பக்கங்கள்

10 ஜூலை 2012

அம்மா ஏன் பதவியேற்றார்?மகள் அதிரடி!

அப்பாவின் இழப்பையடுத்து இலங்கை அரசால் இலவசமாக வழங்கப்பட்ட வீடு, வாகனத்தை தக்க வைக்கவே அம்மா ஜனாதிபதி இணைப்பு செயலாளராக அவதாரம் எடுத்ததாக மகளான ஹிருனிகா பிரேமச்சந்திர கருத்துத் தெரிவித்துள்ளார். முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த தமது தந்தையின் இழப்பு ஏற்பட்டு பல மாதங்கள் கழிந்துள்ள நிலையில் அரசிடம் ஒப்படைக்க வேண்டிய உத்தியோகபூர்வ வீடு மற்றும் வாகனம் என்பனவற்றை தொடர்ந்தும் தக்க வைக்கும் நோக்கில் தமது தாய் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார். இவருடைய கருத்தை பிரசுரித்துள்ள கொழும்பு டெலிகிராப் இணையம், “இந்த உத்தியோகபூர்வ வீடு, வாகனம் என்பவை தொடர்ந்தும் எமது பாவனைக்கு தேவைப்படுவதன் காரணமாக, தனது தாய் ஜனாதிபதியைச் சந்தித்து இது குறித்து கோரிக்கையை முன்வைத்தார். அதன் போது எனது அம்மாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே குறித்த பதவியை அம்மா ஏற்றுக் கொண்டார்” என ஹிருனிகா கூறியுள்ளார். இறப்புக்கு முதல் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர ஜனாதிபதி ஆலோசகராக செயற்பட்டதால் கொழும்பு 07 கெப்படிபொல மாவத்தையில் சமிட் குடியிருப்பில் உத்தியோகபூர்வ வீடும் வாகனமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.