பக்கங்கள்

10 ஜூன் 2012

கிழக்கு முஸ்லீம் மக்கள் கக்கீம் முதல்வராவதை விரும்பவில்லை!

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஹக்கீம் போட்டியிடுவதனை பிரதேச முஸ்லிம்கள் விரும்பவில்லைகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் போட்டியிடுவதனை மாகாண முஸ்லிம்கள் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கிழக்கு மாகாணசபைத் சேர்ந்த ஒருவரே போட்டியிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் எதிர்வரும் 16ம் திகதி பொலனறுவையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னரே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது வேட்பாளர்களை தீர்மானிக்க உள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேர்தலில் களமிறங்க நீதி அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ஹக்கீம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீம் போட்டியிடுவதனை கட்சியைச் சேர்ந்த சிலரே எதிர்த்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.