பக்கங்கள்

25 பிப்ரவரி 2014

டக்ளஸ்,கருணா,பிள்ளையான் போர்க்குற்றவாளிகள்!

சிறிலங்காவில் அமைச்சர்களாக இருக்கும் மூத்தத் துணை ஆயுதக்குழு தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் ஆகியோர் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மோசமான மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் உள்ள போதிலும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.துணை ஆயுதக்குழுக்கள் பெருமளவில் கலைக்கப்பட்டுள்ள போதிலும், ஆயுத மோதல்களின் போது இடம்பெற்ற மோசமான குற்றங்கள் தொடர்பான அதிகளவு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களான டக்ளஸ், கருணா மற்றும் பிள்ளையானுக்கு எதிராக இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணாவும், பிள்ளையானும் பின்னர் அதிலிருந்து பிரிந்து தனிக்குழுவாக செயற்பட்டதாகவும், இவர்கள் போர்க் குற்றங்களில் ஒன்றான சிறார்களை படையில் சேர்க்கும் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்ததாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும், சிறுவர்கள், ஆயுத மோதல்கள் தொடர்பான ஐநா பொதுச் செயலாளரின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக நவநீதம்பிள்ளை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.