பக்கங்கள்

06 ஜூன் 2012

பிள்ளையார் இருந்த இடத்தில் புத்தரைவைத்த சிங்களப்படைகள்!

கிளிநொச்சியில் உள்ள கிருஷ்ணபுரம் என்ற பகுதியில் இருந்த பிள்ளையாரை பிறிதொரு இடத்துக்கு மாற்றி விட்டு, அப் பகுதியில் புத்தவிகாரை ஒன்றை அமைத்துள்ளனர் இராணுவத்தினர். இராணுவத்தினரின் இச் செயற்பாட்டுக்குப் பிரதேச மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். புலிகள் காலத்தில் நவம் அறிவுக்கூடம் அமைந்திருந்த இடத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 20ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்து வைத்துள்ள படையினர் அதற்கு முன்பாகவுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்துள்ளனர். இதன் பின்னர் வீதியை பார்த்தவாறு அமைந்திருந்த ஆலயத்தை மறுபுறமாக மாற்றியமைத் துவிட்டு, அந்த இடத்தில் புத்தர் சிலை வைத்து சிறிய விகாரை ஒன்றினையும் அமைத்துள்ளனர். இந்த இடத்தில் மிக நீண்டகாலமாக இப்பகுதி மக்களால் வழிபடப்பட்டுவந்த ஆலயத்தை மக்களின் அனுமதியில்லாமல் உடைத்தது, மாற்றியமைத்தது மட்டுமல்லாமல் அந்த இடத்தில் புத்தர் சிலை வைத்து விகாரையும் அமைத்துள்ளனர். மேலும் பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலப்பகுதி படையினரால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது மக்கள் வழிபாட்டிடத்தையும் மாற்றியமைத்துள்ளமை தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதேவேளை இந்து ஆலயம் அகற்றப்பட்டமை தொடர்பில் இந்து அமைப்புக்களின் ஒன்றியம் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.