பக்கங்கள்

07 அக்டோபர் 2010

கொடிய போரின் பலாபலன்; கிளிநொச்சியில் நாளொன்றிற்கு 4 பேர் தற்கொலை!

கிளிநொச்சியில் யுத்தத்தின் பின்னர் தற்கொலைகள் அதிகரித்துள்ளன எனவும் நாளொன்றுக்கு 4பேர் என்ற விகிதத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. எனவும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் உள நல மருத்துவர் மா. ஜெயராசா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கிளிநொச்சியில் இவ்வாறான நிலைமைக்கு பிரதான காரணம் சமூகப்பின்னனியே ஆகும். குறிப்பாக விதவைகள் கணவன்மார் காணாமல் போன நிலையில் வாழும் பெண்களே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இதே போல் யுத்தத்தினால் மனநோயாளியானோர் மற்றும் பாடசாலை செல்லாத சிறார்களின் எண்ணிக்கையும் மாவட்டத்தில் கணிசமாகவுள்ளது. யுத்தத்திற்கு முன்னர் 300 பேராக இருந்த மனநோயாளிகளில் தற்போது 100 பேர் வரையில் காணமல் போயுள்ளனர்.
தற்போது எஞ்சியவர்களுடன் 500 மனநோயாளிகள் மாவட்டத்தில் உள்ளனர். இவர்களில் பலரிடம் பேசிய போது இவர்களுக்கு நெருக்கமான யாராவது ஒருவர் யுத்தத்தில் காணாமல் போயுள்ளதோடு இடப்பெயர்வுகளே காரணமாயிருப்பது தெரியவருகின்றது.
மேலும் கிளி. வைத்தியசாலையில் மனநோயாளிகளுக்கான விடுதி 2 ம் மாடியிலேயே உள்ளது. இதனால் பலர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்னர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.