பக்கங்கள்

22 அக்டோபர் 2010

புலிகளிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை தமிழர்களிடம் ஒப்படைக்கவும்!

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் வசமிருந்த 110 கிலோகிராம் தங்கத்தைத் தாம் கைப்பற்றியுள்ளதாக அரசு அறிவித்துள்ளதோடு, அத்தங்கத்தை இலங்கை மத்திய வங்கியிடம் கையளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தத் தங்கத்தின் சொந்தக்காரர்கள் தமிழ்ப் பொதுமக்களே எனக் கூறியுள்ள பொதுமக்கள் உரிமை அமைப்பொன்று, அத்தங்கத்தை அதன் சொந்தக்காரர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
மேற்படி தங்கத்தின் பெறுமதி 490 மில்லியன் ரூபா என்று அரசின் பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன கடந்த புதன்கிழமை அன்று பாராளுமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த தங்கத்தின் சொந்தக்காரர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பது அரசாங்கத்தின் கடமை என்று மனோ கணேசன் பி.பி.சி இடம் தெரிவித்துள்ளார். புலிகளிடம்தான் அத்தங்கம் இருந்தது என்றாலும் அதன் உண்மையான உரிமையாளர்கள் பொதுமக்களே. இத்தங்கத்தை அடகு வைத்ததற்கான ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றிய இராணுவம் அதை அரச ஊடகங்களில் காட்சிப்படுத்தியமையையும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.