மூளாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று காலை தனது கழுத்தை பிளேட்டால் அறுத்து தற்கொலை செய்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி வவிகரன் (வயது 37) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.அம்மை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்றுக்காலை வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுள்ளார்.வீட்டார் தடுக்கவே அதனை உதாசீனம் செய்துவிட்டு,தான் அருகில் உள்ள கடைக்குச் சென்று வருகிறேன் எனத் தெரிவித்து விட்டு சைக்கிளில் சென்றுள்ளார். காலை 7 மணியளவில் மூளாய் மூன்கோட்டைப் பகுதியில் உள்ள ஒழுங்கையில் நின்ற இவர் தனது கழுத்தை பிளேட்டால் தானே அறுத்துள்ளார்.
சற்றுத் தொலைவில் நின்ற சிலர் தடுக்க விரைந்த போதும் அவர் தனது கழுத்தை பிளேட்டால் அறுத்து மரணமானார். அவரது கை இரத்தம் தோய்ந்த நிலையில் பிளேட்டுடன் காணப்பட்டது. இவர் அங்குள்ள கடை ஒன்றில் காலை பிளேட் வாங்கினார் என வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.பிரேத பரிசோதனைக்காக சடலம் பேதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வட்டுக் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
16 ஜூன் 2014
சித்தங்கேணி நபர் கொடூரமான முறையில் தற்கொலை!
மூளாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று காலை தனது கழுத்தை பிளேட்டால் அறுத்து தற்கொலை செய்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி வவிகரன் (வயது 37) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.அம்மை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்றுக்காலை வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுள்ளார்.வீட்டார் தடுக்கவே அதனை உதாசீனம் செய்துவிட்டு,தான் அருகில் உள்ள கடைக்குச் சென்று வருகிறேன் எனத் தெரிவித்து விட்டு சைக்கிளில் சென்றுள்ளார். காலை 7 மணியளவில் மூளாய் மூன்கோட்டைப் பகுதியில் உள்ள ஒழுங்கையில் நின்ற இவர் தனது கழுத்தை பிளேட்டால் தானே அறுத்துள்ளார்.
சற்றுத் தொலைவில் நின்ற சிலர் தடுக்க விரைந்த போதும் அவர் தனது கழுத்தை பிளேட்டால் அறுத்து மரணமானார். அவரது கை இரத்தம் தோய்ந்த நிலையில் பிளேட்டுடன் காணப்பட்டது. இவர் அங்குள்ள கடை ஒன்றில் காலை பிளேட் வாங்கினார் என வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.பிரேத பரிசோதனைக்காக சடலம் பேதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வட்டுக் கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.15 ஜூன் 2014
சுதுமலை கொலை தொடர்பில் ஐவர் கைது!
யாழ். சுதுமலை பகுதியில் வயோதிபப்பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஐவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த கொள்ளை குழு வீட்டில் இருந்த இரண்டு பெண்களின் கைகள் மற்றும் வாய் என்பவற்றை கட்டிவிட்டு அவர்களின் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.
வாய் இறுக கட்டப்பட்டதால் வீட்டின் உரிமையாளரான குமாரலிங்கம் பத்மாவதி (வயது- 57) என்பவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.இதன்போது வீட்டில் இருந்த மற்றைய பெண்ணின் மகன் உட்பட ஐவரை சந்தேகத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மற்றையவர்கள் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் விசாரணைகளைத் தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
14 ஜூன் 2014
லா சப்பலில் இளைஞன் மீது வாள்வெட்டு!
பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ்க் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் பகுதி தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். தமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது. பாரிஸ் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள பிலிப் து ஜிராட் வீதியில் Rue Philippe-de-Girardகடந்த வெள்ளி இரவு இந்தக் குழு மோதல் இடம்பெற்றதாகவும் இருபது பேர் கோண்ட குழுவின் தாக்குதலில் 18 வயது இளைஞன் ஒருவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிராபத்தான நிலையில் உள்ளார் என்றும் பாரிசின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.அவசர முதலுதவிச் சேவையினர் வந்த போது காயங்களின் கடுமையினால் இந்த இளைஞன் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இன்னமும் உயிராபத்தான நிலையிலேயே உள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவமானது தமிழ் குழுக்களிடையேயான மோதலின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என நம்பப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருடர்களினால் உயிரிழந்த பெண்!
யாழ்,சுதுமலை வடக்கில் நேற்று நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பெண்ணை மிரட்டிக் கட்டி வைத்துவிட்டு அகப்பட்டவற்றை சுருட்டிச் சென்றனர். கட்டிப் போடப்பட்ட பெண் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் உயிரிழந்தார். பத்மாவதி குமாரலிங்கம் (வயது 56) என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார் என்று முற்கொண்டு கிடைத்த செய்திகள் தெரிவித்தன. ஆபத்தான நிலையில் மீடகப்பட்டு இன்று அதிகாலையில் யாழ்.மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் அங்கு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
13 ஜூன் 2014
புலிகள் மீதான தடை சரியானதா?விசாரிக்கிறது மோடி அரசு!
புலிகள் இயக்கத்துக்கு விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு இதற்கான உத்தரவு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை இணைச் செயலர் ராகேஷ்சிங் கடந்த ஜூன் 5ம் தேதி வெளியிட்ட அரசாணை, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 5(1) பிரிவின்படி டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படுகிறது. விடுதலை புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிப்பதற்கு மத்திய அரசு தெரிவித்த காரணம் சரியானதுதானா என்தை அந்த அந்த தீர்ப்பாயம் விசாரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தீவிரவாத இயக்கம் என்று கூறி ஒரு அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு அது சரியா என்பதை கண்டறிய இதுபோன்ற தீர்ப்பாயம் அமைக்கப்படுவது வழக்கமான நடவடிக்கைதான். இதன் மூலம், தடையை விலக்க கோரும் வாய்ப்பு சம்மந்தப்பட்ட அமைப்புக்கோ, அதன் ஆதரவாளர்களுக்கோ வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த மே 14ம்தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் விடுதலைப்புலிகளுக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்க மத்திய அரசு சில காரணங்களை கூறியிருந்தது. அதில், விடுதலை புலிகள் இயக்கம் இலங்கையை மையமாக கொண்டு செயல்பட்டாலும் அதற்கு இந்தியாவில் அனுதாபிகளும், ஆதரவாளர்களும் உள்ளனர். இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகும், ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் செயல்டுகிறார்கள்,. அதன் தலைவர்கள் ஈழம் கோரிக்கைக்காக நிதி திரட்டுதல், பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. இதனால் அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ், 2012, மே 14ம்தேதி முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம்வரை வழக்குகழ் வதிவு செய்யப்பட்டன. சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.விடுதலை புலிகளுக்கு சாதகமாகவும், ஈழம் கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இலங்கையில் விடுதலை புலிகளை வீழ்த்த மத்திய அரசே காரணம் என்றும் அவர்கள் கூமுக்கிய றிவருகிறார்கள், இதுபோன்ற பிரச்சாரங்களால் இந்தியாவில் உள்ள மிக பிரமுகர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிவினையை தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த இயக்கத்தினராலும், அதன் ஆதரவாளர்களாலும் இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு நேரும் என்பதால் விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிவாத அமைப்பு என அறிவித்து அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுஇள்ளது. இவ்வாறு முந்தைய காங்கிரஸ் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.புளியங்கூடல் மகாமாரி அம்பாள் திருவிழா ஆரம்பமாகியது!
செருத்தனைப்பதி அருள்மிகு ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் கொடியேற்றத் திருவிழா இன்று (13.06.2014)வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 18 தினங்கள் நடைபெறும் என ஆலய அறங்காவலர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மேலும் 16ம் திருவிழாவான (28.06.2014)சனிக்கிழமை தேர்த்திருவிழாவும்,(29.06.2014)ஞாயிற்றுக் கிழமை தீர்த்தோற்சவமும் (30.06.2014)திங்கட்கிழமை பகல் சண்டேஸ்வரி உற்சவமும் இரவு பூங்காவன திருவிழாவும் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் இவ்வருட திருவிழா இனிதே நிறைவுற உள்ளது.12 ஜூன் 2014
பளையில் குழுமோதல் கத்திக்குத்து!
பளைப்பகுதியில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமான முறையில் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தார்.இதேவேளை மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் நேற்றுக் காலை 6.30 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் திடீரென கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்படி கைகலப்பு இறுதியில் கத்திக்குத்தில் முடிவடைந்ததோடு இந்தக் கத்திக்குத்துக்கு பணக்கொடுக்கல் வாங்கலே காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி கத்திக்குத்தில் பலியான பளை தம்பகாமம் பகுதியைச் சேர்ந்த முத்தையா திலீபன் (வயது 27) என்ற இளம்குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
இவருக்கு மூன்று வயதேயான குழந்தையயான்றும் உள்ளது. வட்டக்கச்சியை சொந்த இடமாகச் கொண்ட மேற்படி குடும்பஸ்தர் தம்பகாமத்தில் திருமணம் செய்து கொண்டவர் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேற்படிச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ள பளை பொலிஸார் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று இருவரைக் கைது செய்துள்ளனர்.
இதேவேளை மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலை க்கு மாற்றப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.11 ஜூன் 2014
வடக்கு,கிழக்குப் பெண்களுக்கு பாதுகாப்பில்லை!
வடக்கு,கிழக்கில் 40 வீதமான பெண்கள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி அலியான் சிபனலே இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதனால் பெண்கள் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பாக போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இவ்வாறான ஓர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
10 ஜூன் 2014
வற்றாப்பளையில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் திருவிழா!
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் விழாவில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர். அத்துடன் தமது பல்வேறு வகையான நேர்த்திகளையும் நிறைவு செய்தனர். நேற்று திங்கட்கிழமை காலை முதல் ஆரம்பமாகிய பொங்கல் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை இடம்பெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பொங்கல் பொங்கிப் படைத்தார்கள். ஆலய சுற்றாடல் எங்கும் பொங்கல் காரணமாகவும் வாசலில் கற்பூரம் கொளுத்தியமையாலும் புகை மண்டலமாகக் காணப்பட்டது. என்றும் இல்லாத அளவுக்கு நேற்றுப் பகல் ஆரம்பமாகிய தூக்குக் காவடிகள், பறவைக் காவடிகள், சப்பாணிக் காவடிகள், பிள்ளைக் காவடிகள், சயனக் காவடிகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட காவடிகள் கிளிநொச்சி மாவட்டம் உட்பட வன்னி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் எடுத்துவரப்பட்டன. சிறுவர்கள் முதியவர்கள் என வேறுபாடு இன்றி ஆயிரக்கணக்கான காவடிகள் மற்றும் பாற் செம்புகள் கற்பூரச் சட்டிகள் என்பனவும் எடுத்துவரப்ப்ட்டன. பெண் ஒருவர் இரண்டாவது தடவையாகவும் தூக்குக் காவடி எடுத்து தனது நேர்த்தியை நிறைவேற்றினார். இராணுவத்தினரின் உலங்கு வானூர்தியில் இருந்து பிற்பகல் 5மணியளவில் பல தடவைகள் வானில் வட்டமிட்டு ஆலய கோபுரத்தின் மீது உலங்கு வானூர்தியில் இருந்து பூக்கள் சொரியப்பட்டன. ஆலய சுற்றாடலில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் அதிரடிப்படையினர் உட்பட இராணுவ பொலிஸ் புலனாய்வாளர்கள், சாரணர்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்களின் பிரதி நிதிகளும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.09 ஜூன் 2014
வடக்கில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்!
08 ஜூன் 2014
யாழ். நெடுந்தீவில் நேற்றிரவு 32 இந்திய மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 32 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மீன்பிடிப்பதற்காக 8 படகுகளில் வந்த 32 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீரியல் வள துறையினரிடம் கேட்டபோது,
கைது செய்யப்பட்டவர்களை தற்போது கடற்பரப்பில் இருந்து காங்கேசன்துறைக்கு கடற்படையினர் கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
எனவே நண்பகல் அளவில் அனைவரையும் பொறுப்பேற்கவுள்ளதாகவும் யாழ். மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று சனிக்கிழமை மாலை தலைமன்னார் கடற்பரப்பில் 8 படகுகளில் வந்த 42பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேற்று முன்தினம் எல்லை தாண்டிச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 12பேர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
07 ஜூன் 2014
பாம்பு பெண் மருத்துவமனையில்!
தன் வசம் நாக பாம்பு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த பாம்பு பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன (டிலானி) என்பவர் பிரசவத்திற்கான அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவு நேர நடனப் பெண்ணாகப் பணியாற்றியுள்ளார்.
இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண் தங்கியிருந்த அநுராதபுரம் வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
பொலிஸ் அனுமதி இன்றி எவரும் இவர் தங்கியிருந்த அறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இவர் சிறிது காலம் சுல்த்தான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.யாழ்,பல்கலைகழக மாணவியின் சங்கிலியறுப்பு!
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கல்வி பயலும் மாணவியொருவரின் சங்கிலியை திருடர்கள் அறுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மாணவியின் துவிச்சக்கர வண்டியுடன் சிக்கியதால், அதனை போட்டுவிட்டு ஓடித்தப்பிவிட்டனர்.
கொக்குவில் பிரம்படி வீதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது. மாணவி சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் பின்பக்கமாக வந்தவர்கள் சங்கிலியை அறுத்துள்ளனர். மாணவியும் சங்கிலியை பிடித்துவிட்டார். இதனால் சங்கிலியின் ஒரு பகுதி மாணவியிடம் போக எஞ்சியது திருடர்களின் கைக்கு போனது. இந்த இழுபறியில் திருடர்களின் மோட்டார் சைக்கிளிலும் மாணவியின் துவிச்சக்கரவண்டியும் சிக்கிக் கொண்டன. வேறு வழியில்லாமல் களவாணிகள் இருவரும் மோட்டார்சைக்கிளை போட்டுவிட்டு ஓடித்தப்பிவிட்டனர். விடயம் காவல்த்துறைக்கு அறிவிக்கப்பட்டது.
அவர்கள் மோட்டார் சைக்கிளை மீட்டு ஆய்வு செய்தபோது அது நல்லூரில் திருட்டுபோன மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்துள்ளது.
06 ஜூன் 2014
அச்சுறுத்தி மரணச் சான்றுகள் வழங்கப்படுகின்றன – கஜேந்திரன்!
வன்னி இறுதி யுத்தத்தின் பின்னர் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான காணாமல் போன இளைஞர் யுவதிகளுக்கு என்ன நடந்தது என்று கடந்த ஐந்து வருடங்களாக உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
அவ்வாறு உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த சிலர் முல்லைத்தீவில் அமைந்துள்ள நீதிமன்றிலே ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்கள். இவ்வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்ற நிலையில் காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும், சர்வதேசம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும், ஐந்து ஆணடுகள் ஆகியும் சர்வதேசம் இதில் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என்பதை வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேசம் உள்ளக விசாரணை, உள்ளக விசாரணை என சிறீலங்காவுக்குச் சந்தர்பங்களை வழங்கிக்கொண்டு இருக்கின்ற இச்சூழலில் சிறீலங்கா அரசாங்கம் தனது இராணுவ இயந்திரத்தினைப் பயன்படுத்தி , காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினரை அச்சுறுத்தி, அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குகின்ற செயற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றதே தவிர, காணாமல் போனோர் தொடர்பில் ஒரு நேர்மையான விசாரணையை நடத்தி காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய செயற்பாடுகளை இதுவரை சிறீலங்கா அரசாங்கம் செய்யவில்லை.
சர்வதேச அழுத்தத்திற்காக ஒரு ஆணைக்குழுவினை நியமித்துள்ளார்கள். அக்காணாமல் போன ஆணைக்குழு கூட புலிகளால் தான் இவர்கள் காணாமல் போனார்கள் என்ற உண்மைக்குப் புறப்பான வாக்கு மூலங்களை உறவினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்களே தவிர, உண்மையில் காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் இருந்து உண்மையான கருத்துக்களை அறிந்து, சரணடைந்தவர்களை எந்த இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்களோ அவர்களை இனம்கண்டு அல்லது கடத்தலுடன் தொடர்புடையவர்களை இனம் கண்டு அவர்களுக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய எந்த முயற்சிகளிலும் ஈடுபடுவதாக இதுவரை இல்லை.
05 ஜூன் 2014
கத்திக்குத்துக்கு இலக்காகி கணவன் - மனைவி காயம்!
கச்சாய் தெற்கில் இன்று இடம்பெற்ற திருட்டு முயற்சி ஒன்றின் போது முதியவர்களான கணவன் - மனைவி ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகினர். இன்று இரவு 8 மணியளவில் கச்சாய் தெற்குப் பகுதியில் கத்திகள், பொல்லுகள் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீடொன்றுக்குள் புகுந்து திருட முற்பட்டபோது வீட்டில் உள்ளவர்கள் கூக்குரலிடவே வீட்டில் இருந்த கணவன் - மனைவி ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் அம்பலவாணர் வேலுப்பிள்ளை (வயது 71) அவரது மனைவியான வேலுப்பிள்ளை காசிப்பிள்ளை (வயது 63) ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முல்லையில் போராட்டத்தில் காணாமற் போனோரின் உறவுகள்!
புலனாய்வாளர்கள், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் காணாமல்போரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகத் திரண்டு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர். இன்று காலை 8 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வந்தவர்கள் முள்ளிவளை மற்றும் கேப்பாபிலவுப் பகுதிகளில் இடைமறிக்கப்பட்டனர். மாவட்டச் செயலகதை வந்தடைந்தவர்களையும் பஸ்ஸிலிருந்து இறங்கவிடாது சிலர் தடுத்ததுடன் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர். இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் உறவுகள் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண உறுப்பினர்களான து.ரவிகாரன், அன்ரனி ஜெகநாதன், மேரி கமலா குணசீலன், அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.04 ஜூன் 2014
இந்தியரை நம்பக்கூடாது என பொங்கினாராம் மகிந்த!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச சந்திப்பு பற்றி சிங்களப் பத்திரிகைகள், இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியை ஜூனியர் விகடன் சுட்டிக்காட்டியுள்ளது. அதில், மோடியை சந்தித்து விட்டு இலங்கை திரும்பிய ராஜபக்ச வெறுப்பின் உச்சத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.ஏதோ என்னை நட்பு ரீதியாகத்தான் அழைத்தார் என்று நினைத்தேன். ஆனால், அவர் என்னை மரியாதையாக நடத்தவில்லை.இதற்கு முன்னால் இருந்த ஆட்சியாளர்கள் எவ்வளவோ பரவாயில்லை.
முதல் சந்திப்பிலேயே நம்மை இப்படி நடத்துகிறார் என்றால், ஒரு வருடத்தில் நம்மை இருக்கும் இடம் தெரியாமல் இவர் செய்துவிடுவார்.எந்த இந்தியரையும் நாம் நம்பக் கூடாது என்று பொருமினாராம் ராஜபக்ச என்று சொல்லப்பட்டு உள்ளது.இவ்வாறு ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
03 ஜூன் 2014
விசாரணைக் குழுவின் தலைவி நவிபிள்ளை அம்மையார்!
சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணையின் தலைமைப் பொறுப்பை முன்னாள் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் கோபி அற்றா அனான் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொபி அனான் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளராக இருந்தவர். ஆனால் இந்த விசாரணையின் அறிக்கை, அவருக்கு கீழ் பணியாற்றிய மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டும்.
எனவே இதனை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளை இந்த விசாரணைக்கான தலைமையை, தற்போதையை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே ஏற்றுக் கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இன்னும் ஓரிரு மாதங்களில் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஏற்கனவே சிறிலங்காவுக்கு எதிராக விசாரணை நடத்தி இருந்த மர்சூகி தருமான் அந்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
இந்த நிலையில் நவநீதம்பிள்ளையே சிறிலங்காவுக்கு எதிரன விசாரணை குழுவுக்கு தலைமை வகிப்பார் என்று கூறப்படுகிறது.
02 ஜூன் 2014
முன்னாள் போராளி கைது!
சட்டவிரோத ஆயுதங்களை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளி ஒருவர் வாழைச்சேனைப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி, குளத்துமடுவைச் சேர்ந்தவரான கண்ணமுத்து யோகராசா வயது (48 ) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். வாழைச்சேனை பொலிஸ் நிலையப் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்படி நபர் அதே இடத்தில் உள்ள யானைவழங்கி எனும் வயல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கட்டுத்துவக்கு மற்றும் கைக்குண்டு ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் சில ஆயுதங்களை தான் மறைத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
01 ஜூன் 2014
மோடிக்கு வாழ்த்து தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பேரணி!
இந்தியப் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் நரேந்திரமோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து, இந்து சமயப் பேரவை மற்றும் இலங்கை இந்திய இந்து மக்கள் நட்புறவுக் கழகம் என்பன இணைந்து சிறப்பு பூசையை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தின. முன்னதாக நல்லூர் ஆலய முன்றலில் இருந்து இந்து சமயப் பேரவையின் வளாகம் வரை பேரணி நடத்தப்பட்டது. இலங்கை மக்களுக்கு நல் அமைதி வேண்டியும் , இலங்கை இந்திய நாடுகளிடையே பரஸ்பர உறவை மேம்படுத்த வேண்டியும் இந்த சிறப்பு பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.நன்றி:மலரும்.கொம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









