பக்கங்கள்

28 பிப்ரவரி 2014

சிறீலங்கா மீது எரிச்சல் காட்டியது அமெரிக்கா!

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி. வொசிங்டனில், நேற்று உலக நாடுகளின் மனித
உரிமைகள் நடைமுறைகள்- 2013 என்ற அறிக்கையை வெளியிட்டு வைத்து, உரையாற்றிய போதே அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி, இவ்வாறு தெரிவித்துள்ளார். “பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அடிப்படைக் கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னும் பதிலளிக்காத நிலையில், சிறிலங்காவில் நாம் அதைச் செய்வோம். துரதிஸ்டவசமாக, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மதசிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இன்னமும் அங்கு தொடர்கின்றன. இந்த நிலைகள் பற்றிய எமது கவலைகளே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் வரும் மார்ச் அமர்வில் இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு வழிவகுத்துள்ளது. நாம் அதைச் செய்வோம், ஏனென்றால், மனிதஉரிமைகளையும், மனித கௌரவத்தையும் மறுக்கின்ற நாடுகள், எமது நலன்களுக்கும், மனித நலன்களுக்கும் சவாலாக இருக்கும் என்பது எமக்குத் தெரியும். “ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.