யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் நினைவு வணக்கம் செலுத்துவதற்காக வைக்கப்படவுள்ளன. இன்று மாலை 6 மணி முதல் நாளை 27ஆம் திகதி வரையில் இந்த கல்வெட்டுகள் மாவீரர் நினைவு வணக்கத்திற்காக வைக்கப்படவுள்ளன.
இதன்போது, மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் வாரத்தின் இறுதிநாளான நாளை மாலை 06.05 மணிக்கு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் தொடக்கம் இறுதி யுத்தத்தில் வீரமரணமடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் குறித்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
26 நவம்பர் 2019
இருபத்தையாயிரம் மாவீரர்களின் பெயர்களுடன் நல்லூரில் கல்வெட்டு!
யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் நினைவு வணக்கம் செலுத்துவதற்காக வைக்கப்படவுள்ளன. இன்று மாலை 6 மணி முதல் நாளை 27ஆம் திகதி வரையில் இந்த கல்வெட்டுகள் மாவீரர் நினைவு வணக்கத்திற்காக வைக்கப்படவுள்ளன.
இதன்போது, மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் வாரத்தின் இறுதிநாளான நாளை மாலை 06.05 மணிக்கு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் தொடக்கம் இறுதி யுத்தத்தில் வீரமரணமடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் குறித்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.