பக்கங்கள்

20 ஜூலை 2012

வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணை!

வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் விஜயசுந்தரமும் கொழும்பு நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசேட குற்றப்புலனாய்வுத் துறையினரால் பல மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார் இதன்போது இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை எடுத்து பிரசுரித்தல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை பிரசுரித்தல் தொடர்பாக கேள்வியெழுப்பபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிரான தாயகத்தின் கள யதார்த்தத்தை வெளியிட்டுவரும் இணைய ஊடகங்களுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையில் உள்ளூர் ஊடகங்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரைக் கொண்டு அச்சுறுத்தி வருகின்றது. கடந்த 11ம் திகதி யாழிலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருந்தது. இதேவேளை இவ்வாறான விசாரணைகளின் மூலம் அரசாங்கம் ஊடகங்களின் வாயை நிரந்தமாக மூடுவதற்கு முயற்சித்து வருகின்றமை புலனாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.