பக்கங்கள்

20 ஜூன் 2012

நயினை நாகபூ­ஷணிஅம்மன் நேற்று கொடியேற்றம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா நேற்று நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்றைய கொடியேற்ற வைபவத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர். வடக்கின் பல பகுதிகளிலும் தீவுப் பகுதி மற்றும் வெளியூர்களில் இருந்தும் திரண்டு வந்திருந்த அடியார்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சிவஸ்ரீ பரமசாமிக் குருக்கள் முத்துச்சாமிக் குருக்கள் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து பூசை, அபிஷேகத்தை அடுத்து நாகபூஷணி அம்மன் திருவீதியுலா வந்தார். யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து நயினாதீவுக்கு விசேட போக்குவரத்துச் சேவையும் தனியார் மினி பஸ் சேவையும் இடம்பெற்றன. குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து 25 படகுகள் சேவையில் ஈடுபட்டிருந்தன. படகுக் கட்டணம் வழமைபோன்று 30 ரூபா அறவிடப்பட்டது. ஆனால் நாக விகாரைக்கு சொந்தமான படகில் தலைக்கு ரூபா ஐம்பது கட்டணமாக அறவீடுசெய்யப்பட்டது. இதேவேளை வழமைபோன்று அடியார்களுக்கு அமுதசுரபி அன்னதான சபையினர் சிறப்பான முறையில் அமுதளித்தனர். ஆலயசுற்றாடலில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.