பக்கங்கள்

02 அக்டோபர் 2014

சஜின்வாஷின் கன்னத்தில் அறைந்தார் மகிந்த!

நிபந்தனைகளுக்கு உட்பட்டால் பதவியைத் தொடரத் தயார் என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டொக்டர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென என அவர் கோரியுள்ளார்.தமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே தொடர்ந்தும் உயர்ஸ்தானிகர் பதவியை வகிக்கப் போவதாக நோனீஸ் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், கிறிஸ் நோனீஸ் தாக்குதல் சம்பவம் குறித்து வெளிவிவகார அமைச்சு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்திய பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோனீஸ் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தமது ராஜினாமா கடிதத்தை வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை சஜின்வாஷ் குணவர்த்தனவின் கன்னத்தில் மகிந்த ராஜபக்ஷ அறைந்தார் என்றும் செய்திகள் உலா வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.