பக்கங்கள்

15 ஜூலை 2012

இலங்கையர்களை திருப்பி அனுப்ப சுவீடன் நடவடிக்கை!

யுத்தப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த சுவீடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் இலங்கையில் கடந்த 30 வருடகாலமாக ஏற்பட்ட யுத்தத்தினால் தமது உடமைகளை இழந்து தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக புலம்பெயர் நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களாக தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும் இலங்கையில் தற்போது சமாதானம் நிலவுவதாக அரசினால் கூறப்பட்டு வரும் நிலையில், சுவீடனில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ள சகல இலங்கையர்களையும் நாடு கடத்த இந் நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நிலைமைகள் சுமூகமடைந்துள்ளதாக சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது. சுவீடனில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்களுக்கு நாடுகடத்துதல் தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை நாட்டில் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியான நிலையில் இருப்பதனால் தற்போது இலங்கையில் இருந்து பெருமளவிலான மக்கள் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடல்வழியாக தப்பிச் செல்கின்றனர். எனினும் சுவீடன் போன்ற நாடுகள் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் போது இங்கு வரும் அவர்கள் பாதுகாப்பு ரீதியில் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர். இதனால் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல அமைப்புக்களும் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது என சர்வதேச நாடுகளிடம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.