சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை கம்பவாரிதி ஜெயராஜ் கேலிச் சித்திரமாகப் பயன்படுத்தியுள்ளமைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அவர் தனது செயலுக்காகச் சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். தனது இணையத்திலிருந்து குறித்த படத்தை நீக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சைவ மகாசபை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது. கம்பவாரிதி ஜெயராஜ் சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அம்மை அப்பர்களான சிவன் - உமை இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை இலங்கை ஆட்சியாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு ஒப்பிட்டுக் கேலிச்சித்திரமாக்கித் தனது கட்டுரையொன்றில் பயன்படுத்தியுள்ளார். இந்தச் செயல் சைவத் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தியுள்ளது. இதை அவர் புரிந்து கொண்டு சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், தனது இணையத்தளத்திலிருந்து குறித்த படத்தை அகற்ற வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
27 ஆகஸ்ட் 2017
கம்பவாரிதி ஜெயராஜின் செயலுக்கு கண்டனம்!
சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை கம்பவாரிதி ஜெயராஜ் கேலிச் சித்திரமாகப் பயன்படுத்தியுள்ளமைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அவர் தனது செயலுக்காகச் சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். தனது இணையத்திலிருந்து குறித்த படத்தை நீக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சைவ மகாசபை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது. கம்பவாரிதி ஜெயராஜ் சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அம்மை அப்பர்களான சிவன் - உமை இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை இலங்கை ஆட்சியாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு ஒப்பிட்டுக் கேலிச்சித்திரமாக்கித் தனது கட்டுரையொன்றில் பயன்படுத்தியுள்ளார். இந்தச் செயல் சைவத் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தியுள்ளது. இதை அவர் புரிந்து கொண்டு சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், தனது இணையத்தளத்திலிருந்து குறித்த படத்தை அகற்ற வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.