பக்கங்கள்

29 அக்டோபர் 2010

தமிழர் மீது இனத்துவேசம்,பிரிட்டன் பிரஜை கைது!

இலங்கைத் தமிழர் ஒருவர் மீது இனத் துவேசத்தை கக்கிய பிரித்தானிய பிரஜை ஒருவர் வடமேற்கு லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். Sefton Council ஊழியரான Christina Crispin (வயது 47) என்பவரே Merseyside நகரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
பொலிஸ் விசாரணை முடிவடையும் வரை இவர் கவுன்சிலால் வேலையில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 11 ஆம் திகதி South Sefton நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜராக்க உள்ளனர்.
Supersaver என்கிற கடையின் Bootle நகரத்தில் உள்ள கிளை ஒன்றுக்கு இவர் கடந்த 16 ஆம் திகதி சென்றிருக்கின்றார். ஒரு கான் Lager ரக பியரை வாங்கி இருக்கின்றார். ஆனால் அதை தவறுதலாக கடையின் தரையில் போட்டு விட்டார்.
அக்கடையில் சிப்பந்தியாக கடமையாற்றும் இலங்கைத் தமிழர் ஒருவர் எதிர்காலத்தில் கூடை ஒன்றை பயன்படுத்தும்படி அப்போது ஆலோசனை கூறி இருக்கின்றார். அப்போதே இப்பெண் இனத் துவேசத்தை கக்கி இருக்கின்றார். இவரின் அட்டகாசங்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகி உள்ளன.
பொலிஸாருக்கு கடை முகாமையாளர் உடனடியாக தொலைபேசி மூலம் அறிவித்தார். இதையடுத்தே இப்பெண்ணுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.