பக்கங்கள்

10 ஜூன் 2012

மக்கள் காணிகளை அபகரித்து மண்டைதீவில் படை முகாம் விஸ்தரிப்பு!

யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள மண்டைதீவு பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபரித்து கடற்படை தளத்தினை விரிவு படுத்தும் நடவடிக்கையில் சிறீலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.மண்டைதீவு கடற்படை தளத்தினை அண்மிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக்கொள்ளும் நோகில் அவற்றிற்கு உதவுமாறு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளை சிறீலங்கா கடற்படையினர் நாடியுள்ளதாக யாழில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் நிலைகொண்டுள்ள படையினர் அந்த காணிகளை படையினருக்கு சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் குறிப்பாக அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து தற்போது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து உறவினர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் மற்றும் பன்னாடுகளிலும் வாழ்ந்துவருகின்றார்கள் இவ்வாறான மக்களின் விபரங்களை திரட்டிய படையினர் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். மண்டைதீவு பகுதியின் 1 ஆம் வட்டாரத்தில் அம்மன்கோவிலுக்கு கிழக்காக உள்ள 300 ஏக்கருக்கும் அதிகமான வளம்தரும் நிலத்தினை சிறீலங்கா கடற்படையினர் அபகரித்துள்ளார்கள். இவ்வாறு அபகரித்து பாரிய கடற்படை தளத்தினை விரிவுபடுத்தியுள்ள நிலையில் மேலும் 50 மீற்றர் சுற்றுவட்ட நிலத்தினை கையகபடுத்த அரச இயங்திரங்களை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில் தற்போது பாரியளவிலான கடற்படை தளமும் பல ஆயிரம் படையினர் தங்ககூடிய வகையில் கட்டடங்களும் அவர்களுக்கான விடுதிகளம் மற்றும் உலங்கு வானூர்தி தளமும் கடற்படை தளத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது,வடக்கில் படைக்குறைப்பினை மேற்கொள்வதாக பன்னாடுகளுக்கு கூறிக்கொள்ளும் சிறீலங்கா அரசு தமிழ்மக்களின் காணிகளை கையகப்படுத்தி படைமுகாம்களை அமைத்து மேலும் படையினரின எண்ணிக்கையினை அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது,யாழ்ப்பாணத்தின் தீவக பகுதிகளில் மாத்திரம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கடற்படையினர் நிலைகொண்டுள்ளார்கள் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்றவகையில் படையினரின் தங்கு விடுதிகளும் இந்த மண்டைதீவு கடற்படை முகாமில் அமைக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.