பக்கங்கள்

28 ஜூலை 2013

வாக்குகளை சிதறடிக்க தயா மாஸ்டரை சுயேட்சையாக களமிறக்க சதி!

சுதந்திரக்கட்சியில் வடக்கு தேர்தலில் குதிக்கப் போவதாக அறிவிப்பை விடுத்திருந்த விடுதலைப் புலிகளது பேச்சாளர் தயாமாஸ்டரையும் மஹிந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளதா? அல்லது மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களின் அரசியல் வியூகமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இன்றிரவு வெளியான சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் பட்டியலில் தயா மாஸ்டரது பெயர் இருந்திருக்கவில்லை. இதனையடுத்து தேர்தலில் தனித்து சுயேட்சையாகப் போட்டியிட தயா மாஸ்டர் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகின்ற போதும் அதனை தயா மாஸ்டர் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை சுதந்திரக்கட்சி வெளியிட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் நாளைய தினம் இவர்கள் வேட்பு மனுவில் ஒப்பமிடவுள்ளதாக அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளா அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இதேவேளை சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு றேமிடியஸ், சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ். பொன்னம்பலம், நெல்லியடி வணிகர் கழகத்தலைவர் அகிலதாஸ், யாழ் மாநர சபை உறுப்பினர் அகமட் சுபியான், எஸ்.செந்தூரன், எஸ். கதிரவேல் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தயாமாஸ்டரை சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் களமிறக்கினால் தெற்கில் கடும்போக்காளர்களிடையே ஏற்படும் அதிர்ப்தி ஒரு புறமிருக்க தேர்தலில் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிக்கும் இலக்கையே கொண்டிருக்கும் மகிந்த அரசாங்கத்தின் அரசியல் வியூகத்தில் தயாமாஸ்டர் தலைமையிலான முன்னாள் போராளிகளை தனித்து சுயேட்சையாக களமிறக்குவதனையும் அரசாங்கம் விரும்புவதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.