பக்கங்கள்

07 செப்டம்பர் 2012

ஆட்சி அமைக்க முஸ்லீம் காங்கிரசுக்கு அழைப்பு என்கிறார் சுமந்திரன்!

இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு அவசியம் என்பதை நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். சமஸ்டி அடிப்படையில் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை கிழக்குத் தேர்தல் முடிவுகள் சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தும், எனினும் தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வை கோரவில்லை மாறாக அவர்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டை எதிர்பார்ப்பதாக ஐநா மற்றும் சர்வதேசத்திடம் வர்ணிக்க இலங்கை அரசாங்கம் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் இத்திட்டத்தை தோற்கடிக்க கிழக்குத் தேர்தல் கடவுள் கொடுத்த வரம் எனவும் ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு அளிக்கப்படும் வரை சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையிலான ஒரு ஆணையாக தேர்தலை பயன்படுத்த வேண்டுமென சுமந்திரன் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கிழக்கில் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.