பக்கங்கள்

30 அக்டோபர் 2010

தனித்தமிழ் மாவட்டம் இருக்கக் கூடாதென்பதில் அரசு குறி!

இலங்கை அரசாங்கம் எந்தவொரு மாவட்டமும் தனித் தமிழ் மாவட்டமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. இதற்கேற்ப திட்டமிடப்பட்ட வகையில் இராணுவக் குடியிருப்புக்களை நிறுவி வருகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் தொகுதிக்கான செயற்குழு அங்குரார்ப்பண நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே அந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தக் கருத்தினை தெரிவித்தார்.
யாழ்ப்பாண புகையிரதநிலையத்தில் நூற்றைம்பது சிங்கள மக்கள் கொண்டுவந்து விடப்பட்டுள்ளனர். இவர்கள் வரமுன்னரே புகையிரத நிலையத்தில் அவர்களுக்கான மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுவிட்டன.
அரசாங்கம் உலகத்தில் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, தான் நினைத்ததை செய்து முடிக்கவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் தமிழ் மண்ணையும் மக்களையும் காக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமே சுமத்தப்பட்டுள்ளது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.