பக்கங்கள்

04 அக்டோபர் 2011

எங்கள் அவையவங்களை எடுத்தவனே எமக்கு பரிசளிப்பதா?

எங்கள் அவயங்களைப் பறித்தவனின் கரங்களினால் நாங்கள் பரிசில் வாங்குவதை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது என்று கூறுகிறார் இரண்டு கண்களும் தெரியாத கைகள் இரண்டும் இல்லாத நவின் பாடசாலை மாணவி. ஞாயிற்றுக்கிழமை யாழ்.படைகளின் தலைமையகதத்தில் நடைபெற்ற கா.பொ சாதாரண மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. எங்களை வலுக்கட்டாயமாக எமது பாடசாலை ஆசிரியர்கள் அழைத்து வந்துள்ளனர். நாங்கள் இரண்டு கண்களும் தெரியாது இரு கைகளையும் கொடிய யுத்தத்தினால் இழந்துள்ளோம்.
எங்களின் வாழ்க்கையை சூனியமாக்கியவனின் கைகளினால் பரிசில் வாங்குவதை நினைக்கும் போது கண்ணீர்தான் வருகிறது.
தங்களின் உணர்வுகனை இந்த நவீன் பாடசாலை ஆசிரியர்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை. இராணுவத்தினரின் கௌரவிப்புக்கு தங்களை வலுக்கட்டாயமாக கூட்டி வந்ததாக குறைகூறுகின்றனர் இந்த மூன்று மாணவர்கள்.
எங்களை உலகமே தெரியாமல் இருளுக்குள் தள்ளியவர்களின் பரிசில்கள் எமக்கு ஏன்? என கண்கலங்கினார் நவீன் பாடசாலை மாணவன்.
நிச்சயமாக நவின் பாடசாலை ஆசிரியர்கள் அவர்களின் விருப்பங்களை கேட்டுவிட்டு இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்திருக்க வேண்டும் அது நவீன் பாடசாலை ஆசிரியர்களின் தப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.