பக்கங்கள்

03 அக்டோபர் 2014

நெடுந்தீவு சுற்றுலா வலயமாகப் போகிறதாம்!

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பகுதியை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நெடுந்தீவில் அழகான பல இடங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக இயற்கையாக குதிரைகள் உலாவித்திரியும் நெடுந்தீவு மேலும் பல சிறப்புகளை கொண்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களை நிர்மாணிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அப்பகுதி சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும். இதன் மூலம் நெடுந்தீவில் வாழும் சுமார் 1500 குடும்பங்களின் பொருளாதார நிலை வளர்ச்சி பெறும் என்றும் அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.