் குறைந்தளவு மதிப்பெண்களை பெற்றதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.மாலை வேளையில் மாணவனது அறையில் அழுகுரல் கேட்டதாகவும்,ஓடிச்சென்று பார்த்தபோது மாணவன் வாந்தி எடுப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றதாகவும்,மாணவனது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

27 டிசம்பர் 2017

வெற்றி பெற்றால் ஊதியமின்றி பணி-மணிவண்ணன்.


உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். யாழ். மாநகரசபையின் துணை முதல்வர் வேட்பாளராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆரோக்கியநாதன் தீபன்திலீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கட்சித் தலைவர் கஜேந்திரகுமாார் பொன்னம்பலத்தினால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து உரையாற்றிய யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் “எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவை வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிடுகின்றது. தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம்வகிக்கின்ற பல பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து போட்டியிடுகின்றன. இவற்றுடன் 10 பொது அமைப்புக்களின் கூட்டான தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் நம்பிகள் நல்வாழ்வுக் கழகம் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் ஆகியன இணைந்து போட்டியிடுகின்றன. இவற்றைவிட வேறு பல அமைப்புக்களும் எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. அவ் அமைப்புக்களின் யாப்பின் அடிப்படையில் பகிரங்க அரசியல் ஆதரவு வழங்க முடியாது என்பதால் அவற்றின் விபரங்களை உத்தியோகபூர்வ விபரங்களை வெளியிட முடியாதுள்ளோம். இந்தத் தேர்தலிலே நாங்கள் தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம். தூய கரங்கள் என்கின்ற பொழுது நாங்கள் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டு யாழ் மாநகரசபையினைக் கைப்பற்றுவோமாக இருந்தால் எந்தவிதமான கறையும் படியாத இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத இலஞ்ச ஊழலை முற்றாக ஒழிக்கின்ற ஒரு சபையை நாங்கள் உருவாக்கி நிர்வகிப்போம். தூய நகரம் என்கின்ற பொழுது தூய்மையான காற்று தூய்மையான நீர் தூய்மையான நிலம் என்கின்ற விடயங்களை யாழ் மாநகருக்குள் அமுல்படுத்துவோம். இலங்கையின் முன்மாதிரியான நகரமாக யாழ். நகரம் மாற்றியமைக்கப்படும். இத்திட்டங்களை ஏனைய பிரதேச சபைகளுக்கும் அமுல்ப்படுத்துவோம். எமது ஆட்சியில் இன, மத, சாதி பாகுபாடுகள் இன்றிய ஒரு சமத்துவ நிலை பேணப்படும். நாங்கள் சபைகளைக் கைப்பற்றினால் எங்களுக்கு வாக்களிக்காத பிரதேச மக்களது பிரதேசங்களினது அபிவிருத்திக்கும் முன்னுரிமையளிப்போம்சகல பிரதேசங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும். நாங்கள் சபைகளைக் கைப்பற்றும் பட்சத்தில் சபைக்குத் தெரிவு செய்யப்படும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து திட்டங்களை வகுத்து பணியாற்றுவோம். அவர்கள் மாற்றுக்கட்சிக்காரர்கள் என்ற ஒதுக்கல் நிலைப்பாடு நீக்கப்படும். நான் மாநகரசபையின் முதல்வராக தேர்ந்தொடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாது பணியாற்றுவேன். மாநகரசபையினூடாக எனக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும். அதிலிருந்து ஒரு சதம் கூட எனக்கென எடுக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகின்றேன்.முன்னைய சபைகளை ஆட்சிசெய்தவர்கள் போல எங்களுக்குள்ளே அடிபட்டுக்கொண்டு நீதிமன்றம் செல்லாத மிகக் கட்டமைக்கப்பட்ட நேர்த்தியான சபையை உருவாக்கி வழிநடத்திச் செல்வோம். கடந்த ஆட்சியில் தமது கட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டதே அதிகம் காணப்பட்டது. மற்றைய கட்சிகளில் ஆசனப் பங்கீடு தொடங்கும்போது அடிபாடு தொடங்கிவிட்டது. அவர்கள் ஆட்சியமைத்தால் இந்த அடிபாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். உடனடியாக சாத்தியமில்லாதபோதிலும் அதனை இலக்காக வைத்து யாழ் நகரைக் கட்டியெழுப்புவோம். அதற்கென அந்நாடுகளின் நிபுணத்துவ ஆலோசனைகள் பெறப்படும். நிதிக் கையாளுகைகளுக்காக பொருத்தமான நிபுணர்களிடமிருந்த ஆலோசனைகள் பெறப்பட்டு குழுக்கள் நியமிக்கப்படும்.யாழ். நகரை சர்வதேச நகரம் ஒன்றுடன் இணைத்து.. இங்குள்ள கட்டமைப்புக்களைப் பலப்படுத்துவோம். நாங்கள் என்னென்ன விடையங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவோம் என்கின்ற விபரங்களை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின்போது நாங்கள் மக்களுக்கு சமர்ப்பிப்போம்” என கூறியுள்ளார்.

26 டிசம்பர் 2017

தமிழரசுக் கட்சியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறார் வடக்கு முதல்வர்!

நான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியின் ஆண்டு சந்தாப் பணத்தைக் கட்டி விடுபவனும் அல்ல. எந்தக் கட்சியும் என்னைத் தமது கூட்டங்களுக்கு அழைத்து வரவுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். 'என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று திருகோணமலையில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த போது 8 பேர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பின் அக் குழுவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. கட்சி அரசியல் எதுவும் வேண்டாம் என்றிருந்த என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஐந்து கட்சிகள் சேர்ந்த தலைவர்கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்ட போது மறுக்க முடியாமல் அரசியலில் கால் வைத்தேன். நான் சேர முன் வந்தது அந்த ஐந்து கட்சிகள் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே. அப்போது அது பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கூட்டமைப்பு என்பது கூடத் தெரியாதிருந்தது.சேர்ந்த போது தான் பலதும் வெளிவந்தன. ஆனால் முன்னர் வன்முறை சாராத கட்சி என்ற வகையில் இயற்கையாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன. 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. அதில் உள்ள கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டன. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு என் அரசியல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் வெகுவிரைவில் ஒன்றை உணர்ந்து கொண்டேன். விஞ்ஞாபனக் கொள்கைகளுக்கும் விரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்ததை நான் உணர்ந்தேன். கொள்கைகள் மக்களுக்கு ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பது தான் யதார்த்தமாக இருந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் எந்தவித கூட்டுக் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதையும் கண்டு கொண்டேன். நடைமுறை நலன்கள் எவ்வாறு அமைந்தனவோ அவற்றை முன்வைத்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அங்கு சுயநலமே கட்சித் தலைமைப்பீடத்தால் கருத்துக்கெடுக்கப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டேன். உதாரணத்திற்கு தேர்தல் விஞ்ஞாபன சிந்தனைக்கேற்ப இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணை கொண்டுவரப்பட்டு எமது வடமாகாண சபையால் 10.02.2015இல் ஏக மனதாக ஏற்கப்பட்ட போது கட்சித் தலைமைத்துவம் அதிர்ச்சி அடைந்ததை நான் கண்டேன். அது சம்பந்தமான தலைமைத்துவக் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்ததையும் கண்டு கொண்டேன். பின்னர் தான் அறிந்து கொண்டேன் சிலருக்கு வரவிருந்த சுயநல வரவுகள் சில அந்தப் பிரேரணையால் பறிபோனதென்று.நாங்கள் மக்களிடம் வாக்கு கேட்கும் போது எமது கொள்கைகளை முன் வைத்தே கேட்கின்றோம். என்னைப் பொறுத்த வரையில் அவற்றை மாற்றி, குறைத்தோ கூட்டியோ நாங்கள் அரசாங்கத்திடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பது என்றால் அது மக்களின் கருத்துக்கிசைவாக நடைபெற வேண்டும். ஆகக் குறைந்தது கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கருத்தொருமிப்பின் அடிப்படையில் அவ்வாறான முரண்பட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட வேண்டும். ஏன் என்றால் நாங்கள் மக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். அவர்கள் நலம் சார்ந்தே நாங்கள் அரசியல் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக சுயலாபம் கருதி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.ஆனால் அவ்வாறு தலைமையே கூட்டுக் கட்சியின் கொள்கைகளை உதாசீனம் செய்யும் போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஒன்று வெளியேற வேண்டும். வெளியேறினால் உதாசீனம் செய்து நடந்து கொள்பவர்கள் கை ஓங்கிவிடும். இது எமது மக்களையே பாதிக்கும்.மக்கள் பெருவாரியாக என்னைத் தேர்ந்தெடுத்த போது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஒட்டு மொத்த கொள்கைகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுத்தார்கள். அவற்றிலிருந்து ஒரு கட்சியின் தலைமைத்துவம் வழுக முற்படும் போது கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் சார்பாக மாற்ற எத்தனிப்பதே எமது கடமை என்று உணர்ந்தேன். கட்சித் தலைமைத்துவம் கட்சிக் கொள்கைகளை மாற்றும் போது உபயோகிக்கும் கருவி தான் கட்சி ஒழுக்கம் என்ற பிரம்பு. “நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த முறை உங்களுக்குக் கட்சித் துண்டு கிடைக்காது” என்பார்கள் அல்லது “நாங்கள் சொல்வதை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சென்றீர்கள் என்றால் அடுத்த முறை உங்களுக்குத் துண்டு நிச்சயம்” என்பார்கள். நான் என் கட்சியை அடையாளப்படுத்துங்கள் என்று ஏற்கனவே உங்களிடம் கேட்டுள்ளேன். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு நான் நடக்கவில்லை என்று கூறும் போது அதே கட்சியின் கொள்கைக்குக் கட்டுப்படாத கட்சித் தலைமைத்துவத்துக்கு நான் என்ன பதில் கூற முடியும்? என்னை கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்திருந்தால் எமது முரண்பாடுகள் பற்றிக் கூறியிருப்பேன். அது நடைபெறாத நிலையில் எமது கொள்கை ரீதியான விடயங்களை வெளிப்படையாக மக்களுக்குக் கூறுவதே எமது கடமை என்று நான் நினைத்தேன். அதையே செய்தும் வருகின்றேன். தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது. தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலுக்கு எந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குக் கேட்கின்றது என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்பொழுது தான் கட்சித் தலைமைத்துவத்திடம் சில கேள்விகளை மக்கள் கேட்கலாம். அதாவது எமக்கு ஒன்றைக் கூறி அதற்கு மாறாக அரசாங்கத்துடன் நீங்கள் நடந்து கொள்ளும் நடவடிக்கையின் பின்னணி என்ன? நெருக்குதல்கள் காரணம் எனின் யாரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்குதல்கள்? என்று இன்னோரன்ன கேள்விகளை மக்கள் கேட்க வழிவகுக்க வேண்டும்.அதை விட்டு விட்டு “நாம் தான் தலைமை! நாம் முடிவெடுத்து விட்டோம். அது வழி நடவுங்கள் அல்லது சீட்டுமில்லை சிறப்புமில்லை” என்று கூறுவது ஜனநாயகம் ஆகாது. அவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நலஞ் சாராது.ஆகவே தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு நான் கூறும் பதில் பல தடவைகள் சிறை சென்ற போது நீங்கள் கொண்டிருந்த உறுதியான கொள்கைகளில் இருந்து நீங்கள் வழுவி விட்டீர்களா? ஏன்? பிறழ்வான கொள்கைகளுக்கு என்னைப் பணியச் செய்வதில் உங்களுக்கென்ன இலாபம்? உங்கள் கொள்கைகளைப் பழையபடி உறுதியாக எடுத்தியம்பி நிலையான தமிழரசுக் கட்சிக் கொள்கைகளுக்கு நீங்கள் இன்னமும் விஸ்வாசமாக இருக்கின்றீர்கள் என்று பகிரங்கமாக அறிவியுங்கள். இடைக்கால அறிக்கையின் போதாமை பற்றிப் பிரஸ்தாபியுங்கள். எவற்றை நாங்கள் அரசியல் ரீதியாகப் பெறவேண்டும் என்பதைப் பகிரங்கமாக அறிவியுங்கள். அவை கட்சியின் 2013ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்புடையதாக இருந்தால் நான் கட்சி கூறுவதற்குக் கட்டுப்படுவேன். அடுத்து மீண்டும் வன்முறை வெடிக்கும் சாத்தியம் பற்றியது... உண்மையைக் கூறினால் வன்முறை வெடிக்கும் என்று கூறுவதின் அர்த்தம் ஒருவர் மிரட்டினால் அடங்கிப் போங்கள் என்பது தான். நாம் கூறி வருவது எமக்குத் தெரிந்த உண்மை. உண்மையைக் கூறப் பின் நின்றால் பொய்மைக்கு நாம் இடமளிக்க வேண்டி வரும். சரித்திர ரீதியாக சிங்கள மொழி 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே பிறந்தது என்றேன். எனவே அதற்கு முன்னைய மக்களைச் சிங்கள மக்கள் என்று நாம் எவ்வாறு அழைக்க முடியும் என்று கேள்வி கேட்டேன். சிங்கள மொழி பேசுவதால் தான் ஒரு குழு மக்கள் சிங்கள மக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். அந்த மொழியே ஒரு காலத்தில் இல்லாதிருந்த போது அம் மக்கள் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று எவ்வாறு அடையாளப்படுத்த முடியும்? இது தான் யதார்த்தம். இது தான் உண்மை.நாங்கள் இது வரை இதைக் கூறவில்லை. இப்பொழுது இதை நான் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைப் பொறுக்க மாட்டாதவர்கள் தான் என்னைப் பைத்தியம் என்கின்றார்கள், பயங்கரவாதி என்கின்றார்கள். பகைவனாகப் பார்க்கின்றார்கள்.அடுத்து நான் சமஷ்டியைக் கோருவதால் வன்முறை வெடித்துவிடும் என்று பயமுறுத்துகின்றார்கள். இப்பொழுது சிங்கள மக்களிடையே படிப்பறிவுடையவர்கள் சமஷ்டியைச் சரியென ஏற்றுக்கொண்டு வருகின்றார்கள்.பின் எதற்கு இந்தப் பயம்? ஒரு விடயம் புரியாமல் இருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு நாங்கள் அதை இதைக் கூறிவிடுகின்றோம். ஆனால் புரிந்துணர்வு ஏற்படும் போது அமைதியாக சிந்திக்க தொடங்குகின்றோம். சமஷ்டி ஒரு பூச்சாண்டி அல்ல. அது பிரிவினை அல்ல. மாறாக மக்களைச் சேர்க்கும் ஒரு அரசியல் உபாயம் என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். எங்களுள் சிங்களம் தெரிந்தவர்கள் இதைச் சிங்களப் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.சிவாஜிலிங்கமும் நானும் இதைச் செய்கின்றோம். அதே போல் சம்பந்தனும், சுமந்திரனும் சிங்களம் தெரிந்தவர்கள் என்ற முறையில் சிங்கள மக்களுக்கு சமஷ்டியின் தேவைகளையும் அரசியல் ரீதியான பொருத்தத்தையும் எடுத்துக் கூற முன் வர வேண்டும். எம்மவருள் சிலர் “அது எப்படி சமஷ்டியைக் கேட்பது சிங்களவர்கள் அதற்கெதிரே” என்று கூறுகின்றார்கள். அவர்கள் தான் தெற்கில் இருந்து கொண்டு சிங்கள மக்கள் தலைவர்களை உசுப்பேற்றி விடுகின்றார்கள்.இவர்கள் ஒன்றைப் புரிந்த கொள்ள வேண்டும். நாங்கள் வடகிழக்கு இணைப்பை விட்டுக் கொடுத்து, தாயகத்தை விட்டுக் கொடுத்து, சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, சமஷ்டியை விட்டுக் கொடுத்து ஒரு சில எலும்புத் துண்டுகளுக்காகக் குறைந்த ஒரு தீர்வைப் பெற்று விடலாம். எலும்புத் துண்டுகள் எமது அப்போதைய சுயநலப் பசியைத் திருப்திப்படுத்தக் கூடும். ஆனால் நாளடைவில் நடக்கப் போவதென்ன? எமது தனித்துவம் அழிந்து விடும். மீண்டும் மீண்டும் எமது மக்கள் வெளிநாடுகள் நோக்கிச் செல்வார்கள். இப்பொழுது எமது வடமாகாண சபையில் இருவர் இருக்கும் இடத்தில் சபையின் பாதி அவர்களின் மக்கள் என்ற நிலை 20 வருடங்களுக்குள்ளேயே ஏற்பட்டு விடும்.இன்று பறங்கியர் பற்றி பேசும் போது நாம் கடந்த காலத்தைச் சுட்டியே பேசுகின்றோம். ஐம்பது வருடங்களின் பின்னர் எம்மைப் பற்றியும் கடந்த காலத்தில் தான் வைத்துப் பேசுவார்கள். இந்த நிலை வர ஒரு சில எலும்புகளைப் பெற்று கொள்கைகளை விட்டுக் கொடுப்பது தான் சரி என்று இந்தத் தெற்கத்தியத் தமிழர்கள் நினைக்கின்றார்களா? இந்த நிலை வர வேண்டும் என்பது தான் தெற்கத்தைய சிங்களவர் எதிர்பார்ப்பா? அப்படியானால் அது இனப்படுகொலை என்ற கருத்தினுள் அடங்கும் என்பதை அவர்கள் அறிவார்களா?வன்முறை வெடிக்கும் என்பது சம்பந்தமான எனது பதில் 'வன்முறை வரும்' என்பது எம்மைப் பயமுறுத்தும் ஒரு செயல்.போர் வெடித்ததால் எமது நாடு எவ்வாறான உயர் கடன்களைப் பெறவேண்டியிருந்தது என்பதைத் தெற்கு அறியும். அவர்களின் இராணுவம் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும். ஆகவே எமது சிங்கள அரசியல்வாதிகள் வன்முறை வெடிக்க விடமாட்டார்கள். இன்னுமொரு 1983 வந்தால் இலங்கையின் பெயர் உலக அரங்கில் நாறும். அதையும் மீறி அவ்வாறு வெடித்தால் வெடிக்கட்டுமே. நாம் இதுகாறும் கூறி வந்த உண்மையை உலகம் அறிந்து கொள்ளும், உணர்ந்து கொள்ளும். எமது மக்கள் இதுவரை பட்ட பாட்டிற்கு மேலதிகமாக நாங்கள் எதைச் சந்திக்கப் போகின்றோம்? வன்முறை வெடிக்கும் என்பது சுயநலவாதிகளின் பயமே ஒளிய அதில் உண்மை இல்லை.இந்தக் கூற்று தெற்கில் இருந்து வருவதில் இருந்து அதன் சுயநலப் போக்கைப் புரிந்து கொள்ளலாம். தெற்கில் கொழும்பில் சொகுசாக வாழ்பவர்கள் தான் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். ஆகவே எமது கட்சித் தலைமைகள் தங்கள் நிலையை எமது மக்கள் சார்பாக அவர்களுடன் இணைந்து உருவாக்க முன்வரவேண்டும்” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

25 டிசம்பர் 2017

தமிழரசுக் கட்சி போட்டியிடும் இடங்களில் புளொட் பிரச்சாரம் செய்யாது!

Ähnliches Fotoஆச­னப் பங்­கீட்­டின் போது, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யால் வாய்ப்பு மறுக்­கப்­பட்ட இடங்­க­ளில் தேர்­தல் பிரசாரங்களில் இருந்து ஒதுங்­கி­யி­ருக்க புளொட் அமைப்பு தீர்மா­ னித்­துள்­ளதாக கூறப்படுகிறது. தமது கட்­சி­யின் வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்­கும் வட்­டா­ரங்­க­ளில் மட்­டும் பரப்­பு­ரை­களைத் தீவி­ர­மாக மேற்­கொள்ள அந்­தக் கட்சி திட்­ட­மிட்டு வரு­கின்­றது என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது. எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பாக, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யிட பங்­கா­ளிக் கட்­சி­க­ளான ரெலோ மற்­றும் புளொட் என்­பன இணங்­கின.ஆச­னப் பங்­கீட்­டில் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்கு இடை­யில் ஆரம்­பத்­தில் இணக்­கப்­பாடு காணப்­பட்­டி­ருந்­தா­லும் பின்­னர் அது குழம்­பி­யது. ரெலோ அமைப்பு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யிட முடி­யாது என்று அறி­வித்­தது. பின்­னர் கட்­சி­க­ளுக்கு இடையே கொழும்­பில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருந்­தது. கொழும்­பில் எட்­டப்­பட்ட இணக்­கப்­பாட்­டுக்கு அமை­வாக இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி ஆச­னங்­களை வழங்­க­வில்லை என்று பங்­கா­ளிக் கட்­சி­கள் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­தன. கிளி­நொச்சி, மன்­னார், அம்­பாறை மாவட்­டங்­க­ளில் புளொட் அமைப்­புக்கு எந்­த­வொரு ஆச­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது. ஏனைய மாவட்­டங்­க­ளி­லும் ஒதுக்­கப்­பட்ட வட்­டா­ரங்­களை விடக் குறை­வான வட்­டா­ரங்­களே அந்த அமைப்­புக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

24 டிசம்பர் 2017

நாம் தமிழர் தினகரன் கூட்டணி சாத்தியமாகுமா?

 தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு வாய்ப்பு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனின் கை ஓங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இவை தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியான அவரது ஆர்.கே நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார்களால் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கு பிறகு நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைப்பு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, ரெய்டு நடவடிக்கைகள், 2ஜி வழக்கு தீர்ப்பு என்று தமிழக அரசியல் களத்தில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது.இருப்பினும், தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் களமிறங்கிய டி.டி.வி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார். மாநிலத்தில் ஆட்சி கையில் இருந்தும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டும் அதிமுக தினகரனுக்கு அடுத்த இடத்திலேயே இருக்கிறது. இதனை மாநிலம் முழுவதிலும் உள்ள டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சமீபகாலங்களில் நடந்த இடைத்தேர்தல்களின் ஆளும்கட்சி தோற்றதில்லை என்பதையும், பல ஆண்டுகளுக்கு பிறகு சுயேச்சை ஒருவர் வெற்றி பெற போகிறார் என்பதும் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோல, கடந்த கால மனக்கசப்புகளை எல்லாம் மறந்துவிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து இருக்கும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகளின் ஆதரவோடு களமிறங்கியும் திமுக மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இவர்களுக்கு அடுத்ததாக களத்தில் இருக்கும் முக்கிய கட்சியான பா.ஜ.க தற்போது உ.பி.,குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களில் பெருவாரியான வெற்றிகளை பெற்று இருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது.தமிழகத்தில் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்களுக்கான அச்சாரமே ஆர்.கே நகர் தேர்தல் தான் என்று அனைவரும் சொல்லிவந்த நிலையில் அந்த தேர்தல் தினகரனுக்கு ஆதரவானதாக மாறி இருப்பது அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மீண்டும் அதிமுக தொண்டர்கள் டி.டி.வி தினகரன் அணிக்கு திரும்ப யோசித்து வருகின்றனர் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. வரலாறு காணாத பணப்பட்டுவாடா, தேர்தல் விதி மீறல்கள் என புகார்கள் அணிவகுக்கும் வேளையில் இத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தும் தினகரனுக்கு வாக்களித்து இருப்பது தமிழகத்தில் ஆளும்கட்சி, எதிர்கட்சி, மத்தியில் ஆளும் பாஜக ஆகியவற்றின் மீது மக்கள் கோபமாக இருப்பதையே காட்டுகிறது.இந்நிலையில், ஆர்.கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வாங்கி இருக்கும் வாக்குகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வரும் நிலையில் கணிசமான வாக்குகள் பெற்று டி.டி.தினகரன், மதுசூதனன், மருது கணேஷ் ஆகிய வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் அணி மற்றும் அதிமுக சார்பில் கோடி கோடியாக பணப்பட்டுவாடா நடந்ததாக சொல்லப்படும் நிலையில், தி.மு.க போல எதிர்கட்சி அந்தஸ்தோ, மத்தியில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க போலவோ எந்த வித பின்புலமும் இல்லாமல் நாம் தமிழர் வாங்கி உள்ள ஓட்டுகள் அரசியல் களத்தில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் பெரும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இளைஞர்கள் பெருமளவில் அந்த கட்சிக்கு ஆதரவளிப்பதை சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் பிரச்சாரத்திலும், தனிப்பட்ட பேட்டிகளிலும் கூட திமுக, அதிமுக கட்சிகளையும், ஆட்சிகளையும் விமர்சித்தவர் தினகரன் அணியை பெரிதாக விமர்சிக்கவில்லை என்பதும், அதுபோல தினகரனும் நாம் தமிழரை பெரிதாக சீண்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.இதனால் அடுத்த சட்டசபை தேர்தலில் தினகரன் தலைமையிலான அணியும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

22 டிசம்பர் 2017

பிக்குவின் உடலை கோட்டைப்பகுதியில் தகனம் செய்ய எதிர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் எரியூட்டப்படப் போகும் பிக்குவின் உடலம்!யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ். நாகவிகாரையின் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும் என தமிழ்த்தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ் நாகவிகாரையின் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். அத்துடன் இந்துக்கள் மரணமடையும் உடல்களை அதற்காக ஒதுக்கப்பட்ட மயானங்களில் தான் தகனம் செய்கின்றார்கள். பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு அருகில் சடலங்களை தகனம் செய்வதில்லை. யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இந்துக்களின் புனித தலமான கோட்டை முனீஸ்வரன் கோயில் உள்ளது அதற்கு அருகில் வைத்து விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது யாழ்ப்பாணத்தில் வாழும் இந்துக்களின் மனதை பெரிதும் புண்படுத்தும் செயலாகும். குறிப்பாக தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாலயத்திற்கு அருகில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும். நாகவிகாரை விகாராதிபதி உடலை இவ் இடத்தில் தகனம் செய்ய முற்படுவதானது எதிர்காலத்தில் அவரது பெயரால் இவ் இடத்தில் விகாரை ஒன்றை அமைப்பதை உள்நோக்காக கொண்டே திட்டமிடப் படுகின்றது. இது எதிர்காலத்தில் இன முறுகலை ஏற்படுத்தும். எனவே யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதியின் உடலை கோட்டைப் பகுதியில் தகனம் செய்யாது பொருத்தமான மாயனத்தில் தகனம் செய்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் ஆவன செய்ய வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 டிசம்பர் 2017

சர்வதேசத்திடம் தீர்வைக்கோரி வவுனியாவில் போராட்டம்!

காணாமல் போனோரின் உறவுகளின் கவனயீா்ப்பு பேரணி இன்று வவுனியாவில் இடம்பெற்றது. அரசாங்கத்தை நம்பி ஏமாந்து போயுள்ளதாக தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது பிரச்சினைக்கு சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் மேற்கொள்ளப்படும் போராட்டம் தீர்வுகள் இன்றிய நிலையில் 300 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களது உறவினர்கள் 300 நாட்களையும் கடந்து கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன்பின்னர் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தின் மருதங்கேணி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அவர்களின் உறவினர்கள் போராட்டங்களை ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர். தமது பிரச்சினைகளுக்கு தீர்வை கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், மூன்று தடவைகள் சந்திப்பை மேற்கொண்டிருந்த போதிலும் உரிய தீர்வை வழங்க அவர் தவறியிருந்ததாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

15 டிசம்பர் 2017

கனடாவில் தமிழ் பெண் கொலை!கணவன் கைது!

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் அடுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Scarborough பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் என்ற தமிழ் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக டொறாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளார். பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதசாரிகள் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்,எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கதிர்காமநாதன் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என அறிய வருகின்றது.

11 டிசம்பர் 2017

தீயில் இருந்து முயலை காத்த உயிர்நேயவாதி!

Ähnliches Fotoஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் அண்மையில் பயங்கர காட்டுத்தீ எற்பட்டது. காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஆஸ்கர் கோன்ஸால்ஸ் என்பவர் வேலை முடிந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முயல் ஒன்று தீ எரிந்துகொண்டிருக்கும் பகுதிக்குள் செல்வதை ஆஸ்கர் கோன்ஸால்ஸ் பார்த்தார். பதறிய அவர் உடனே காரில் இருந்து வெளியே இறங்கி, முயலை மீட்கும் வகையில் கூக்குரல் எழுப்புகிறார். அவரது சத்தத்தைக் கேட்ட முயல் வெளியே வருகிறது. உடனே அதை நெஞ்சோடி வாரி அணைத்தபடி அவர் அந்த இடம்விட்டு நகர்கிறார். அவருடைய இந்தச் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. அன்பு மனிதர்களுக்கானது மட்டுமல்ல; சக உயிரினங்கள் அனைத்துக்குமானது என்பதை இந்த நிகழ்வு காட்டுவதாக வீடியோவைப் பார்ப்பவர்கள் புகழ்கிறார்கள். அவர் முயலை மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன. முயலை மீட்டது பற்றி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ள ஆஸ்கர், தான் மனிதர்களைப் போலவே மிருகங்களையும் நேசிப்பதாகக் கூறியுள்ளார்.

10 டிசம்பர் 2017

கனடிய காவல்துறை அதிகாரி நல்லரட்ணம் அரசியலில்!

கனேடிய தமிழர்கள் மத்தியில் டோரன்றோ காவல்த்துறை அதிகாரியாக கடந்த 10 வருடங்களாக கடமையாற்றி வந்த - பல்லின மக்களாலும் நன்கு அறியப்பட்ட ரொஷான் நல்லரட்ணம் கனேடிய கன்சர்வேர்டிவ் கடைசியில் மார்கம் தோரன்கில் தொகுதியில் 2018 ல் வரவுள்ள தேர்தலில் களமிறங்கியுள்ளார். நேரடி நேர்காணல் ஒன்றில் தோன்றிய அவர் கூறும் கருத்துக்கள் மற்றும் சமுதாயம் நோக்கியத அவரது பார்வை - மிகவும் வித்தியாசமான ஒர் பார்வையாகவே மக்களை ஈர்த்துள்ளது. மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அவர் - கனேடியத்தமிழர்களது வாழ்க்கை முறைகளை - கடின உழைப்புகளை தானும் பாட்டுணர்ந்து கடந்து வந்ததாகவும் 13 விதமான தொழில் தளங்களில் அடிப்படை தொழிலாளியாக இருந்து சாதாரண மக்களது இன்ப துன்பங்களையும் அனுபவமாக பெற்றதையும் நினைவுகூர்கிறார். கனேடிய தமிழர்கள் மத்தியில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உற்று நோக்கப் படும் காணொளி நேர்காணலாக இக்காணொளி உள்ளது. இலங்கை - வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட ரொஷான் நல்லரட்ணம் தனது 2 வது வயதில் 1985 ல் புலம்பெயர்ந்து தமிழகத்தில் பெற்றோருடன் தனது ஆரம்பகால கல்வியை ஆரம்பித்தார். சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தனது உயர் கல்விகளை முடித்த அவர் - துடுப்பாட்ட விளையாட்டுகளில் தமிழக இளைஞர்களிடம் பிரபலமாக அறியப்பட்டவர் 2005 காலப்பகுதியில் கனடாவுக்கு பெற்றோருடன் புலம்பெயர்ந்தார் - கனடா டொராண்டோவில் சட்டம் ஒழுங்கு துறைகளில் ஆர்வம்கொண்டு தனது கல்விகளைத் தொடர்ந்த அவர் கடும் முயற்சிகளின் பயனாக நகர காவலத்துறை அதிகாரியாகி சுமார் 10 வருடங்கள் கடமையாற்றினார். கனேடிய அரசியல் கட்சிகளில் ஒன்றான கன்சர்வேர்டிவ் கட்சியின் உறுப்பினராக தொண்டனாக நீண்டகாலம் இருந்துவந்த அவர் எதிர்வரும் 2019 மார்க்கம் தொரன்கில் தொகுதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து களமிறங்கியுள்ளார் - ஏன் எதற்கு எப்படி என்ன நோக்கம் யார் பின்னணி என்கின்ற பல கேள்விகளுக்கு அவரளித்துள்ள பதில்களால் - கனேடிய தமிழர்கள் வியந்துபோயுள்ளனர் - அரசியல்வாதிகள் பலவிதம் அதிலும் ரொஷான் நல்லரட்ணம் ஒருவிதம். நீங்களே இந்த நேர்காணலை பாருங்க புரியும்.

26 நவம்பர் 2017

உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட தலைவர் பிறந்தநாள் விழா!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது 63-வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் தமிழர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவு 12 மணிக்கு தந்தை பெரியார் தி.க.வினரால் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பொது இடத்தில் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து மாடி ஒன்றில் திரண்ட பெரியார் தி.க.வினர் கேக் வெட்டி தலைவரது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினர். அப்போது தேசியத் தலைவரையும் தமிழீழத்தையும் வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் களைகட்டின. முன்னதாக நேற்று மாலை கற்க கல்வி அறக்கட்டளை சார்பாக அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் 100 மாணவர்களுக்கு தலைவரின் புகைப்படத்துடன் கூடிய புத்தகப்பை ஏடுகள் வழங்கப்பட்டன. கரு. அண்ணாமலை தலைமையில் பள்ளி குழந்தைகள் தலைவருக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள் பாடி கேக் வெட்டி கொண்டாடினர்.தலைவரின் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு நாம் தமிழர் கட்சியினர் போர்வை, ரொட்டி வழங்கினர்.யாழ்ப்பாணத்தில் தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையிலும் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சிங்கள ராணுவம் இடித்த தலைவரின் வீட்டின் முன்பாக நள்ளிரவில் ராணுவ தடையை உடைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.தலைவர் பிறந்த நாளில் திடீரென வல்வெட்டித்துறையில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி பறக்கவிடப்பட்டது. வன்னிச்சி அம்மன் கோவில் அருகே இக்கொடி பறக்கவிடப்பட்டது.வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவர் பிறந்த வீடு தமிழர்களின் புனித இடமாக கருதபட்டது. அதை சிங்கள ராணுவம் இடித்தது. இந்த வீட்டை தமிழர்கள் இன்று சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.தலைவரின் இடிக்கப்பட்ட வீடு முன்பாக தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திலும் தலைவரது பிறந்த நாள் விழா களைகட்டியது. பல்கலைக் கழகத்தில் புலிகளின் இலச்சினை,தலைவரின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.சுவிஸிலும் தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நிட்வால்டன் மாவட்டத்தில் நள்ளிரவு 12.00 மணிக்கு தலைவர்
 பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது.தமிழீழ தேசிய மாவீரர் நாளையொட்டி பிரான்ஸில் வீர விதைகள் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. தமிழீழ மாவீரர்களின் தியாகத்தை போற்றும் பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

24 நவம்பர் 2017

தமிழர்களின் சனத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும்!


தேசியக் கொடியை தாம் அவமதிக்கவில்லை என்று, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தில் சராசரியை விட மிகக்கீழ் மட்டத்திலேயே தமிழ் மக்களின் சனத்தொகைப் பெருக்கம் அமைந்துள்ளது.இந்தநிலை மாற வேண்டும். எங்களுடைய சனத் தொகைப் பெருக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் என,வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா பாடசாலையின் மாலதி சுப்பிரமணியம் அரங்கில் பாடசாலை அதிபர் பே.தனபாலசிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் 1, 007 பாடசாலைகள் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த 1, 007 பாடசாலைகளிலும் 120 பாடசாலைகளில் 20 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். யாழ்.மாவட்டத்திலும் கூட 20 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் காணப்படுகின்றன.வன்னிப் பகுதியில் இதன் எண்ணிக்கை அதிகமானதாகவுள்ளன. வடமாகாணப் பாடசாலைகளில் மிகப் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதற்குக் கடந்த காலயுத்தமே வழி வகுத்துள்ளது. யுத்தம் சுமார் நான்கு இலட்சம் மக்களைக் கொன்றொழித்துள்ளது. இவ்வாறு கொன்றொழிக்கப்பட்ட மற்றும் யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய மக்களில் சுமார்- 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட வயதெல்லையைக் கொண்ட மக்களின் தொகையே மிக அதிகம். இந்த வயதெல்லையே பிறப்பினைஉருவாக்கக் கூடிய வயதெல்லையாகும். ஆகவே, கடந்த-30 ஆண்டுகளில் ஏறக்குறைய இரண்டு தலைமுறைப் பிள்ளைகளை நாங்கள் இழந்திருக்கின்றோம். பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வீழ்ச்சிக்கு இதுவே முக்கிய காரணம். இலங்கையில் தற்போது சனத் தொகைப் பெருக்க விகிதத்தை இன அடிப்படையில் நோக்கினால் 1, 000 பேருக்கு 8.5 முஸ்லீம்களும் , 1, 000 பேருக்கு 5.7 சிங்களவர்களும், 1, 000 பேருக்கு 1.5 என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் காணப்படுகிறார்கள். ஆகவே, இலங்கையின் தேசிய மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தில் சராசரியை விட மிகக்கீழ் மட்டத்திலேயே தமிழ் மக்களின் சனத்தொகைப் பெருக்கம் அமைந்துள்ளது.இந்தநிலை மாற வேண்டும். எங்களுடைய சனத் தொகைப் பெருக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 நவம்பர் 2017

மாவீரர் குடும்பத்தை சார்ந்தவர் மட்டுமே பிரதான சுடர் ஏற்ற வேண்டும்!


இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று  மாவீரர்களது குடும்பங்கள் சார்பில், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமார் மனோகர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர்களது குடும்பங்கள் சார்பில், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமார் மனோகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்- “ எந்தச் சூழ்நிலையிலும், எந்த நெருக்கடியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் துணிவுடனும், உணர்வுடனும் தொடர்ச்சியாகவும் நினைவுகூர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக சமூகங்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. தற்போது மாவீரர் நாளையொட்டி சிரமதானப் பணிகளில் உணர்வெழுச்சியுடன் பங்கு பற்றி வரும் அனைவருக்கும் மாவீரரின் பெற்றோரின் சார்பில் பணிவான வணக்கங்கள்.இந்த நிகழ்வானது – எந்த ஒர் அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியினதும் தேர்தல் தேவைக்கு எவ்விதத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த உணர்வுடன் துயிலுமில்ல மண்ணை மிதித்தோமோ, எவ்வாறான மனநிலையில் வெளியில் வந்தோமோ அந்த மனோநிலை அவ்வாறே இப்போதும் பேணப்பட வேண்டும் என வேண்டுகின்றோம். குறிப்பாக – இதற்கு ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். இந்த வணக்க உணர்வுநிலைக்கு இடையூறு ஏற்படும் வகையில் – மாவீரர் நிகழ்வுச் சூழலில் வைத்து அரசியல் விவகாரங்கள் தொடர்பாக செவ்விகள் எடுப்பதனைத் தவிர்க்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

1. பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ மட்டுமே ஏற்ற வேண்டும்.

 2. சமரசம் உலாவிய இடமாக துயிலுமில்லங்கள் திகழ்கின்றன. பிரிகேடியர் முதல் காவல்துறை , எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை வீரர்கள் என சகலரையும் சமமாகவே தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்த மண். அந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும். முதன்மைச் சுடர் ஏற்றுபவரைத் தெரிவு செய்யும் போது மாவீரர் பதவி நிலைகளைக் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்.

 3. பிரிபடாத தமிழ் தேசத்தினதும் அதன் இறையாண்மையினதும் அங்கீகாரம் என்பதுவே எமது போராட்டத்தின் அடிப்படையாகும். எமது இந்த பிறப்புரிமைக்காக – லெப். ஜுனைதீன் (ஜோன்சன்) முதல் 43 முஸ்லீம் மாவீரர்கள், 1985 முதல் 1990 வரை, வீரச் சாவடைந்துள்ளனர். 2000ஆம் ஆண்டின் பின்னரும் இருவர் மாவீரர்களாகியுள்ளனர். எனவே முஸ்லீம் மாவீரர்களின் உறவுகளும் கௌரவிக்கப்பட வேண்டும்.

 4. தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை – ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ, அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்கும் முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது. அத்தோடு – மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றது. இதேவேளை மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம். நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி ஊடாக வழங்குவோரும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

04 நவம்பர் 2017

துரைசிங்கம் பிறேமதாஸ் (பிறேம்)லண்டனில் காலமானார்!


புளியங்கூடல் அமரர் சாந்தலிங்கம் மற்றும் தவமணி மண இணையரின் இளைய மருமகனும் சாந்தலதாவின்(லதா)அன்புக் கணவருமான துரைசிங்கம் பிரேமதாஸ்(பிறேம்)நேற்று நள்ளிரவு லண்டனில் காலமானார் என்ற செய்தி கூடலூர் மக்களையும் அவரது நட்பு வட்டங்களையும் பெரும் அதிர்சசிக்குள்ளாக்கி இருக்கிறது.இளம் வயதில் சாந்தலதாவும் அவரது ஏக புதல்வியும் சந்தித்திருக்கும் இந்தப் பேரிழப்பை ஈடு செய்ய எவராலும் இயலாது.இவர்களை எண்ணிப்பார்க்கும்போது எமது நெஞ்சமே வெடித்து விடும்போல் இருக்கிறது.இனி எப்படித்தான் அந்த அன்புத்தங்கையோடு பேசமுடியும்?மனமெங்கும் அன்பை மட்டுமே சுமக்கும் லதாவை நாம் எப்படித்தான் தேற்றமுடியும்?இந்த மரணச் செய்தியின் அதிர்ச்சசியில் இருந்து மீளமுடியவில்லை.பிறேம் அவர்களின் ஆத்மா நித்தியக் கமலங்களில்  அமைதிபெற புளியங்கூடல்.கொம் எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றது.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

29 அக்டோபர் 2017

இலங்கையில் இன்னும் சித்திரவதை முகாம்கள்!


இலங்கையில் சித்திரவதை முகாம்கள் தொடர்ந்தும் இயங்குவதாக ஐ.நா.வின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூக்கா அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை மற்றும் நேர்மைக்கான கவுன்சிலிடம் அவர் இந்த அறிக்கையைக் கையளித்துள்ளார். 
இலங்கையில் சித்திரவதை முகாம்கள் தொடர்ந்தும் இயங்குவதாக ஐ.நா.வின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூக்கா அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை மற்றும் நேர்மைக்கான கவுன்சிலிடம் அவர் இந்த அறிக்கையைக் கையளித்துள்ளார். சித்திரவதை முகாம்களில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான சுமார் பத்து விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பல்வேறு நாடுகளில் யஸ்மின் சூக்கா அரசியல் தஞ்சம் பெற்றுக் கொடுத்துள்ளார். அத்துடன் அவர் இலங்கைக்கு எதிராக இதுவரை சுமார் 25 அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளுக்கு சமர்ப்பித்துள்ளார்.வேறு எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் அவர் இந்தளவு அறிக்கைகளை சமர்ப்பித்ததில்லை.இவ்வாறு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

22 அக்டோபர் 2017

மனித மிருகங்கள் குதறிய மிருக மனிதம்

புளியங்கூடலில் சினைப்பசு ஒன்று பயங்கரமாகக் கழுத்திறுக்கிக் கொலைசெய்யப்பட்டுள்ளது!பெறுமதி வாய்ந்த உயர் இனப்பசு இது! 100% இந்து மக்கள் வாழும் புளியங்கூடல் கிராமத்திற்கு இது அவமானமல்லவா!மேய்ச்சலுக்கு விடப்பட்டமாடு இது! யாருடைய பயிரையாவது மேய்ந்தால் பிடித்துக்கட்ட வேண்டும்! ஏன் கொலைசெய்யவேண்டும்? இது அராஜகமல்லவா! சம்பந்தப்பட்ட பசுக்கொலைக்காரரை சட்டத்தின் முன் நிறுத்த புளியங்கூடல் பொது அமைப்புக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்! இப்போது கந்தசஷ்டி விரதகாலமல்லவா? நமது பண்பாடு, விழுமியங்கள் எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? (2017-10-22) மாட்டின் உரிமையாளர் பெயர்: திரு.தில்லையம்பலம் பாஸ்கரன்!இவர் நமது வேலணை மேற்கு நடராஜ வித்தியாலய பழைய மாணவராவார்!

நன்றி:(முகநூல்)இரத்தினம் ஞானசோதியன்(ஆசிரியர்)அவர்கள்.

10 அக்டோபர் 2017

குடும்பப் பெண் மரணத்தில் மர்மம்!இளைஞன் கைது!


மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய வீதியில் வசிக்கும் ஐந்து வயதுப் பிள்ளையின் தாயான 26 வயதுடைய விஜயரட்னம் தர்மினி எனும் பெண்ணே, அவரது வீட்டிலிருந்து நேற்றுமாலை சடலமாக மீட்கப்பட்டாரென, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய வீதியில் வசிக்கும் ஐந்து வயதுப் பிள்ளையின் தாயான 26 வயதுடைய விஜயரட்னம் தர்மினி எனும் பெண்ணே, அவரது வீட்டிலிருந்து நேற்றுமாலை சடலமாக மீட்கப்பட்டாரென, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பெண்ணின் சகோதரியின் பாடசாலை நண்பரொருவர், அவ்வீட்டில் இருந்தபோதே, மர்மமான முறையில் பெண் உயிரிழந்துள்ளாரென, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, பட்டிப்பளையைச் சேர்ந்த குறித்த இளைஞன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

07 அக்டோபர் 2017

சுவிஸில் தமிழ் இளைஞன் காவல்துறையால் சுட்டுக்கொலை!

சுவிற்சர்லாந்தில் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றனர். முறைப்பாடு ஒன்றையடுத்து, பொலிஸார் இன்று அதிகாலையில் இரண்டு அகதிகளை அழைத்துக்கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றனர். அப்போது, வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது அவர் தாக்குதல் நடத்த முயன்றார். உடனடியாக பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவாக செயல்பட்டு தாக்குதல்தாரியை துப்பாக்கியால் சுட்டார். இரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உயிரிழந்தவர் கரன் எனப்படும் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முழுமையான விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

28 செப்டம்பர் 2017

ஆறறிவு மிருகம் குதறிய ஜீவனை ஐந்தறிவு மிருகம் தேடுகின்றது!.

ஆறறிவு மிருகம் குதறிய ஜீவனை ஐந்தறிவு மிருகம் தேடுகின்றது
. நெஞ்சை நெகிழவைக்கும் வித்தியாவின் ஐந்தறிவுள்ள நாய்....
விலங்கு மனத்தையும் விம்மி அழவைத்த வித்தியா!! உள்ளத்தை உருக்கிய பதிவுகள்! யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிரிவு பல்கோடி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று. பல தமிழ் மக்களை மட்டுமன்றி இனம் மதம் மொழி என அனைத்தையும் கடந்து மானுடத்தை நேசிக்கும் அத்தனை மக்களையும் அவளது பிரிவு உலுக்கியது. அந்த வகையில் மனிதர்களை மட்டுமன்றி
 ஐந்தறிவு படைத்த சீவன் ஒன்றைக்கூட அந்த இளங்குருத்து வாடிப்போன சம்பவம் வேதனையில் வாட்டியுள்ளது. மாணவி வித்தியா செல்லமாக ஒரு நாயினை வளர்த்து வந்துள்ளாள். சிறு குட்டியாக இருக்கும்போதே அதனை வளர்த்தபடியால் அதற்கு ‘குட்டி’ என்று பெயர் சூட்டினாள். செல்லமாக வளர்க்கப்பட்ட அந்த நாய், வித்தியா தினமும் பாடசாலை செல்லும்போது வீதிவரை அவளது தாயோடு வந்து வாலாட்டி வழியனுப்பிவைக்கும். பின்னர் பாடசாலை முடித்து வீடு வரும்போதுகூட வாலைக்குழைத்தபடி வித்தியாவை வட்டமிடும். வித்தியா இந்த மண்ணை விட்டு மறைந்து புண்ணிய சொர்க்கத்தில் குடிபுகுந்தபோது இந்த ஐந்தறிவு சீவனும் கோடானகோடி மக்களில் ஓருயிராக கதிகலங்கிப்போனது. சாவு நிகழ்ந்த அந்த நாட்களில் மிகுந்த சோகத்துடன் இந்த நாய் காணப்பட்டுள்ளது. வித்தியாவின் உடலம் புதைக்கப்பட்ட இடத்தையே சில நாட்களாக குறித்த நாய் சுற்றிச் சுற்றி வந்து வானத்தைப் பார்த்து ஊளை ஒலி எழுப்பியுள்ளது. வித்தியாவின் நாற்பத்தைந்தாம் நாளின்போது ‘குட்டி’யின் முன்னால் வித்தியாவின் அமருவப் படம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்போது அந்தப் படத்தையே ‘குட்டி’ வெறித்தப்டி பார்த்துக்கொண்டு நின்றுள்ளது. இந்தக் காட்சி அப்போது அங்கே நின்ற மனிதர்களின் கண்களை மீண்டும் கலங்க வைத்துள்ளது. ஊதையிற் பட்ட பூளைப் பூவைப்போல் கயவர்களால் நூறி எறியப்பட்ட எங்கள் வித்தியாவின் ஆத்துமா மனிதத்தை மட்டுமன்றி ஐந்தறிவு விலங்கினத்தையும் உருகவைத்துள்ளமை இதனூடு கண்கூடாகின்றதல்லவா!

நன்றி:இராவணன் பாலம்(முக நூல்)

26 செப்டம்பர் 2017

சிறுவனின் கையை முறித்த கொடூரன்!

பருத்தித்துறை பகுதியில், 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறிய தந்தையும் அதை வேடிக்கை பார்த்த தாயையும் பொலிஸார் நேற்று கைது செய்தனர். சிறிய தந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான்.தாயின் இரண்டாவது கணவன் என கூறப்படும் நபரே சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதன்போது சிறுவனின் தாயாரும் அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சிறுவனின் தாயாரும் சிறிய தந்தையும் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

07 செப்டம்பர் 2017

தெருவில் விடப்பட்ட மூதாளரின் வீட்டை மீண்டும் பெற்றுக்கொடுத்த மனிதாபிகள்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்முரசறைந்து வெளியேற்றப்பட்ட மூதாட்டி மீண்டும் சொந்த வீட்டில் குடியேற்றப்பட்டார் -மனிதநேயச் செயற்பாட்டார்களின் நிதியுதவியில் வீடு மீட்கப்பட்டது- செய்தி மூலம் சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பிய சிவ தொண்டர் பொன் ராசாவும் விரைந்து செயலாற்றிய உண்மையான மனிதநேய சீலர்களும் மறக்க முடியாத சமூக முன்னுதாரணங்கள் காரைநகரில் நீதிமன்ற உத்தரவின்பேரில் முரசறைந்து வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட மூதாட்டியின் வீடு நேற்று மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி உதவியுடன் அந்த பெண்மணி நேற்று மாலை மீண்டும் தனது சொந்தவீட்டில் குடியேறினார். காரைநகர் வெடியரசன் வீதியைச் சேர்ந்த ஏரம்பு ஞானேஸ்வரி என்ற பெண்மணி பணத் தேவையின் பொருட்டு தனது வீட்டை அவ்வூரைச் சேர்ந்த ஒருவரிடம் இரு வருட தவணை அடிப்படையில் அறுதி உறுதி எழுதி ஈடு வைத்தார். சுமார் மூன்று இலட்சம் ரூபாவிற்கு ஈடு வைக்கப்பட்டது. உரிய காலத்தில் அந்த வீட்டை மீட்க முடியாத காரணத்தால் ஈடு பிடித்தவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையினல் அந்த வீடு ஈடு பிடித்தவர்களுக்குச் சொந்தமானது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மூதாட்டியின் வீட்டுக்கு பொலிஸார் சகிதம் வந்த நீதிமன்றப் பணியாளர்கள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியே, வீதியில் தூக்கி வைத்துவிட்டு அந்தப் பெண்மணியையும் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்தனர். 'அவர்கள் வரும்போது பானையில் சோறு அவிந்துகொண்டிருந்தது. அந்தப் பானையை அப்படியே தூக்கி வெளியே வைத்தனர்' என மூதாட்டி அழுதவாறு கருத்து வெளியிட்டிருந்தார். மூதாட்டியின் நிலை தொடர்பாக சமூக வலைத்தளங்களும் இணைய, அச்சு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டதன் அடிப்படையில் அவருக்கு உதவுவதற்கு பல தரப்பினரும் முன்வந்தனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக மேஜர் இளமகள் என்ற மாவீரரைத் தந்த தாய் என்ற அடிப்படையில் அவர் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது. இந்நிலையில், அவரது ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ளவர்கள் சிலர் தாங்களாக முன்வந்து பணத்தை திரட்டி அனுப்பியதன் பயனாக ஈடு பிடித்தவர்களுக்கு 5 இலட்சத்து 26 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி அந்த வீடு மீண்டும் பெறப்பட்டு மூதாட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வேம்படி காரைநகரில் உள்ள பாரதி கலைக் கல்லூரியின் புலம்பெயர் தேசத்தில் உள்ள செயற்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான தம்பையா கருணாநிதி (பபி கனடா) எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக சுமார் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி சேர்க்கப்பட்டது. மேலும், அவ்வூரைச் சேர்ந்த சிவகாமி நலன்புரி ஒன்றியத்தின் புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் முயற்சியால் 2 இலட்சத்து 96 ஆயிரம் ரூபா நிதி சேர்க்கப்பட்டது. இதன்மூலம் அந்தக் காணி தற்போது மீட்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் 6.00 மணியளவில் சட்டத்தரணி சாருஜா சிவநேசனின் காரைநகரில் உள்ள அலுவலகத்தில் காணி மீளவும் அந்த மூதாட்டியின் பெயரில் எழுதப்பட்டது. இதன்போது ஈடு பிடித்தவர்கள், காணி உரிமையாளரான ஞானேஸ்வரி, பாரதி கலை மன்றம் மற்றும் சிவகாமி நலன்புரி ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அப்பிரதேச கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் நலன்விரும்பிகள் சிலரும் பிரசன்னமாகியிருந்தனர். காணி எழுதப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மூதாட்டியை அழைத்துச் சென்று அவரிடம் வீட்டுத் திறப்பைக் கையளித்து, வீட்டில் குடியேற்றினர். இதன்போது சட்டத்தரணி சாருஜா சிவநேசனும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். தனது வீடு மீண்டும் கிடைப்பதற்கு உதவி செய்த மனிதநேயம் மிக்க அனைவருக்கும் அந்த மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். தனது இறப்பு வரை அவர்களைத் தாம் மறக்கமாட்டார் எனவும் அவர் கூறினார்.

நன்றி:பரா நந்தகுமார்(முகநூல்)