பக்கங்கள்

21 அக்டோபர் 2010

இரண்டு சிம் அட்டைகளுக்கு மேல் எவரும் வைத்திருக்க முடியாது - பாதுகாப்பு அமைச்சு.

ஒரு தனி நபரொருவர் வைத்திருக்கக் கூடிய சிம் கார்ட்டுகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும் இலங்கை தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கேற்ப இனிவரும் காலங்களில் பெரும்பாலும் ஒருவருக்கு இரண்டு சிம் கார்ட்டுகளை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் பயன்படுத்தப்படும் சிம்கார்டுகள் அனைத் தும் அதன் உரிமையாளர்களின் பூரண விபரங்களுடன் பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய் யப்பட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
சர்வதேச அழைப்புக்களை சட்டவிரோதமாகப் பெற்று விநியோகிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் உண்மைக் காரணம் அதுவல்ல என்று தெரியவருகின்றது. அண்மையில் கிளிநொச்சியில் மாவீரர் தினத்திற்கு அழைப்பு விடுத்ததாகக் கூறிக் கைது செய்யப்பட்டவர் வைத்திருந்த சிம் கார்ட் தென்னிலங்கை முகவரியில் பதியப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.
அதுமாத்திரமன்றி அவர் இரண்டுக்கும் மேற்பட்ட சிம்கார்ட்களை வைத்திருந்தமை யும் விசாரணைகளின் போது தெரியவந்திருந்தது. எனவே புலிகளுடன் தொடர்புடைய அனைவரும் தத்தமது தொடர்புகளுக்கு ரகசிய இலக்கம் ஒன்றை பயன்படுத்தி வருவதாக அரசாங்கம் சந்தேகம் கொண்டுள்ளது.
ஏனெனில் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் முகவரியில் பதியப்படும் அனைத்து சிம்கார்ட்டுகளும் விசேட ஏற்பாட்டின் கீழ் அர சாங்கத்தால் கண்காணிக்கப்படுகின்றன. அப்படியிருக்கையில் சிலர் தென்னிலங்கை முக வரியைக் கொடுத்து பதிந்துள்ள சிம்கார்ட்டுக் களை வடக்கில் பயன்படுத்தி வருவதன் மூலம் அதனை அரசாங்கத்தால் கண்காணிக்க முடியாது போய்விடுகிறது. எனவே குறித்தஇரண்டு விடயங்களையும் கட்டுப்படுத்த வேண்டுமாயின் ஒருவருக்கு இரண்டு சிம்கார்ட்டுக்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பதுடன் ஒருவரின் பெயரில் பதிந்துள்ள சிம்கார்ட்டை இன்னொருவர் பயன்படுத்தினால் கடும் தண்டனை விதிப்பதன் மூலமும் சந்தேகத்துக்கிடமானவர்களை கண்காணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.