பக்கங்கள்

13 செப்டம்பர் 2012

கிழக்கின் முதலமைச்சராக மீண்டும் பிள்ளையான்?

கிழக்கு மாகாண முதலமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தனே மீண்டும் நியமனம் பெறுகின்றார் என்று அலரி மாளிகை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்து உள்ளன. கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரைத்தான் முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்கிற ஜனாதிபதியின் தனிப்பட்ட முடிவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இயைந்து கொடுக்க வேண்டி ஏற்பட்டது என இவ்வட்டாரங்கள் கூறுகின்றன. ஆயினும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவதால் இரு அமைச்சரவை அமைச்சுக்களும், மூன்று பிரதி அமைச்சுக்களும், ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் மத்தியில் தருகின்றமையுடன் கிழக்கு மாகாண சபையில் இரு அமைச்சுக்களும் தர வேண்டுமென்று மு. கா தலைவர் ரவூப் ஹக்கீம் விடாப்பிடியாக நின்று கொண்டார் என்று தெரிகின்றது. நாளை அல்லது நாளை மறுதினம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் குறித்த உத்தியோகபூர்வ அறிவுப்புக்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.