பக்கங்கள்

31 ஜூலை 2013

சுயேச்சை குழுவாக போட்டியிடும் எண்ணம் எனக்கு கிடையாது!

வித்தியாதரன் 
வடமாகாணசபை தேர்தலில் சுயேச்சைக்குழுவாக போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்றும் நான் சுயேச்சைக்குழுவாக போட்டியிடுவதற்கு முயற்சி செய்வதாக வெளிவந்த செய்திகளில் எந்த வித உண்மையும் கிடையாது என ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தினக்கதிர் இணையத்திற்கு தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்காததால் வித்தியாதரன் சுயேச்சை குழுவாக போட்டியிட உள்ளார் என சில அநாமதேய இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இது தொடர்பான உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக வித்தியாதரனுடன் நாம் நேரடியாக தொடர்பு கொண்ட போது அவ்வாறான செய்திகளை வித்தியாதரன் அடியோடு மறுத்தார். நான் பதவி ஆசை பிடித்தவன் அல்ல, பதவி ஆசைக்காக தமிழ் மக்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன் என்றும் வித்தியாதரன் தெரிவித்தார். சுயேச்சையாக போட்டியிடுவதற்கோ அல்லது தமிழரசுக்கட்சி தவிர்ந்த வேறு அரசியல் கட்சி ஒன்றில் போட்டியிடுவதற்கோ ஒரு போதும் முயற்சிக்கவில்லை. அவ்வாறு வெளிவந்த செய்திகள் அனைத்தும் பொய் என வித்தியாதரன் தெரிவித்தார். அதேபோன்று யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் செயலாளர் ப.தர்சானந் சுயேச்சைக்குழுவில் போட்டியிடப்போவதாக வெளிவந்த செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை என தர்சானந் தெரிவித்துள்ளார். நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட இளைஞரணித்தலைவர் பா.கஜதீபனின் தனிப்பட்ட வெற்றிக்காகவும் உழைக்கப்போவதாகவும் தர்சானந் தெரிவித்துள்ளார். பதவி மோகம் கொண்டு சுயேச்சையாக போட்டியிடப்போவதாக சில தீய சக்திகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் தர்சானந் தெரிவித்துள்ளார்.இவ்வாறு தினக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.