பக்கங்கள்

19 ஜூன் 2012

தயவுசெய்து விட்டுவிடுங்கள்; வேம்படியின் புதிய அதிபர் மன்றாட்டம்!

பதவியேற்க விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார் யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் திருமதி வேணுகா சண்முகரட்ணம். அவர் நேற்று பாடசாலைக்குச் சென்றார். அப்போது அங்கு அதிபரின் அறை இழுத்துப் பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து விவரம் கேட்டபோது "பதில் அதிபர் திருமதி ராஜினிமுத்துக்குமாரன் வலயத்தில் நடைபெறுகின்ற அதிபர் கூட்டத்துக்கு சென்று விட்டார்'' என்று கூறி, ரேணுகா திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் ஏன் வம்பு? எனத் திரும்பி வந்துவிட்டார் புதிய அதிபர். பொதுச் சேவை ஆணைக்குழு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் வேம்படி மகளிர் கல்லூரிக்கான புதிய அதிபராக திருமதி வேணுகா சண்முகரட்ணத்தை நியமித்து நியமனக் கடிதத்தையும் வழங்கியிருந்தது. புதிய அதிபரை கடமைப் பொறுப்புகளை ஏற்க விடவில்லை என்ற விடயத்தை அறிவதற்காக கல்லூரி அதிபர் அலுவலகத்துக்கு நேரில் சென்ற "உதயன்' செய்தியாளரும் பதில் அதிபரால் திருப்பி அனுப்பப்பட்டார். "கல்வி அமைச்சின் அனுமதிக் கடிதத்துடனேயே ஊடகங்கள் பாடசாலைக்குள் வரமுடியும். முதலில் அந்த அனுமதியுடன் வாருங்கள்'' என்று அவர் கூறினார். இது தொடர்பில் புதிய அதிபர் திருமதி வேணுகா சண்முகரட்ணத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது "இந்தப் பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம், அப்படியே விட்டுவிடுங்கள். அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார். பிரச்சினை பெரிதானால் அது என்ர உயிருக்குக் கூட ஆபத்தாக மாறிவிடும்'' என்றார். வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் பா.விக்னேஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது "வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் விடயத்தில் எனக்கு எதுவும் தெரியாது. நடப்பதைக் கண்டு கொள்ளவேண்டியது தான்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.