பக்கங்கள்

22 பிப்ரவரி 2014

நால்வரில் ஒருவர் மனநோயாளி!

இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் மன நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சட்ட உளவியல் மருத்துவர் ரீ.எஸ்.எஸ்.மெண்டிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் 25 வீதமானவர்கள் ஏதேனும் ஓர் உளவியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உளவியல் சிகிச்சை வழங்கக் கூடிய தகைமையுடைய 60 மருத்துவர்களே கடமையாற்றுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை தடுக்க முடியவில்லை. குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த நாடு முழுவதிலும் 25 சட்ட வைத்திய அதிகாரிகளே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இது எந்த வகையிலும் போதுமானதல்ல என தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வட மாகாணத்திலேயே மனஉழைச்சலுக்கு உள்ளானவர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.