யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் கல்லூரி அதிபரின் திடீர் இடமாற்றத்தை ரத்துச் செய்யக்கோரி அக்கல்லூரி மாணவிகளால் பாடசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அத்துடன், தமது எதிர்ப்பினைத் தெரிவித்து மாணவிகள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்று, மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டம் தொடர்பாக மாணவிகள் கருத்து தெரிவிக்கையில், 'இந்த இடமாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீண்ட காலமாக எமது அதிபர் பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார். அவரின் சிறப்பான செயற்பாடே இவ்வாண்டு க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் எமது பாடசாலை முதலிடம் பெறுவதற்கு காரணம். இந்த இடமாற்றத்தை யாழ் வலயக் கல்வித் திணைக்களம் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யப்படாவிட்டால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறும்' என்றும் அவர்கள் தெரிவித்தனர். நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
13 ஜூன் 2012
வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்!
யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் கல்லூரி அதிபரின் திடீர் இடமாற்றத்தை ரத்துச் செய்யக்கோரி அக்கல்லூரி மாணவிகளால் பாடசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அத்துடன், தமது எதிர்ப்பினைத் தெரிவித்து மாணவிகள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்று, மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டம் தொடர்பாக மாணவிகள் கருத்து தெரிவிக்கையில், 'இந்த இடமாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீண்ட காலமாக எமது அதிபர் பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார். அவரின் சிறப்பான செயற்பாடே இவ்வாண்டு க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் எமது பாடசாலை முதலிடம் பெறுவதற்கு காரணம். இந்த இடமாற்றத்தை யாழ் வலயக் கல்வித் திணைக்களம் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யப்படாவிட்டால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறும்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.