சிறைகளில் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்து முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.
நகரசபை மைதானப் பகுதியில் பெருமளவிலான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்ட போதும், பெருமளவு பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சித் தலைவர்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
கட்சி பேதங்களை மறந்து அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளும் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே நகரசபை மைதானப் பகுதியில் பெருந்தொகையான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகரசபை வாயிலிலும் காவல்துறையினர் பாதுகாப்பக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
24 மே 2012
உண்ணாவிரத பகுதியில் பெருமளவு பொலிசார் குவிப்பு!
சிறைகளில் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்து முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.
நகரசபை மைதானப் பகுதியில் பெருமளவிலான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்ட போதும், பெருமளவு பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சித் தலைவர்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
கட்சி பேதங்களை மறந்து அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளும் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே நகரசபை மைதானப் பகுதியில் பெருந்தொகையான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகரசபை வாயிலிலும் காவல்துறையினர் பாதுகாப்பக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.