பக்கங்கள்

26 பிப்ரவரி 2014

கோபிதாஸின் சடலம் யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்பட்டுள்ளது!

இலங்கையின் மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலையான தமிழ் அரசியல் கைதி விசுவலிங்கம் கோபிதாஸ்-43 இன் சடலம் யாழ்ப்பாணம் எடுத்துசெல்லப்பட்டுள்ளது. வடமராட்சியின் மந்திகையினை சொந்த இடமாக கொண்ட அவர் விடுதலைப்புலிகளிற்கு நிதி உதவி வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இலங்கை சென்றிருந்த நிலையில் 2007 ம் ஆண்டின் மார்ச் மாதம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினில் வைத்து கைதாகியிருந்தார். இவரது மரணத்தினையடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பிரிட்டனிலிருந்து இலங்கை சென்றுள்ளனர் .இந்நிலையில் அவரது சடலம் பொறுப்பேற்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்துசெல்லப்பட்டுள்ளது. அவரது மரணத்தினில் மர்மம் இருப்பதாகவும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் குடும்பத்தவர்கள் கோரியுள்ளனர். எனினும் அவர் மாரடைப்பினால் மரணமடைந்ததாக சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது சொந்த ஊரினில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள பூதவுடலிற்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.