பக்கங்கள்

08 செப்டம்பர் 2012

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஷின் மனைவி வத்சலாதேவியினால் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார். மஹிந்த ராஜபக்ஷவிற்கு ராஜதந்திர வரப்பிரசாதங்கள் காணப்படுவதாகவும் இதனால் வழக்குத் தொடர முடியாது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரமேஷின் மனைவி வத்சலாதேவி கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அமரிக்க நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார். ராஜதந்திர வரப்பிரசாதம் காணப்படுவதனால் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது எனவும் இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதவான் நயோமி புச்வால்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தொடரப்படும் சிவில் வழக்குகளின் போது நாடுகளின் தலைவர்களுக்கு இராஜதந்திர வரப்பிரசாதம் வழங்கப்கப்பட்டு வருவதாகவும், இது நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒர் நடைமுறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதமும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவொன்றை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.