பக்கங்கள்

17 ஜூலை 2012

ஆர்ப்பாட்டம் நடத்த பருத்தித்துறை நீதவான் அனுமதி! யாழ். நீதவான் கணேசராசாவுக்கு செருப்படி!

யாழ்.நெல்லியடி பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவை வழங்குமாறு பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த பருத்தித்துறை மாவட்ட நீதிபதி சிறிநிதி நந்தசேகரம் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிட்டார். சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி படுகொலை செய்யப்பட்டமை, தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கின்றமை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாளை நெல்லியடி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு தடை உத்தரவு வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றில் மனு செய்திருந்தனர். யாழ் நகரில் காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு வழங்கிய யாழ். நீதிபதி கணேசராசாவுக்கு இத்தீர்ப்பு கடும் செருப்படியாக அமைந்துள்ளது. சிங்கள பேரினவாதிகளின் கைக்கூலியாக விளங்கும் அநீதவான் கணேசராசா ஜனநாயக போராட்டத்திற்கு தடை விதித்து தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு துணைபோன அநீதியான செயலை செய்திருந்தார். நாளை நெல்லியடி பேரூந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் இதற்கு தடையுத்தரவை பெற பொலிஸார் கடும்பிரயத்தனம் எடுத்திருந்தனர். எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் இன்று மாலை தமது பக்க நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளனர். இதற்கமைய, தடையுத்தரவை வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ள பருத்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரம், குறித்த ஆர்பாட்டத்தை தடுக்காத வகையில் உரிய பாதுகாப்பை வழங்குமாறும் நீதிபதி பொலிஸாருக்கு சாட்டையடி கொடுத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டதற்கிணங்க போராட்டம் நாளை நெல்லியடியில் இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.